துருக்கி பேச்சுவார்த்தையில் உடன்பாடு: உக்ரைனில் படையை குறைக்கிறது ரஷ்யா

இஸ்தான்புல்: ரஷ்யா, உக்ரைன் இடையே துருக்கியில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது சில விவகாரங்களில் உடன்பாடு எட்டப்பட்டது. இதன்படி உக்ரைன் தலைநகர் கீவ், செர்னிஹிவ் நகரில் படை களை குறைக்க ரஷ்யா ஒப்புக் கொண்டுள்ளது. கடந்த மாதம் 24-ம் தேதிஉக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலைதொடங்கியது. இரு நாடுகளிடையே நேற்று 34-வது நாளாக போர் நீடித்தது. ரஷ்ய ராணுவ தாக்குதலில் உக்ரைனில் பேரழிவு ஏற்பட்டிருக்கிறது. எனினும் அந்த நாட்டின் தலைநகர் கீவை இதுவரை கைப்பற்ற முடியவில்லை. போரை முடிவுக்கு … Read more

பாகிஸ்தானில் பெரும்பான்மையை இழந்தது இம்ரான்கான் அரசு

இம்ரான்கான் அரசு பெரும்பான்மை இழந்தது பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசு பெரும்பான்மையை இழந்தது கூட்டணி கட்சியான MQM இம்ரான்கான் அரசுக்கு அளித்த ஆதரவை விலக்கிக் கொண்டது நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்பே இம்ரான்கான் அரசுக்கு பின்னடைவு ஏப்.3 ஆம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெற உள்ளது Source link

அமெரிக்காவில் 50 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி சங்கிலி தொடர் விபத்து: 3 பேர் பலி

நியூயார்க் : அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இந்நிலையில் அங்குள்ள நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் அளவுக்கு அதிகமாக பனிகொட்டியது. இதனால் நெடுஞ்சாலை முழுவதும் பனித்துகள் குவிந்தன. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிப்பொழிவு இருந்ததால் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் பல அடுத்தடுத்து விபத்தில் சிக்கின. சாலையில் வாகனங்கள் விபத்துக்குள்ளாகி கிடப்பது தெரியாமல், ஒன்றன்பின் ஒன்றாக வந்த மற்ற வாகனங்களும் விபத்துக்குள்ளாகி கிடந்த வாகனங்கள் மீது மோதி கவிழந்தன. இப்படி கார்கள், … Read more

அரசு ஊழியர்கள் தாடி வளர்க்க தலிபான்கள் அதிரடி உத்தரவு| Dinamalar

காபூல்:’தாடி வளர்க்காத மற்றும் மத பாரம்பரிய உடை அணியாத அரசு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர்’ என, தலிபான்கள் எச்சரித்துள்ளனர். தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், கடந்த ஆண்டு, தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். அப்போதிருந்தே அவர்கள், பல கடும் சட்டங்களை அமல்படுத்தி வருகின்றனர். சமீபத்தில், பெண்கள் தனியாக விமானப் பயணம் செய்ய தடை விதித்தனர். அதேபோல், ஆறாம் வகுப்புக்கு மேல் படிக்க, பெண்களுக்கு அனுமதி இல்லை. பூங்காக்களில் வாரத்துக்கு மூன்று நாட்கள் மட்டுமே, பெண்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இப்படி பெண்களுக்கு … Read more

ஆப்கனில் தொடரும் சர்ச்சை உத்தரவுகள்

காபூல்: ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தலிபான்கள் கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்தனர். கடந்த முறை ஆட்சி செய்தது போல் அல்லாமல் பெண்களுக்கு அவர்களது உரிமைகளை அளிப்போம் என தொடக்கத்தில் உறுதி அளித்தனர். ஆனால் தலிபான்கள் ஆட்சிக்குவந்தது முதல் பெரும்பாலான பகுதிகளில் பெண் குழந்தைகள் 6-ம் வகுப்புக்கு மேல் படிக்க தடை விதிக்கப்பட்டது. புதிய கல்வியாண்டு கடந்த புதன்கிழமை தொடங்கியது. அப்போது இத்தடை விலக்கிக் கொள்ளப்படும் என பலரும் எதிர்பார்த்தனர். இதற்கு மாறாக பெண் குழந்தைகள் 6-வகுப்புக்கு … Read more

இலங்கையில் போதிய மருந்துகள் இல்லாததால் அறுவை சிகிச்சைகள் ரத்து.!

