கண்டெய்னர் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து – உயிரிழப்பு 50ஆக உயர்வு

வங்காளதேசத்தில் கண்டெய்னர் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50ஆக உயர்ந்தது. கண்டெய்னர் கிடங்கில் உள்ள ரசாயண பெட்டகங்களில் பற்றிய தீ நாலாபுறமும் பரவி கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது. தீயில் சிக்கியவர்களை மீட்கச் சென்ற 5 தீயணைப்பு வீரர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டவர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். 400-க்கும் மேற்பட்டோர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், ரசாயண பெட்டகங்களில் கொளுந்துவிட்டும் எரியும் தீயை கட்டுக்குள் கொண்டு வர வீரர்கள் போராடி வருகின்றனர். Source link

பொது மக்கள் மூன்று பேர் பலி| Dinamalar

பிலடெல்பியா: அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தின் மிகப்பெரிய நகரம் பிலடெல்பியா. இங்கு மதுக்கூடங்கள், ஹோட்டல்கள், பொழுது போக்கு திடல்கள் உள்ளிட்டவை அமைந்துள்ள பரபரப்பான இடத்தில், வார இறுதி நாளான நேற்று முன் தினம் மாலை ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு மர்ம கும்பல், பொதுமக்கள் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு விட்டு தப்பியது. ஒரு பெண் உட்பட மூன்று பேர் அதே இடத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்தனர். காயம் அடைந்த 11 பேர் மீட்கப்பட்டு … Read more

வங்கதேசம் | கன்டெய்னர் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 49 பேர் உயிரிழப்பு

டாகா: வங்கதேசத்தின் தென்கிழக்கு பகுதியில் சிட்டகாங் நகருக்கு அருகே உள்ள பிஎம் ரசாயன கன்டெய்னர் கிடங்கில் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு திடீரென தீப்பற்றியது. பின்னர் கன்டெய்னர் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்ததில் தீ மளமளவென பரவி உள்ளது. இதுகுறித்து சட்டகிராம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை (சிஎம்சிஎச்) புறக்காவல் நிலைய துணை ஆய்வாளர் நூருல் ஆலம் கூறும்போது, “பிஎம் கன்டெய்னர் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, தீயணைப்புத் துறையினர் 19 வாகனங்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து … Read more

அமெரிக்காவில் இரு வேறு நகரங்களில் மர்ம கும்பல் துப்பாக்கிச் சூடு – 7 பேர் படுகொலை

அமெரிக்காவில் இரு வேறு நகரங்களில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் கொல்லப்பட்டனர். டென்னஸ்ஸி மாகாணத்தில் இரவுநேர கேளிக்கை விடுதி அருகே மர்ம கும்பல் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் சிறுவன் உள்பட 3 பேர் கொல்லப்பட்டனர். 14 பேர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பிக்க தலைதெறிக்க ஓடிய மக்கள் வாகனங்களில் அடிபட்டு படுகாயமடைந்தனர். அதேபோல் பென்சிலிவேனியா மாகாணத்தில் பிலடெல்பியா நகரில், இரவுநேர பஜாரில் புகுந்த மர்ம கும்பல் துப்பாக்கியால் சுட்டதில் 4 … Read more

மத்திய அரசுக்கு கத்தார் கண்டனம்| Dinamalar

தோஹா : பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஒருவர் முஸ்லிம் மதத்தைப் பற்றி அவதுாறாக கருத்து தெரிவித்ததற்காக, கட்சியில் இருந்து ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், மேற்காசியாவில் உள்ள முஸ்லிம் நாடான கத்தார் வெளியிட்டுள்ள அறிவிப்பு:இந்தியாவில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த சிலர், முஸ்லிம் மதம் பற்றி அவதுாறாக கருத்து தெரிவித்துள்ளனர். இதற்காக, இந்திய துாதரை நேரில் அழைத்து கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தோஹா : பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஒருவர் முஸ்லிம் மதத்தைப் பற்றி அவதுாறாக கருத்து தெரிவித்ததற்காக, … Read more

