தமிழகத்தை சேர்ந்த மறைசாட்சி தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம்

வாடிகன் : தமிழகத்தை சேர்ந்த மறைசாட்சி தேவசகாயத்திற்கு வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் மறைசாட்சி தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. போப் ஆண்டவர் பிரான்சிஸ் புனிதர் பட்டம் வழங்குகினார். அவருடன் சேர்த்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 9 மறைசாட்சிகளுக்கும் புனிதர் பட்டம் வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் தங்கராஜ், செஞ்சி மஸ்தான் மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தேவசகாயம் புனிதர் பட்டம் பெறுவதன் மூலம் இந்தியா பெருமையடைகிறது. இந்தியாவின் … Read more

நியூயார்க்கில் 18 வயது இளைஞன் நடத்திய துப்பாக்கிச் சூடு: கறுப்பினத்தவர்கள் உட்பட 10 பேர் உயிரிழப்பு

நியூயார்க்: நியூயார்க் நகரின் சூப்பர் மார்க்கெட்டில் 18 வயது இளைஞன் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதில் கறுப்பினத்தவர்கள் உட்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் காயம் அடைந்தனர். அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ளது பப்பல்லோ நகரம். இங்கு ‘டாப்ஸ் பிரண்ட்லி மார்க்கெட்’ என்ற சூப்பர்மார்க்கெட் உள்ளது. இங்கு கடந்தசனிக்கிழமை 18 வயது இளைஞன், தலைக் கவசம் மற்றும் கவச உடை அணிந்து உள்ளே வந்தார். திடீரென தன்னிடம் இருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் … Read more

ரஷ்ய அதிபர் புதினுக்கு புற்று நோய்.. உடல் நலத்தில் மிகுந்த பாதிப்பு என தகவல்..!

ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பிரிட்டன் உளவாளி ஒருவர் தெரிவித்துள்ளார். கிறிஸ்டோபர் ஸ்டீலி என்ற நபர் முன்பு அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருப்பதாக எழுதி பரபரப்பை ஏற்படுத்தியவர். தற்போது ரஷ்யாவின் பல்வேறு தரப்புத் தகவல்களின் படி புதின் மிகவும் உடல் நிலை பாதிக்கப்பட்டு இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். புதினுக்கு மிகவும் நெருக்கமான தன்னார்வலர் ஒருவரும் புதின் உடல் நிலை ரத்தப் புற்று நோயால் மிகவும் பாதிப்படைந்துள்ளதாகக் கூறியுள்ளார். … Read more

ஐக்கிய அரபு அமீரக அதிபராக ஷேக் முகமது தேர்வு: இந்தியாவின் உண்மையான நண்பர் என இந்தியர்கள் வரவேற்பு

துபாய்: ஐக்கிய அரபு அமீரக (யுஏஇ) அதிபர் ஷேக் கலிஃபா பின் சயீத்மறைவைத் தொடர்ந்து புதிய அதிபராக ஷேக் முகமது தேர்வு செய்யப்பட்டார். இவர் ஐக்கிய அரபு அமீரக ஆயுதப் படைகளின் தளபதியாக இருந்தவர். ராணுவத்தில் பல முக்கிய பதவிகளை இவர்வகித்துள்ளார். அடுத்த 5 ஆண்டுகளுக்கு அமீரகத்தின் அதிபராக ஷேக் முகமது பதவி வகிப்பார். இந்நிலையில் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஷேக் முகமது பின் சையத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், ஷேக் முகமது … Read more

இலங்கையில் பொருளாதார நெருக்கடி, போராட்டங்களுக்கு மத்தியில் புத்த பூர்ணிமாவை முன்னிட்டு ஊரடங்கு நீக்கப்பட்டது.!

இலங்கையில் பொருளாதார நெருக்கடி, போராட்டங்களுக்கு மத்தியில் புத்த பூர்ணிமாவை முன்னிட்டு ஊரடங்கு நீக்கப்பட்டது. கொழும்பு, காலே உள்ளிட்ட பகுதிகளில் அதிபர் கோத்தபயா பதவி விலக கோரி தொடர்ந்து போராட்டங்கள் வலுக்கின்றன. கடும் மின் பற்றாக்குறைக்கு மத்தியில் தலைநகர் கொழும்பு வண்ணமிகு விளக்குகளால் மிளர்ந்தது. இதனிடையே தெற்கு மற்றும் மேற்கு மாகாணங்களின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டியது. ரத்னபுரா, Kalutara உள்ளிட்ட பகுதிகள் நீரில் தத்தளிக்கின்றன. இலங்கை கடற்படை களமிறக்கப்பட்டு மீட்கும் பணிகள் மும்முரமாக நடைபெறுகின்றன. Source link

உக்ரைன் போரில் ரஷ்யாவின் அடுத்தகட்ட நடவடிக்கை: அம்பலப்படுத்தும் இங்கிலாந்து உளவுத்துறை