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வரும் இலங்கையில் போதிய மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் இல்லாததால் அறுவை சிகிச்சைகள் ரத்து செய்யப்படுவதாக வெளியான தகவலை அடுத்து, சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு தேவையான உதவிகளை வழங்கும்படி இந்திய தூதரகத்திற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உத்தரவிட்டுள்ளார்.  இலங்கையில் உள்ள Peradeniya மருத்துவமனையில் மருந்துகள் இல்லாமல் அறுவை சிகிச்சைகள் ரத்து செய்யப்படுவதாகவும், அவசர பிரிவுகளுக்கான அறுவை சிகிச்சைகள் மட்டுமே நடைபெறுவதாகவும் இலங்கையை சேர்ந்த செய்தியாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த செய்தியை … Read more

செக் குடியரசின் பிரதமருக்கு கொரோனா: வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார்

பிராக் : செக் குடியரசு நாட்டின் பிரதமராக இருப்பவர் பீட்டர் பியலா (வயது 57). இவருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. அவர் வீட்டில் 7 நாட்களுக்கு தன்னை தனிமைப்படுத்திக்கொள்வார். இதையொட்டி அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “குறைந்தபட்சம் வீட்டில் இருந்தாவது எனது பணிக்கு திரும்ப விரும்புகிறேன்” என்று கூறி உள்ளார். இந்த நாட்டில் நேற்று ஒரு நாளில் 8,812 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை இங்கு 37 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு … Read more

இந்தியா – இலங்கை ஒப்பந்தம்| Dinamalar

கொழும்பு:இலங்கையின் யாழ்ப் பாணம் பகுதியில், மின் உற்பத்தி நிலையங்கள் அமைப்பது தொடர்பாக, அந்த நாட்டுக்கும், நம் நாட்டுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.மூன்று நாள் அரசு முறைப் பயணமாக, அண்டை நாடான இலங்கைக்கு வந்துள்ள நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், 18வது ‘பிம்ஸ்டெக்’ அமைச்சர்கள்கூட்டத்தில் உரையாற்றினார். இதுகுறித்து, அவர் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:இந்தியா, இலங்கை, வங்கதேசம், மியான்மர், தாய்லாந்து, நேபாளம், பூடான் ஆகிய நாடுகள் அடங்கிய பிம்ஸ்டெக் அமைப்பு, அனைத்து துறைகளிலும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். குறிப்பாக, எரிசக்தி, … Read more

3 மின் திட்டப் பணிகளில் இந்தியாவுடன் இலங்கை அரசு ஒப்பந்தம்: சீன நிறுவனத்துக்கு வழங்கிய பணிகள் ரத்து

கொழும்பு: இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள 3 தீவுகளில் மரபுசாரா மின்னுற்பத்தி திட்டங்கள் மேற்கொள்ள சீன நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில் அதனை ரத்து செய்த இலங்கை அரசு, அப்பணிகளை இந்திய நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது. இதற்கான ஒப்பந்தம் நேற்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பெரிஸ் முன்னிலையில் கையெழுத் தாகின. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் யாழ்ப்பாணத்தில் உள்ள நைனா தீவு, நெடுந்தீவு மற்றும் அனலைத் தீவு உள்ளிட்ட பகுதிகளில் … Read more

சவுதியில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் விண்வெளி குடியிருப்பு.!

சவுதி இளவரசரின் கனவுத் திட்டமான ட்ரோஜெனா எனப்படும் விண்வெளி குடியிருப்பு வரும் 2026ம் ஆண்டுக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சவூதி அரேபியாவின் தபூக் மாகாணத்தில் அமைந்துள்ள நியோம் என்ற இடத்தில் இந்த விண்வெளி குடியிருப்பு அமைக்கப்பட்டு வருகிறது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 8 ஆயிரத்து 530 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு வரும் ட்ரோஜெனா குடியிருப்பில் இரண்டு மைல் அகலத்திற்கு நன்னீர் ஏரி அமைக்கப்படுகிறது. பனிச்சறுக்கு, மலை முகடுகளில் அமைக்கப்பட்டுள்ள வீடுகள் என ட்ரோஜெனா கட்டப்பட்டு வருகிறது. Source … Read more