TV host suspended in pornographic case | ஆபாச பட விவகாரத்தில் டிவி தொகுப்பாளர் சஸ்பெண்ட்

லண்டன்: ஆபாச பட விவகாரத்தில், பி.பி.சி., நிறுவன பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடான பிரிட்டனில், பரஸ்பர சம்மதத்துடன் பாலியல் உறவு வைத்துக் கொள்வதற்கான வயது, 16 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், 18 வயதுக்குட்பட்டவர்களை ஆபாசப் படம் எடுப்பது குற்றம். தலைநகர் லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும், பி.பி.சி., ஊடக நிறுவனத்தின் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஒருவர் மீது இது தொடர்பாக புகார் கூறப்பட்டுள்ளது. அவர் மீது, … Read more

கேர்ள் ப்ரெண்ட்டுக்கு ரூ.900 கோடி – இத்தாலி முன்னாள் பிரதமரின் உயில்

ரோம்: இத்தாலியின் அரசியல் அமைப்பை மாற்றிய முன்னாள் பிரதமரும், இத்தாலி அரசியலின் கிங் மேக்கருமாக இருந்த மறைந்த சில்வியோ பெர்லுஸ்கோனி, தனது கேர்ள் ப்ரெண்ட்டுக்கு 900 கோடி ரூபாய் சொத்துக்களை உயில் எழுதி வைத்துள்ளார். இத்தாலியில் மூன்று முறை பிரதமராக இருந்தவர் சில்வியோ பெர்லுஸ்கோனி. 86 வயதான இவர், ரத்தப் புற்றுநோய் காரணமாக கடந்த மாதம் 12ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து அவரின் சொத்துக்கான உயில் சில தினங்கள் முன் அவரின் ஐந்து குழந்தைகள் முன் வாசிக்கப்பட்டது. … Read more

Former Prime Minister wrote a will of Rs 900 crore to his 33-year-old girlfriend | 33 வயது காதலிக்கு ரூ.900 கோடி சொத்து உயில் எழுதி வைத்த முன்னாள் பிரதமர்

ரோம், உடல்நலக் குறைவால் கடந்த மாதம் காலமான இத்தாலி முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி, தன், 33 வயது காதலிக்கு, 900 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்தை உயில் எழுதி வைத்துள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது. ஐரோப்பிய நாடான இத்தாலியின் பிரதமராக, மூன்று முறை பதவி வகித்தவர் சில்வியோ பெர்லுஸ்கோனி. ‘போர்ஸா இத்தாலியா’ எனும் கட்சியைச் சேர்ந்த இவர், கடந்த ஜூன் 12ல், 87வது வயதில் உடல்நலக் குறைவால் காலமானார். இவருக்கு, 6 பில்லியன் யூரோ … Read more

மாம்பழம் அனுப்பிய வங்கதேச பிரதமருக்கு அன்னாசி பழம் பரிசளித்த திரிபுரா முதல்வர்

அகர்தலா: தனக்கு மாம்பழம் அனுப்பி வைத்த வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அன்னாசி பழத்தை பரிசாக வழங்கி உள்ளார் திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா. வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா திரிபுரா முதல்வர் மாணிக் சாஹாவுக்கு கடந்த ஜூன் 15-ம் தேதி 500 கிலோ மாம்பழங்களை அனுப்பினார். இதையடுத்து அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அன்னாசி பழங்களை மாணிக் சாஹா அனுப்பி உள்ளார். இதுகுறித்து திரிபுரா தோட்டக் கலை துறை இயக்குநர் பி.பி.ஜமாதியா கூறும்போது, “வங்க தேசத்தின் … Read more

செனகலில் இருந்து ஸ்பெயினுக்கு 300 பேர் பயணித்த 3 படகுகள் மாயமானதாக தகவல்

எல் எஜிடோ: செனகல் நாட்டில் இருந்து ஸ்பெயினுக்கு 3 படகுகளில் பல்வேறு காரணங்களால் புலம்பெயர முயன்ற 300 பேரை காணவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை ஸ்பெயின் நாட்டு உதவிக் குழு ஒன்று தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் 23-ம் தேதி அன்று மத்திய செனகல் பகுதியான Mbour நகரில் இருந்து 100 பேருடன் இரண்டு படகுகள் புறப்பட்டுள்ளன. அதற்கடுத்த நான்காவது நாள் 200 பேருடன் மற்றொரு படகு புறப்பட்டுள்ளது. இதனை வாக்கிங் பார்டர்ஸ் எனும் … Read more

