19 people lost their lives in the landslide | நிலச்சரிவில் சிக்கி 19 பேர் பரிதாப பலி

பீஜிங் : சீனாவில் சுரங்கத் தொழிலாளர்கள் தங்குமிடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 19 பேர் பலியாகினர். நம் அண்டை நாடான சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் உள்ள மலையடிவாரத்தில் தனியார் சுரங்க நிறுவனத்தின் தொழிலாளர் தங்கும் விடுதி உள்ளது. இங்கு தொடர் மழை பெய்து வரும் நிலையில் நேற்று முன்தினம் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சுரங்கத் தொழிலாளர்கள் தங்கியிருந்த விடுதி உட்பட பல்வேறு கட்டடங்கள் குடியிருப்புகள் இடிந்து தரைமட்டமாகின. இங்கு வசித்த மக்கள் பலர் இடிபாடுகளில் சிக்கித் … Read more

They are rational diseases… Sari, vadi…! | அவங்க தான் பகுத்தறிவு வியாதிகளாச்சே… சாரி, வாதிகளாச்சே…!

ஹிந்து தமிழர் கட்சியின் தலைவர் ராம.ரவிகுமார் அறிக்கை: ‘என் தந்தை குடிப்பழக்கத்தை நிறுத்தி விட வேண்டும். என் குடும்பம் எப்பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறதோ, அப்போது தான், என் ஆத்மா சாந்தி அடையும்’ என, உருக்கமாக கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட வேலுார் மாணவி விஷ்ணு பிரியாவின் குரல், தமிழகத்தில், பல குடும்பங்களில் உள்ள தாய்களின் அவலக்குரல். ‘நீட் தேர்வு ரத்தாகும் போது தான், அனிதாவின் ஆன்மா சாந்தி அடையும்’ என, மேடையில் வசனம் … Read more

சூயஸ் கால்வாயில் பழுதாகி நின்ற பிரமாண்ட சரக்குக் கப்பல்..!

எகிப்தின் சூயஸ் கால்வாயில் பிரமாண்ட சரக்குக் கப்பல் பழுதாகி நின்றதால் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மால்டா நாட்டுக் கொடியுடன் சென்ற சீவிகோர் என்ற கப்பல் சூயஸ் கால்வாயில் நுழைந்து 12 கிலோ மீட்டர் தூரத்தில் பழுதாகி நின்றது. இதனால் அந்தக் கப்பலின் பின்னால் வந்து கொண்டிருந்த 8 கப்பல்களும் நிறுத்தப்பட்டன. இதனையடுத்து 3 இழுவைப் படகுகள் வரவழைக்கப்பட்டு சுமார் 17 கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் சென்று இரட்டைப் பாதையில் நிறுத்தியதாக சூயஸ் கால்வாய் … Read more

US Presidential Election: Mike Pence vs Trump | அமெரிக்க அதிபர் தேர்தல்: டிரம்பை எதிர்த்து மைக் பென்ஸ் போட்டி

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ் டிரம்ப்பை எதிர்த்து போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் 2024ல் நடைபெற உள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பில் போட்டியிடப் போவதாக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்நிலையில் இவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ் போட்டியிட உள்ளார். இதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளதாக … Read more

விவாகரத்தை 'சுதந்திரம்' என கொண்டாடும் மவுரித்தேனியா பெண்கள்!

விவாகரத்து கொண்டாட்டம்: பல நூற்றாண்டுகளாக, பெண்கள் பரஸ்பரம் விவாகரத்து விருந்துகளில் ஒன்றாக சேர்ந்து சாப்பிட்டு, பாடி மற்றும் நடனமாடி கொண்டாடுகின்றனர்.

தினசரி 1 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க போவதாக சவுதி அரேபியா அறிவிப்பு..!

கச்சா எண்ணெய் உற்பத்தியை, நாளொன்றுக்கு 10 லட்சம் பேரல்கள் என்ற அளவில் குறைக்கப் போவதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது. அரேபியாவின் எரிசக்தி அமைச்சரான இளவரசர் அப்துல் அசீஸ் பின் சல்மான் இதனை அறிவித்துள்ளார். ஏற்கனவே தினசரி 2 மில்லியன் பேரல் எண்ணெய் உற்பத்தி ஏப்ரலில் அறிவிக்கப்பட்டு மே மாதம் முதல் குறைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகனின் ஓபெக் கூட்டமைப்பு ஏழு மணி நேரம் சவூதி அரேபியா அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இதனையடுத்து எண்ணெய் … Read more

பூமிக்குத் திரும்பிய ‘ஷென்ஜோ-15’.. 20 கிலோ மாதிரிகளை பூமிக்கு எடுத்துவந்த விண்வெளி வீரர்கள்..!

6 மாத விண்வெளி பயணத்தை நிறைவு செய்துவிட்டு பூமிக்குத் திரும்பிய சீன விண்வெளி வீரர்கள், 20 கிலோ எடையுள்ள ஆராய்ச்சி மாதிரிகளை கொண்டுவந்துள்ளனர். பெண்ணின் கரு முட்டை செல்கள், நுண்ணுயிர்கள், புல், நெற்பயிர்கள் போன்றவை விண்கலம் மூலம் டியாங்காங் ஆராய்ச்சி மையத்திற்கு 6 மாதங்களுக்கு முன் ஷென்ஜோ – 15 என்ற விண்கலம் மூலம் விஞ்ஞானிகள் அனுப்பி வைத்தனர். விண்வெளியில், புவியீர்ப்பு சக்தி குறைவாக உள்ள மாறுபட்ட சூழலில் இருக்கும் போது அவற்றின் பண்புகளில் நேரும் மாற்றங்கள் … Read more