உலக செய்திகள்
பாகிஸ்தான்: மதவழிபாட்டு தலம் அருகே குண்டு வெடிப்பு – ஒருவர் பலி
லாகூர், பாகிஸ்தானின் கராச்சி மாகாணம் ஹரெடார் பகுதியில் சந்தை மற்றும் இஸ்லாமிய மத வழிபாட்டு தலமான மசூதி உள்ளது. இந்நிலையில், மத வழிபாட்டு தலம் அருகே இன்று இரவு 10 மணியளவில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் ஒரு பெண் உயிரிழந்தார். மேலும் 11 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த குண்டு வெடிப்பு தாக்குதல் சம்பவத்தை … Read more
ஒர்க் பிரம் ஹோம் சரிப்பட்டு வராது பிரிட்டன் பிரதமரின் சொந்த அனுபவம்| Dinamalar
லண்டன் : ”வீட்டில் இருந்தபடியே அலுவலக வேலை பார்க்கும் பழக்கம் ஆக்கப்பூர்வமானது அல்ல, அது கவனச்சிதறலை ஏற்படுத்தும். அலுவலகம் வந்து பணியாற்றுவதே சிறந்தது,” என, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். அதிருப்தி கொரோனா பரவல் துவங்கியவுடன் ஒரு சில அத்தியாவசிய சேவைகளை தவிர அனைத்து துறைகளும், ‘ஒர்க் பிரம் ஹோம்’ எனப்படும், வீட்டில் இருந்தே பணியாற்றும் புதிய பழக்கத்திற்கு மாறின. கொரோனா பரவல் குறைய துவங்கியதை அடுத்து, பெரும்பாலான நிறுவனங்கள் ஊழியர்களை அலுவலகம் திரும்ப உத்தரவிட்டன.இது … Read more
வறட்சியை எதிர்கொள்ளும் 23 நாடுகள் பட்டியல் வெளியீடு; ஐ.நா அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!
நியூயார்க், உலக அளவில் வறட்சியை எதிர்கொள்ளும் 23 நாடுகளின் பட்டியலை ஐக்கிய நாடுகள் சபை நேற்று வெளியிட்டது. வறட்சியை எதிர்கொள்ளும் 23 நாடுகளில் பாகிஸ்தானையும் ஐ.நா அறிக்கையில் பட்டியலிட்டுள்ளது. ஐ.நா-வின் பாலைவனமாதல், வறட்சி தினம் ஜூன் 17ல் கடைபிடிக்கப்பட உள்ள நிலையில், இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பாலைவனமாக்கலை எதிர்த்துப் போராடுவதற்கான ஒப்பந்தம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த இரண்டு ஆண்டுகளில் பாகிஸ்தான் உட்பட 23 நாடுகளில் வறட்சியால் அவசரநிலை ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் … Read more
தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் உயிரிழப்பு; 5 பேர் காயம்| Dinamalar
லகுனா வூட்ஸ் : அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள கிறிஸ்துவ தேவாலயத்தில், மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஒருவர் உயிரிழந்தார்; ஐந்து பேர் காயமடைந்தனர். கலிபோர்னியா மாகாணத்தின் லகுனா வூட்ஸ் பகுதியில் உள்ள கிறிஸ்துவ தேவாலயத்தில் நேற்று முன்தினம் பிற்பகல் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அப்போது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், நிகழ்ச்சியில் பங்கேற்றோர் மீது துப்பாக்கியால் சுட்டார். இதில், ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், ஐந்து பேர் காயமடைந்தனர்.துப்பாக்கிச்சூடு சத்தத்தை கேட்டு, தேவாலயத்திற்கு … Read more
அருணாசல பிரதேச எல்லை அருகே உள்கட்டமைப்பு வசதிகளை சீனா மேம்படுத்துகிறது ; ராணுவம் தகவல்
கவுகாத்தி, அருணாசல பிரதேச மாநிலம், சீன எல்லையை ஒட்டி 1,038 கி.மீ. எல்லையை பகிா்ந்து கொள்கிறது. குறிப்பாக மாநிலத்தின் 60 பேரவைத் தொகுதிகளில் 13 தொகுதிகள் சீன எல்லையை ஒட்டி உள்ளன. அருணாசலப் பிரதேசத்தை சீன அரசு தங்கள் நிலப்பகுதியாக நீண்டகாலமாக சொந்தம் கொண்டாடி பிரச்னை ஏற்படுத்தி வருகிறது. எனவே இப்பகுதியை மேம்படுத்த இந்திய அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. இந்த சூழலில், அருணாசல பிரதேச எல்லையை ஒட்டிய பகுதிகளில் சீனா உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி … Read more
பின்லாந்து, ஸ்வீடனுக்கு ரஷ்யா எச்சரிக்கை| Dinamalar
மாஸ்கோ : வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும், ‘நேட்டோ’ அமைப்பில், கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் இணைவதை எதிர்த்து, அந்நாடு மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இந்நிலையில், ரஷ்யா உடன் 1,300 கி.மீ., எல்லையை பகிர்ந்துள்ள வட ஐரோப்பிய நாடுகளான பின்லாந்து மற்றும் ஸ்வீடன், நேட்டோ அமைப்பில் இணைவதாக அறிவித்துள்ளது, ரஷ்யாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து, ரஷ்ய வெளியுறவு துறை இணையமைச்சர் செர்ஜி ரியப்கோவ் கூறுகையில், ”ஸ்வீடன், பின்லாந்து நாடுகள் … Read more
இலங்கையில் கனமழை: வெள்ளம், நிலச்சரிவால் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு!
கொழும்பு, இலங்கையில் ஒருசில பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையால், பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன், ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதனால், வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது. இரத்தினபுரியின் தெற்கு மாவட்டத்தில் 585 குடும்பங்களைச் சேர்ந்த 2,290 பேரும், மேல் மாகாணத்தின் களுத்துறை மாவட்டத்தில் 16 குடும்பங்களைச் சேர்ந்த 62 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் பேரிடர் … Read more
இடைக்கால அரசுக்கு ஆதரவு அளிக்க இலங்கையின் பிரதான எதிர்க்கட்சி முடிவு| Dinamalar
கொழும்பு : இலங்கையில் நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை சமாளிப்பதற்காக, பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தலைமையிலான இடைக்கால அரசுக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஆதரவு அளிப்பதாக பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பாலவேகயா அறிவித்துள்ளது. அண்டை நாடான இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகியதை அடுத்து, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரனில் விக்ரமசிங்கே தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. ராஜபக்சே குடும்பத்தினரை காப்பாற்றும் நோக்கத்துடன் ரனில் விக்ரமசிங்கே நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதான எதிர்க்கட்சியான … Read more
6 ஆண்டுகளுக்குப் பின் ஏமனில் விமான சேவை| Dinamalar
சனா : ஏமன் நாட்டில் ஆறு ஆண்டுகளுக்குப் பின், நேற்று முதன் முறையாக தலைநகர் சனாவில் இருந்து பயணியர் விமான சேவை மேற்கொள்ளப்பட்டது. மேற்காசிய நாடான ஏமனில், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி அமைப்பிற்கும், அரசு படைகளுக்கும் இடையே 2014ல் உள்நாட்டு போர் வெடித்தது. ஏமன் அதிபர் சவுதியில் தஞ்சம் அடைய, தலைநகர் சனாவை ஹவுதிகள் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து, சவுதி அரேபியா ஆதரவுடன் ஏமன் ராணுவத்தினர் மற்றும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இடையே உள்நாட்டு போர் நீடித்து … Read more