இந்திய அணி அபார பந்துவீச்சு; 176 ரன்னுக்கு விண்டீஸ் அணி ஆல்-அவுட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

ஆமதாபாத்: இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விண்டீஸ் அணி 176 ரன்னுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது.

latest tamil news

இந்தியா வந்துள்ள விண்டீஸ் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. ஆமதாபாத்தில் உள்ள உலகின் மிகப் பெரிய மோடி மைதானத்தில் முதல் போட்டி நடக்கிறது. இந்திய அணியில் ‘ஆல்-ரவுண்டர்’ தீபக் ஹூடா அறிமுகமானார். ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

latest tamil news

விண்டீஸ் அணிக்கு ஜேசன் ஹோல்டர் (57) அரைசதம் கடந்து ஆறுதல் தந்தார். கேப்டன் போலார்டு (0), நிக்கோலஸ் பூரன் (18) உள்ளிட்ட மற்றவர்கள் ஏமாற்ற விண்டீஸ் அணி 43.5 ஓவரில் 176 ரன்னுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது. இந்தியா சார்பில் யுவேந்திர சகால் 4, வாஷிங்டன் சுந்தர் 3, பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட் கைப்பற்றினர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.