ஆன்லைன் மூலம் எப்படி TD & RD கணக்கினை முன் கூட்டியே முடித்துக் கொள்வது?

அஞ்சலகத்தில் வழங்கப்படும் பிரபலமான திட்டங்களில் ஒன்று டைம் டெபாசிட் மற்றும் மற்றொன்று தொடர் வைப்பு நிதி திட்டமாகும். இது சாமானியர்களுக்கு ஏற்ற முதலீட்டு திட்டங்களாக பார்க்கப்படுகின்றது.

ஏனெனில் இந்த திட்டங்களில் நம்மால் முடிந்த சிறு தொகைகளை கூட சேமிக்க முடியும். வட்டி விகிதம் உண்டு. பங்கு சந்தை அபாயம் இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக வங்கிகளை விட வட்டி விகிதமும் அதிகம்.

இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகளாகும். இதே டைம் டெபாசிட் என எடுத்துக் கொண்டாலும் 5 ஆண்டு திட்டங்கள் வரையில் உள்ளது.

சாமானியர்கள் விரும்பும் அஞ்சலகத்தின் RD திட்டம்.. எப்படி தொடங்குவது.. டெபாசிட்?

வட்டி விகிதம்

வட்டி விகிதம்

டைம் டெபாசிட்டினை பொறுத்தவரையில் 1 வருட டெபாசிட் திட்டம், 2 வருடம், 3 வருடம், 5 வருடம் என டெபாசிட் திட்டங்கள் உள்ளன. இதில் ஓராண்டு, 2 மற்றும் 3 ஆண்டுகளுக்கு வட்டி விகிதம் 5.5% ஆகும். இதே 5 ஆண்டு திட்டத்தில் 6.7% வட்டி விகிதமாகும். இதே தொடர் வைப்பு நிதி திட்டத்திற்கு 5.8% வட்டி விகிதமாகும்.

நெகிழ்வான விஷயங்கள்

நெகிழ்வான விஷயங்கள்

மேலும் இந்த திட்டங்களை நேரடியாக சென்று அஞ்சலகத்திலும் தொடங்கிக் கொள்ளலாம். ஆன்லைனிலும் தொடங்கிக் கோள்ளலாம். முன் கூட்டியே முடித்துக் கொள்ளும் வசதியும் உண்டு. ஆரம்பத்தில் குறைவாக முதலீடு செய்தாலும், இடையில் அதிகரித்துக் கொள்ளும் வசதியையும் கொண்டுள்ளது. அதோடு முதிர்வு காலம், அதிக வட்டியும், எளிதில் ஆன்லைனில் தொடங்கிக் கொள்ளும் வசதியும், ஆன்லைனிலேயே முடித்துக் கொள்ளும் வசதியும் உண்டு.

TD: பார்மினை பூர்த்தி செய்து கொடுக்கலாம்
 

TD: பார்மினை பூர்த்தி செய்து கொடுக்கலாம்

இதில் தொடங்கிய ஆறு மாதத்திற்கு முன்பு முடித்துக் கொள்ள முடியாது. இந்த டைம் டெபாசிட் அக்கவுண்ட்டினை முன் கூட்டியே முடித்துக் கொள்ள Application for pre mature closure of account என்பதை பூர்த்தி செய்து, அஞ்சலகத்தில் கொடுக்க வேண்டும். இதனுடன் பாஸ்புக்கினையும் இணைத்துக் கொடுக்க வேண்டும். எனினும் விரைவில் இந்த செயல்பாட்டினை முடித்துக் கொள்ள ஆன்லைனில் கொடுக்கலாம்.

RD: எப்படி முன் கூட்டியே முடிக்கலாம்

RD: எப்படி முன் கூட்டியே முடிக்கலாம்

இதன் முதிர்வு காலமும் 5 ஆண்டுகள் தான். இதனையும் இடையில் முடித்துக் கொள்ள நேரிடையாக Application for pre mature closure of account என்பதை பூர்த்தி செய்து, அஞ்சலகத்தில் கொடுக்கலாம். இதனை ஆன்லைனிலும் முடித்துக் கொள்ளலாம்.

 TD & RD: ஆன்லைனில் எப்படி?

TD & RD: ஆன்லைனில் எப்படி?

  • ஆன்லைனில் இந்த கணக்கினை இடையில் முடித்துக் கொள்ள, அஞ்சலகத்தின் இணைய வங்கி கணக்கு ஆக்டிவேட் செய்திருக்க வேண்டும்.
  • அதன் பிறகு https://ebanking.indiapost.gov.in/ என்ற இணைய பக்கத்திற்கு சென்று ஐடி மற்று பாஸ்வேர்டு கொடுத்து லாகின் செய்து கொள்ளுங்கள்.
  • User ID -யை கொடுத்து வெரிபிகேஷன் எழுத்துகளையும் பதிவிட்டு லாகின் என்பதை கிளிக் செய்யவும்.
  • இதன் பிறகு உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும். ஓடிபியை பதிவு செய்து, Confirm என்பதை கிளிக் செய்யவும்.
  • இது நெட் பேங்கிங் பக்கத்தில் தொடங்கும். அதில் ஜெனரல் சர்வீசஸ் என்ற ஆப்சனில், service Requests என்பதையும் கிளிக் செய்ய வேண்டும்.
  • service Requests என்ற ஆப்சனில், new requests என்ற ஆப்சன் இருக்கும். அதனை கிளிக் செய்தால் அதில் Closure/ Pre-closure of RD and TD accounts என்ற ஆப்சன் இருக்கும்.
  • அதன் பிறகு உங்களுக்கு எந்த கணக்கினை Close செய்ய வேண்டும் என்பதை கிளிக் செய்யவும்.
  • அதன் பிறகு GO என்ற ஆப்சனை கிளிக் செய்து, டெபாசிட் அக்கவுண்ட் நம்பரையும் கொடுக்கவும்.
  • அதன் பிறகு உங்களது Credit account-னையும் கொடுக்க வேண்டும். எந்த கணக்கில் உங்களுக்கு பணம் திரும்ப பெற வேண்டுமோ அந்த கணக்கினை கொடுங்கள்.
  • அதன் பிறகு Submit Online என்பதையும் கொடுக்க வேண்டும். இது அடுத்த பக்கத்தில் தொடங்கும். அதன் பிறகு transaction password-னையும் கேட்கும்.
  • அதனையும் பதிவிட்டு சப்மிட் செய்து கொள்ளுங்கள். நீங்கள் வெற்றிகரமாக சப்மிட் செய்து விட்டால், உங்களுக்கு reference number கிடைக்கும்.
  • இதனை பிடிஎஃப் பார்மேட்டில் டவுன்லோடும் செய்து கொள்ளலாம். இதனை செய்த 24 மணி நேரத்திற்குள் உங்களது கணக்கில் பணம் கிரெடிட் ஆகி விடும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

how to pre close of Post office time deposit and RD account in online?

how to pre close of Post office time deposit and RD account in online?/ஆன்லைன் மூலம் எப்படி TD & RD கணக்கினை முன் கூட்டியே முடித்துக் கொள்வது?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.