Extreme change in weather around the world, extreme heat in America, Japan | உலகம் முழுதும் வானிலையில் அதீத மாற்றம் அமெரிக்கா, ஜப்பானில் கடுமையான வெப்பம்

ரோம்: அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வரலாறு காணாத வெப்பம் வாட்டி வதைக்கிறது. புவி வெப்ப மயமாதல் காரணமாகவே, உலகம் முழுதும் பருவநிலையில் இந்த அதீத மாற்றங்கள் நிகழ்வதாக, ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். நம் நாட்டின் வட மாநிலங்களில் கடந்த சில மாதங்களாக கடுமையான வெப்பம் பதிவான நிலையில், கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. பல்வேறு மாநிலங்களிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. யமுனை ஆற்றின் நீர் அளவு அபாய அளவை தாண்டியதை அடுத்து, புதுடில்லியை … Read more

சீமா ஹைதர் விவகாரம்… பாகிஸ்தான் இந்துக்களுக்கு அதிகரிக்கும் சிக்கல்கள்!

சிந்து மாகாணத்தில், இந்து சமூகத்தைச் சேர்ந்த சுமார் 30 பேர் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர் என்றும் கோவில்கள் மீதான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என மனித உரிமைகள் ஆணைக்குழு கவலை வெளியிட்டுள்ளது.

மனிதர்களின் வயதை குறைக்கும் வேதிக் கலவை: ஹார்வர்ட் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

கேம்பிரிட்ஜ்: மனிதர்களுக்கு வயதாவதை தடுக்கும் வேதிக் கலவையை கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஹார்வர்ட் விஞ்ஞானி டேவிட் ஷின்கிளயர் தன் ட்விட்டர் பக்கத்தில், “மரபணு சிகிச்சை மூலம் வயதைக் குறைக்க முடியும் என்பதை எங்களது முந்தைய ஆய்வில் நிரூபித்தோம். வேதிக் கலவை மூலமும் வயதைக் குறைக்க முடியும் என்பதை இப்போது நிரூபித்துள்ளோம். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இது தொடர்பாக எங்கள் குழு தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தது. அந்த ஆராய்ச்சியின் … Read more

Pak. Family, Relatives Oppose Girls Return | பாக்., பெண் நாடு திரும்புவதற்கு குடும்பத்தினர், உறவினர் எதிர்ப்பு

கராச்சி: காதலனைத் தேடி, நான்கு குழந்தைகளுடன் இந்தியா வந்த பாகிஸ்தான் பெண், அந்நாட்டு சமூக விதிமுறைகளை மீறியதாகக் கூறிய அவரது குடும்பத்தினர், அவர் மீண்டும் பாகிஸ்தானுக்கு வர கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நம் அண்டை நாடான பாகிஸ்தானைச் சேர்ந்தவர் சீமா, 30. இவரின் கணவர் குலாம் ஹைதர், மேற்காசிய நாடான சவுதி அரேபியாவில் வேலை செய்து வருகிறார். இந்த தம்பதிக்கு நான்கு குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த 2019ல், ‘பப்ஜி’ ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்ட சீமாவுக்கு, இந்தியாவைச் … Read more

Powerful earthquake on the Alaska Peninsula | அலாஸ்கா தீபகற்பத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

வாஷிங்டன் : அமெரிக்காவின் அலாஸ்கா தீபகற்பத்தில் நேற்று காலை சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. அமெரிக்க மாகாணங்களில் ஒன்று அலாஸ்கா. இது அமெரிக்காவில் இருந்து சற்று தள்ளி கனடாவுக்கு மேல், வட துருவத்திற்கு மிக அருகில் உள்ளது. இந்த தீபகற்ப பகுதியில் நேற்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில், 7.2 ஆக பதிவானது. இதனால் கட்டடங்கள் குலுங்கின. அச்சமடைந்த பொதுமக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர். இதைத் தொடர்ந்து … Read more

