தைவான் மக்களின் தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு.. ஒருவர் உயிரிழப்பு.. 5 பேர் படுகாயங்களுடன் மீட்பு..!

அமெரிக்கா கலிபோர்னியாவில் தேவாலயத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். லகூனா வுட்ஸ் பகுதியில் உள்ள தேவாலயத்தில், பிரார்த்தனைக் கூட்டத்தின் போது திடீரென நுழைந்த நபர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து இறந்தார். 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். Source link

இலங்கையில் விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்த திட்டம்?: இலங்கை ராணுவம் அதிர்ச்சி

இலங்கை: 2009-ம் ஆண்டு மே 18-ந் தேதி இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான போர் முடிவுக்கு வந்தது. அந்த நாளில் முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். அதனால் மே 18-ந் தேதியை முள்ளிவாய்க்கால் நினைவு தினமாகவும், இனப்படுகொலை நினைவு தினமாகவும் தமிழ் அமைப்புகள் அனுசரித்து வருகின்றன. இதற்கிடையே, இதுதொடர்பாக இந்தியாவை சேர்ந்த ஒரு ஆங்கில பத்திரிகை, இந்திய உளவு அமைப்புகள் சொன்னதாக ஒரு பரபரப்பு செய்தியை வெளியிட்டது. வெளிநாடுகளில் வசிக்கும், பலநாட்டு தொடர்புடைய புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்களில் … Read more

வடகொரியாவில் 8.2 லட்சம் பேருக்கு கரோனா தொற்று

சியோல்: வடகொரியாவில் கடந்த சில வாரங்களாக கரோனா வைரஸ் பரவல் கணிசமாக அதிகரித்து வருகிறது. நாள்தோறும் 2 லட்சம் பேருக்கு தொற்று ஏற்படுகிறது. கடந்த சனிக்கிழமை 2.96 லட்சம் பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த 3 நாட்களில் மட்டும் 8.2 லட்சம் பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. அவர்களில் 3.24 லட்சம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். நாள்தோறும் சுமார் 50 பேர் உயிரிழக்கின்றனர். வடகொரியாவில் மருத்துவ வசதிகள் மிகவும் குறைவு. குறிப்பாக கரோனா … Read more

330 அடி செங்குத்தான பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து.. குழந்தைகள் உள்பட 11 பேர் பலி – 34 பேர் படுகாயம்..!

தென் அமெரிக்க நாடான பெருவில் 330 அடி செங்குத்தான பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து உருண்ட விபத்தில் குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். தலைநகர் லிமா நோக்கி சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து 330 அடி செங்குத்தான பள்ளத்தில் கவிழ்ந்தது. பள்ளத்தாக்கில் பலமுறை பேருந்து உருண்டு உருக்குலைந்தது. சம்பவத்தில் இரு குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழந்த நிலையில் 34 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அருகிலிருந்த மக்களின் உதவியுடன் விபத்தில் சிக்கியவர்களை அதிகாரிகள் மீட்டனர். Source link

வாடிகன் நகரில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி

ரோம் : கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மறைசாட்சி தேவசகாயம் புனிதராக போப்பாண்டவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டார். அதன்படி நேற்று, தமிழகத்தை சேர்ந்த மறைசாட்சி தேவசகாயத்திற்கு புனிதர் பட்டத்தை போப் ஆண்டவர் வழங்கும் நிகழ்ச்சி, வாடிகன் நகரிலுள்ள ரோமில் இருக்கும் கத்தோலிக்க திருச்சபையில் கோலாகலமாக நடைபெற்றது. காலை 10 மணிக்கு (இந்திய நேரப்படி மதியம் 1.30 மணி அளவில்) போப் ஆண்டவர் பிரான்சிஸ் கன்னியாகுமரியை சேர்ந்த மறைசாட்சி தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் வழங்கினார். இது தொடர்பான அறிமுக நிகழ்ச்சி … Read more

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு ரத்தப் புற்றுநோய்: அமெரிக்க ‘நியூஸ் லைன்ஸ்’ பத்திரிகை தகவல்

புதுடெல்லி: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ரத்தப் புற்றுநோயால் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க பத்திரிகையில் தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து தீவிரமாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ரஷ்யஅதிபர் விளாடிமிர் புதின் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வும் அதற்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இந்நிலையில், இங்கிலாந்தைச் சேர்ந்த முன்னாள் உளவாளியான கிறிஸ்டோபர் ஸ்டீலி என்பவர், ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‘புதினுக்கு என்ன நோய் என்பது சரியாகத் தெரியவில்லை. … Read more

கிரீசில் தென்பட்டது சந்திர கிரகணம்.. சூப்பர் பிளார் பிளட் மூனை காண குவிந்த மக்கள்..!

கிரீஸ் நாட்டில் சந்திர கிரகணத்தின் சூப்பர் பிளார் பிளட் மூன் காணப்பட்டது. சூரியனின் ஒளி நிலவின் மீது படாமல் பூமி மறைக்கும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. ஏதென்சில் உள்ள புராதண கிரேக்க ஆட்சியாளர் பசைடன் கோவிலின் பின் சந்திர கிரகணம் அதிகளவில் தென்பட்டது. சூப்பர் பிளார் பிளட் மூனை காண அதிகளவிலான மக்கள் திரண்டனர். மே மாதத்தில் சந்திர கிரகணம் ஏற்பட்டதால் பூக்கள் பருவ காலத்தை குறிக்கும் வகையில் பிளார் மூன் என தென் அமெரிக்க … Read more

தமிழகத்தை சேர்ந்த மறைசாட்சி தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம்

வாடிகன் : தமிழகத்தை சேர்ந்த மறைசாட்சி தேவசகாயத்திற்கு வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் மறைசாட்சி தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. போப் ஆண்டவர் பிரான்சிஸ் புனிதர் பட்டம் வழங்குகினார். அவருடன் சேர்த்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 9 மறைசாட்சிகளுக்கும் புனிதர் பட்டம் வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் தங்கராஜ், செஞ்சி மஸ்தான் மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தேவசகாயம் புனிதர் பட்டம் பெறுவதன் மூலம் இந்தியா பெருமையடைகிறது. இந்தியாவின் … Read more

நியூயார்க்கில் 18 வயது இளைஞன் நடத்திய துப்பாக்கிச் சூடு: கறுப்பினத்தவர்கள் உட்பட 10 பேர் உயிரிழப்பு

நியூயார்க்: நியூயார்க் நகரின் சூப்பர் மார்க்கெட்டில் 18 வயது இளைஞன் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதில் கறுப்பினத்தவர்கள் உட்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் காயம் அடைந்தனர். அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ளது பப்பல்லோ நகரம். இங்கு ‘டாப்ஸ் பிரண்ட்லி மார்க்கெட்’ என்ற சூப்பர்மார்க்கெட் உள்ளது. இங்கு கடந்தசனிக்கிழமை 18 வயது இளைஞன், தலைக் கவசம் மற்றும் கவச உடை அணிந்து உள்ளே வந்தார். திடீரென தன்னிடம் இருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் … Read more