கத்தியுடன் வந்த பெண்துப்பாக்கியால் சுட்டுக் கொலை| Dinamalar
ஜெருசலம்:பாலஸ்தீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு கரை பகுதியில் கத்தியுடன் வந்த பெண்ணை இஸ்ரேல் ராணுவ வீரர் சுட்டுக் கொன்றதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.மேற்காசிய நாடுகளான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் வன்முறை அதிகரித்துள்ளது. சமீபத்தில் ‘அல் ஜசீரா டிவி’யின், பாலஸ்தீன பத்திரிகையாளர் ஷிரீன் அபு அக்லெ சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து இரு தரப்பிலும் மோதல்கள் தீவிரம் அடைந்துள்ளன. மேற்கு கரை பகுதியில் பாலஸ்தீனியர்களின் தாக்குதலில், இஸ்ரேலைச் சேர்ந்த 19 பேர் உயிரிழந்துள்ளனர். அதுபோல இஸ்ரேல் ராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டில், … Read more