Attacks on Hindu Temples in Pakistan | பாகிஸ்தானில் அடுத்தடுத்து ஹிந்து கோயில் மீது தாக்குதல்கள்

காஷ்மோர் : பாகிஸ்தானின், சிந்து மாகாணத்தில் உள்ள, ஹிந்து கோயில் மீது, கொள்ளையர்கள் ‘ராக்கெட் லாஞ்சர்’களை கொண்டு, தாக்குதல் நடத்தி உள்ளனர். நம் அண்டை நாடான பாகிஸ்தானின், சிந்து மாகாணத்தின், காஷ்மோர் பகுதியில் உள்ள, கெளஸ்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், ஹிந்து கோயில் ஒன்று அமைந்துள்ளது. அங்குள்ள, பாக்ரி சமூகத்தினரால் நடத்தப்படும், மத வழிபாடுகளுக்காக, ஆண்டுதோறும் இக்கோயில், திறக்கப்படும். இந்நிலையில், இன்று கோயில் மற்றும் கோயிலை ஒட்டியுள்ள குடியிருப்புகள் மீது, கொள்ளையர்கள் ‘ராக்கெட் லாஞ்சர்’களை கொண்டு, … Read more

அலாஸ்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 7.4 ஆக பதிவு – சுனாமி எச்சரிக்கை

அலாஸ்கா: அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் 7.4 ரிக்டராகப் பதிவானது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அலாஸ்கா தீபகற்பத்தின் கடல் பகுதிகளில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 6.48 மணியளவில், சாண்ட் பாயின்ட் என்ற நகரத்தின் தென்மேற்கு திசையில் 89 கிமீ தொலைவில் 21 கிமீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவான இந்த … Read more

Israeli Prime Minister Netanyahu admitted to hospital | இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மருத்துவமனையில் அனுமதி

ஜெருசேலம் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் உடல்நிலை சீராக உள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலில், லிகுட் கட்சியைச் சேர்ந்த பெஞ்சமின் நெதன்யாகு, 73, பிரதமராக உள்ளார். கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக இவர் அந்நாட்டின் பிரதமராக உள்ளார். தலைநகர் டெல் அவிவ்வில் வசித்து வந்த நெதன்யாகு, வீட்டில் திடீரென மயங்கி விழுந்ததை அடுத்து, அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், … Read more

அலாஸ்காவில் பயங்கர நிலநடுக்கம்… சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி!

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பின்படி, இன்று காலை சாண்ட் பாயிண்ட் நகருக்கு தென்மேற்கே 89 கிலோமீட்டர் தொலைவில் 32.6 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. அண்ணாமலை அடிக்கடி வெளிநாடு போறது இதுக்குதான்… பகீர் கிளப்பும் கேஎஸ் அழகிரி! ரிக்டர் ஸ்கேலில் 7.4 ஆக உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 9.3 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளுது. இதனை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு … Read more

No longer trading in domestic currency; United Arab Emirates – India Agreement | இனி உள்நாட்டு கரன்சியில் வர்த்தகம்; ஐக்கிய அரபு எமிரேட்ஸ் – இந்தியா ஒப்பந்தம்

அபுதாபி: இரு தரப்பு வர்த்தகத்தை, உள்நாட்டு கரன்சியில் மேற்கொள்வதற்காக, யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்சுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. இதைத் தவிர, மொபைல்போன் வாயிலான பரிவர்த்தனையை பரஸ்பரம் செய்யும் ஒப்பந்தமும் கையெழுத்தானது. பிரதமர் நரேந்திர மோடி ஐரோப்பிய நாடான பிரான்சுக்கு பயணம் மேற்கொண்டார். அந்தப் பயணத்தை முடித்து, மேற்காசிய நாடான, யு.ஏ.இ.,க்கு நேற்று சென்றடைந்தார். அந்த நாட்டின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் நேற்று இரு தரப்பு உறவுகள் உள்ளிட்டவை குறித்து … Read more