உருமாற்றம் அடைந்த ஒமைக்ரானுக்கு எதிராக தடுப்பூசி தயாரிக்க சீரம் நிறுவனத்திற்கு அனுமதி <!– உருமாற்றம் அடைந்த ஒமைக்ரானுக்கு எதிராக தடுப்பூசி தயாரிக்க… –>

ருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரசுக்கு எதிராக பிரத்யேக தடுப்பூசியை தயாரிக்க, புனேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டியூட் நிறுவனத்திற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.

உலக நாடுகளில் பரவி வரும் ஒமைக்ரான் வைரசுக்கு எதிராக செயலாற்றும் வகையில் பிரத்யேக தடுப்பூசியை பல்வேறு நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன.

அந்த வகையில், ஒமைக்ரானுக்கு எதிராக தடுப்பூசியை இந்தியாவிலேயே தயாரிக்க அனுமதிக்குமாறு சீரம் நிறுவனம் கடந்த 6-ந் தேதி விண்ணப்பித்திருந்த நிலையில், அந்த முன்மொழிவுக்கு மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.

Novavax Inc உடன் இணைந்து, ஒமைக்ரானுக்கு எதிரான தடுப்பூசியை பரிசோதனை செய்வதற்கும், பகுப்பாய்வு செய்வதற்கும் சீரம் நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.