அதிக எடை, மோசமான வானிலையால் 19 பயணிகளை இறக்கிவிட்ட இங்கிலாந்து விமானம்

லண்டன்: இங்கிலாந்து நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று அதிக எடை மற்றும் மோசமான வானிலை காரணமாக பறக்க முடியாததால் 19 பயணிகளை இறக்கிவிட்டு புறப்பட்டுச் சென்றுள்ளது. இங்கிலாந்தின் ஈஸிஜெட் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று, கடந்த 5-ம் தேதி இரவு 9.45 மணிக்கு ஸ்பெயினின் லான்ஸரோட்டி நகரில் இருந்து இங்கிலாந்தின் லிவர்பூல் நகருக்கு புறப்படத் தயாராக இருந்தது. ஆனால் அதிக எடை மற்றும் மோசமான வானிலை காரணமாக அந்த விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஊக்கத் … Read more

கனடாவில் உள்ள இந்திய தூதரகத்தின் முன்பு காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு எதிராக இந்திய வம்சாவளியினர் போராட்டம்

டொராண்டோ: கனடாவில் உள்ள இந்திய தூதரகத்தின் முன்பு காலிஸ்தான் ஆதரவு போராட்டக்காரர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்திய வம்சாவளியினர் தேசிய கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள இந்திய தூதரகத்துக்கு முன்பாக தேசிய கொடியை ஏந்தி இந்திய வம்சாவளியினர் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், இந்திய தூதரக அலுவலகத்துக்கும், தூதரக அதிகாரிகளுக்கும் தகுந்த பாதுகாப்பு வழங்கக் கோரி கோஷங்களை எழுப்பினர். அவர்களுக்கு எதிர்நிலையில் காலிஸ்தான் பிரிவினைவாதிகளும் போரட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ‘‘பாரத் … Read more

Italys former PM Silvio Berlusconi leaves 33-year-old girlfriend with over ₹900 crore | 33 வயது காதலிக்கு ரூ.900 கோடி சொத்து: உயில் எழுதி வைத்த 86 வயது இத்தாலி மாஜி பிரதமர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ரோம்: இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி, 86 வயதில் இறந்தார். இவரது 33 வயதான காதலிக்கு தனது ரூ.900 கோடி மதிப்பிலான சொத்தை உயில் எழுதி வைத்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளன. இத்தாலி நாட்டின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி கடந்த ஜூன் மாதம் தனது 86வது வயதில் காலமானார். சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த சில்வியோ பெர்லுஸ்கோனிக்கு கூடுதலாக புற்றுநோய் தாக்குதலால் நுரையீரல் நோய்த்தொற்றும் ஏற்பட்டது. … Read more

சீன கிண்டர்கார்டன் பள்ளியில் சரமாரி கத்திகுத்து… குழந்தைகள் உள்ளிட்ட பலர் பலி!

சீனாவின் தென்கிழக்கு மாகாணமாக குவாங்டாங் உள்ளது. இங்குள்ள லியான்ஜியாங் நகரில் செயல்பட்டு வரும் கிண்டர்கார்டன் பள்ளியில் ஏராளமான குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை 25 மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் திடீரென உள்ளே நுழைந்துள்ளார். இவரது பெயர் வூ எனச் சொல்லப்படுகிறது. ஒரே நாளில் 2 வயது குறைப்பு ..தென் கொரியா அரசு அறிவிப்பு சீனாவில் பயங்கரம் இவர் தான் கொண்டு வந்த கத்தியை எடுத்து அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்து 6 பேர் … Read more

Union Minister Rajnath Singh in Malaysia: Consultation with Foreign Minister | மலேசியாவில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்!: அந்நாட்டு வெளியுறவு அமைச்சருடன் ஆலோசனை

கோலாலம்பூர்: 3 நாள் சுற்றுப்பயணமாக மலேசியா சென்றுள்ள மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், அந்நாட்டு வெளியுறவு அமைச்சருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, இருவரும் இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசித்தனர். மலேசியா நாட்டுக்கு மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் 3நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். மலேசியா சென்றடைந்த உடன் அவருக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவரது வருகையை முன்னிட்டு கோஷங்களை எழுப்பிய படியும் மற்றும் மூவர்ண கொடியை அசைத்த படியும் … Read more