144 தடை உத்தரவு; இஸ்லாமாபாதில் அமல்| Dinamalar

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக வதந்தி பரவியதை அடுத்து,இஸ்லாமாபாதில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பார்லிமென்டில் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை ஓட்டெடுப்பில் தோல்வி அடைந்ததை அடுத்து, முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பதவி இழந்தார். புதிய பிரதமராக, பாக்., முஸ்லிம் லீக் நவாஸ் பிரிவை சேர்ந்த ஷெபாஸ் ஷெரீப் பதவி ஏற்றார். இந்நிலையில், இம்ரான் கானை படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக அந்நாட்டு ராணுவம் … Read more

இலங்கையின் 21வது சட்ட திருத்தம் அமைச்சரவை இன்று ஒப்புதல்?| Dinamalar

கொழும்பு, : இலங்கையில் அதிபரின் அதிகாரங்களை குறைத்து, பார்லிமென்டுக்கு அதிக அதிகாரம் அளிக்கும் 21வது சட்ட திருத்தம், அமைச்சரவையின் ஒப்புதலுக்கு இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.நம் அண்டை நாடான இலங்கையில் அதிபருக்கு வானளாவிய அதிகாரங்கள் கொடுக்கப்பட்டதால் தான், நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி ஏற்றபோது, பார்லிமென்டுக்கு அதிகாரம் அளிக்கும் 19வது சட்ட திருத்தத்தை ரத்து செய்து, அனைத்து அதிகாரங்களும் அதிபர் வசம் வரும் வகையில், … Read more

நபிகளுக்கு எதிரான கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன் – பாக். பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

இஸ்லாமாபாத்: பாஜக பிரதிநிதிகள் முகமது நபிகளுக்கு எதிராக தெரிவித்த கருத்தை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப். பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா மற்றும் நவீன் குமார் ஆகியோர் முகமது நபிக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தனர். அது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு நாடுகள் இதற்கு தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளன. அந்த வரிசையில் பாகிஸ்தான் இப்போது இணைந்துள்ளது. அந்த நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இது தொடர்பாக தனது … Read more

முகமது நபி குறித்து அவதூறான கருத்து | இந்திய தூதரகத்திற்கு சம்மன் அனுப்பிய ஈரான், கத்தார், குவைத்; முழு விவரம்

முகமது நபி குறித்து பாஜக பிரதிநிதிகள் தெரிவித்த அவதூறான கருத்து தொடர்பாக ஈரான், கத்தார் மற்றும் குவைத் நாடுகள் இந்திய தூதரகத்திற்கு சம்மன் அனுப்பி உள்ளன. அவதூறாக பேசிய பிரதிநிதிகள் மீது பாஜக சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கத்தாரை தொடர்ந்து ஈரான் மற்றும் குவைத் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் சம்பந்தப்பட்ட நாடுகளில் இயங்கி வரும் இந்திய தூதரகத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவதூறான கருத்தை தெரிவித்த பாஜக-வின் நுபுர் சர்மாவை இடைநீக்கம் செய்தும், நவீன் குமாரை கட்சியின் … Read more

இலங்கையில் 21வது சட்ட திருத்தம்: அமைச்சரவை ஒப்புதலுக்கு வருகிறது| Dinamalar

கொழும்பு:இலங்கையில் அதிபரின் அதிகாரங்களை குறைத்து, பார்லிமென்டுக்கு அதிக அதிகாரம் அளிக்கும் 21வது சட்ட திருத்தம், அமைச்சரவையின் ஒப்புதலுக்கு இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. நம் அண்டை நாடான இலங்கையில் அதிபருக்கு வானளாவிய அதிகாரங்கள் கொடுக்கப்பட்டதால் தான், நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாக எதிர்கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இதனால், பார்லிமென்டுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில், அப்போதைய பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவால் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி ஏற்றபோது, பார்லிமென்டுக்கு அதிகாரம் … Read more