இலங்கை நெருக்கடி | அவசர நிலையை தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு: மக்கள் கூடினால் கடும் நடவடிக்கை

கொழும்பு: இலங்கையில் அவசர நிலையை தொடர்ந்து திங்கட்கிழமை காலை வரை நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது. இதனால் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவுகிறது. நிலக்கரி வாங்க பணம் இல்லாததால் இலங்கையில் … Read more

"இந்தியாவுடனான பிரச்சினைகள்".. பாக். ராணுவத் தளபதிக்கு என்னாச்சு?.. "நாதஸ்" திருந்திட்டாரா!!

இந்தியாவுடன் உள்ள பிரச்சினைகள் அனைத்துக்கும் அமைதி வழியில் தீர்வு காண வேண்டும் என்று பாகிஸ்தான் ராணுவத் தளபதி குவாமர் பாஜ்வா கூறியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் அரசியல் நிலவரம் சரியில்லை. பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்து விட்டது. நாடாளுமன்றத்தில் நாளை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. நம்பிக்கை இல்லாத் தீர்மான விவகாரத்தில் பிரதமருக்கு ஆதரவாக ராணுவம் இல்லை என்று கூறப்படுகிறது. இம்ரான் கானும் ராணுவத்தை … Read more

இலங்கையில் அனைத்து கட்சி அரசாங்கம் அமைக்க வேண்டும்- ஆளும் கூட்டணி கட்சி வலியுறுத்தல்

கொழும்பு: இலங்கையில் வரலாறு காணாத அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்பட எரிப்பொருட்களுக்கு தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. உணவு பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தினமும் 13 மணி நேரம் வரையில் மின்வெட்டு அமலில் உள்ளதால் பொதுமக்களின் மக்களின் இயல்பு  வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடிகளுக்கு அதிபர் அதிபர் கோத்தபய ராஜபக்சே எடுத்த முடிவுகளே காரணம் என கூறி எதிர்க்கட்சியினரும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். கோத்தபய பதவி … Read more

மெக்கா – மதினாவில் 2 வருடங்களுக்குப் பிறகு ரமலான் சடங்குகளுக்கு அனுமதி

ரியாத்: கரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக இஸ்லாமியர்களின் புனித இடமான மெக்கா – மதினாவில் ரமலான் சடங்குகள் நடத்தப்பட அனுமதி வழங்கப்படவில்லை. இந்த நிலையில் மீண்டும் அதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஏற்பட்ட கரோனா பாதிப்பு காரணமாக சவுதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மெக்கா மற்றும் மதினாவுக்கு ஹஜ் பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடை சுமார் 18 மாதம் நீடித்தது. இந்த நிலையில் கரோனாவுக்கு தடுப்பூசி … Read more

ஏப்ரல் 4 வரை முழு ஊரடங்கு – அரசு அதிரடி உத்தரவு!

இலங்கையில் இன்று மாலை 6 மணி முதல் நாளை மறுநாள் காலை 6 மணி வரை முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அண்டை நாடான இலங்கை நாட்டில், பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சுற்றுலாத் துறையை மட்டுமே நம்பி இருக்கும் இலங்கையில், கொரோனா தொற்று காரணமாக பிறக்கப்பிட்ட முழு ஊரடங்கு காரணமாக பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. கடந்த சில வாரங்களாகவே இலங்கையில் பொருளதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களின் விலை விண்ணை … Read more

போராட்டங்களை ஒடுக்க இலங்கையில் 36 மணி நேரம் ஊரடங்கு உத்தரவு

கொழும்பு: இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் பொதுமக்கள் கடும் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உணவு பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தினமும் 13 மணி நேரம் வரையில் மின்வெட்டு அமலில் உள்ளதால் பொதுமக்களின் மக்களின் இயல்பு  வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடிகளுக்கு அதிபர் அதிபர் கோத்தபய ராஜபக்சே எடுத்த முடிவுகளே காரணம் என கூறி எதிர்க்கட்சியினரும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். கோத்தபய பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது. … Read more

நெருக்கடியான தருணத்தில் கைகொடுத்த இந்தியா: 40 ஆயிரம் டன்கள் டீசல் இலங்கை வந்தது; அடுத்து அரிசி

கொழும்பு: டீசல் இல்லாமல் வரலாற்றில் இல்லாத அளவு மிகப்பெரிய நெருக்கடியை சந்தித்து வரும் இலங்கைக்கு தக்க தருணத்தில் 40 ஆயிரம் டன்கள் டீசலை இந்தியா அனுப்பியுள்ளது. இந்த டீசல் தற்போது இலங்கை வந்துள்ள நிலையில் உடனடியாக மாலையே விநியோகம் தொடங்கும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் … Read more

ரஷியாவின் எண்ணெய் கிடங்கு மீது நாங்கள் தாக்குதல் நடத்தவில்லை- உக்ரைன் மறுப்பு

உக்ரைன் மீது ரஷியா ராணுவத்தின் போர் தாக்குதல் நீடித்து கொண்டே இருக்கிறது. உக்ரைனில் முக்கிய நகரங்களில் ரஷிய படை தீவிரமாக தாக்குதல் தொடுத்து வருகின்றன. அவர்களுக்கு எதிராக உக்ரைன் வீரர்களும் கடுமையாக போரிட்டு வருகிறார்கள். இதற்கிடையே ரஷியாவுக்கும் உக்ரைன் ராணுவம் முதல் முறையாக நுழைந்து தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியானது. ரஷியாவின் பெகொரோட் நகரில் எண்ணெய் கிடங்குகள் மீது உக்ரைனின் ஹெலிகாப்டரில் இருந்து ஏவுகணைகள் வீசப்பட்டு தாக்கப்பட்டதாக ரஷியா தெரிவித்தது. இந்நிலையில் ரஷிய எண்ணெய் கிடங்கு மீது … Read more

பாகிஸ்தானில் அரசியல் கொந்தளிப்பு: இம்ரான் கட்சியின் மாற்று திட்டங்கள் என்ன?

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ராக் கானின் அரசியல் கட்சியான பாகிஸ்ஹான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) ஆட்சியை தக்க வைக்கும் போராட்டத்தை கைவிடுவதாக இல்லை. எனினும், இம்ரான் கானுக்கு எதிராக, எதிர்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்றுவதில் வெற்றி அடைந்துவிட்டால், அதை சமாளிப்பதற்கான ஒரு மாற்று திட்டத்தையும் இம்ரான் கானின் கட்சி வகுத்துள்ளது.  பி.டி.ஐ நாட்டில் வழக்கமான நேரத்திற்கு முன்னதாகவும், உடனடியாகவும் தேர்தல்களுக்கு அழைப்பு விடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூனிடம் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதே நேரத்தில் மின்னணு வாக்களிப்பு … Read more

உலகளவில் எரிவாயு, உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கு புடின்தான் காரணம்- ஜோ பைடன் குற்றச்சாட்டு

உக்ரைன்- ரஷியா இடையே இன்று 38வது நாளாக போர் நடந்து வருகிறது. உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பால் உலகளவில் எரிவாயு மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது என்றும் இதற்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புடின்தான் காரணம் என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ஜோ பைடன் கூறியதாவது:- உக்ரைனில் புடினின் படையெடுப்பினால், உலகம் முழுவதும் எரிவாயு விலை மற்றும் உணவு பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளது.  அதை சமாளிக்க … Read more