ஆரத்தழுவி வரவேற்ற தவெக: ஆதரவு கடிதத்தை விஜய்யிடம் வழங்கிய காங்கிரஸ்! – அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் பரபரப்பாக நடந்துமுடிந்திருக்கிறது. 108 இடங்களில் தன் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது, த.வெ.க. தமிழ்நாட்டின் முதல்வராக த.வெ.க தலைவர் விஜய் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும்படி தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரிடம் விஜய் கடிதம் வழங்கியிருக்கிறார். இன்று தமிழ்நாடு வந்திருக்கும் ஆளுநரை நேரில் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன.

இதற்கிடையில், சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 118 சட்ட மன்ற உறுப்பினர்கள் தேவைப்படும் சூழலில், காங்கிரஸ் சில நிபந்தனைகளுடன் த.வெ.க-வுக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து தமிழ்நாடு சட்டமன்றத்தின் காங்கிரஸ் குழுத் தலைவராக ராஜேஷ் குமார் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டார். இதற்கிடையில், காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொருப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டவர்களுடன், வெற்றிப்பெற்ற காங்கிரஸ் வேட்பாளர்கள் பனையூரில் த.வெ.க தலைவர் விஜய்யை நேரில் சந்தித்தனர். அவர்களை வரவேற்ற செங்கோட்டையன், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட த.வெ.க நிர்வாகிகள் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆரத்தழுவி வரவேற்றனர். அதைத் தொடர்ந்து காங்கிரஸ் நிர்வாகிகள் தங்கள் ஆதரவு கடிதத்தை த.வெ.க தலைவர் விஜய்யிடம் வழங்கியிருக்கின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.