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் உலக அளவில் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தியிருக்கிறது. பிற நாடுகளுக்கு மட்டுமல்ல, ரஷ்யாவுக்கே பலத்த சேதத்தையும், பிரச்சனைகளையும் இந்தப் போர் ஏற்படுத்தியிருக்கிறது. உக்ரைன் மீது போர் தொடுத்ததால், ரஷ்யாவின் படைபலத்தில், அதன்  தரைப்படையில் மூன்றில் ஒரு பங்கு குறைந்திருக்கலாம் என இங்கிலாந்து பாதுகாப்புத்துறையின் உளவுத்துறை தகவல்கள் கூறுகின்றன.   “ரஷ்ய UAVகள் தந்திரோபாய விழிப்புணர்வு மற்றும் பீரங்கிகளை இயக்குவதற்கு இன்றியமையாதவை, ஆனால் உக்ரேனிய விமான எதிர்ப்பு திறன்களால் பாதிக்கப்படக்கூடியவை” என்று இங்கிலாந்து நாட்டின் உளவுத்துறை … Read more

லைவ் அப்டேட்ஸ்: உக்ரைன் ரஷியா போர் ஆகஸ்ட் மாதம் ஒரு திரும்புமுனையை சந்திக்கும்- உக்ரைன் மேஜர் ஜெனரல் கணிப்பு

16.05.2022 04.20: ரஷிய அதிபர் புதினை வீழ்த்த சதி நடப்பதாக உக்ரைன் ராணுவ மேஜர் ஜெனரல் கைரிலோ புடானோவ் தெரிவித்துள்ளார்.  ஸ்கை நியூஸ் நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ஆகஸ்ட் மாதம் நடுப்பகுதியில் உக்ரைன் ரஷியா போர் ஒரு திருப்புமுனையை எட்டும் என்றும்  இந்த ஆண்டு இறுதிக்குள் போர் முடிவடையும் என்றும் அவர் கூறியுள்ளார்.  இந்த போரில் ரஷியா தோல்வி அடைந்தால், அதிபர் பதவியில் இருந்து புதின் அகற்றப்படுவார் என்றும் இதன் மூலம் ரஷியா வீழ்ச்சி அடையும் … Read more

ரஷ்யாவுக்கு உக்ரைன் அதிபர் சவால்| Dinamalar

கீவ்-”ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே நடத்தப்படும், ‘யூரோவிஷன்’ பாடல் போட்டி, உக்ரைனின் மரியுபோலில் அடுத்த ஆண்டு நடத்துவோம்,” என, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி அறிவித்தது, ரஷ்யாவுக்கு சவால் விடுக்கும் வகையில் அமைந்துள்ளது. பிப்ரவரி 24ம் தேதி முதல், கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்குள் நுழைந்து, ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு, உக்ரைன் ராணுவத்தினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.துறைமுக நகரமான மரியுபோலை கைப்பற்றுவதில் ரஷ்யா உறுதியாக உள்ளது. அங்கு, அஜோவ்ஸ்டால் ஸ்டீல் ஆலை அமைந்துள்ள … Read more

இலங்கையில் 18-ந் தேதி விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்த திட்டமா? இந்திய உளவு தகவலால் இலங்கை ராணுவம் அதிர்ச்சி

இந்திய உளவு தகவல் 2009-ம் ஆண்டு மே 18-ந் தேதி இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான போர் முடிவுக்கு வந்தது. அந்த நாளில் முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். அதனால் மே 18-ந் தேதியை முள்ளிவாய்க்கால் நினைவு தினமாகவும், இனப்படுகொலை நினைவு தினமாகவும் தமிழ் அமைப்புகள் அனுசரித்து வருகின்றன. இதற்கிடையே, இதுதொடர்பாக இந்தியாவை சேர்ந்த ஒரு ஆங்கில பத்திரிகை, இந்திய உளவு அமைப்புகள் சொன்னதாக ஒரு பரபரப்பு செய்தியை வெளியிட்டது. வெளிநாடுகளில் வசிக்கும், பலநாட்டு தொடர்புடைய புலம்பெயர்ந்த … Read more

8.20 லட்சம் பேருக்கு காய்ச்சல்வட கொரிய மக்கள் கடும் பீதி| Dinamalar

சியோல்,-வட கொரியாவில், கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், அங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 8.20 லட்சத்தை கடந்து உள்ளது. இதனால், வட கொரிய மக்கள் அச்சம்அடைந்துள்ளனர்.உலகம் முழுதும், 2020ல் கொரோனா பரவத் துவங்கியபோது, கிழக்காசிய நாடான வட கொரியாவில் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க, மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன் காரணமாக, தங்கள் நாட்டில், ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என, வட கொரியா தெரிவித்தது. இந்நிலையில், அங்கு கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி … Read more