தனுஷுடன் லஞ்ச்… யார் அந்த பாப்பா? வைரல் போட்டோ

Dhanush Viral Photo Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாராகும் வாத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் இந்த படத்திற்கு சார் என்று டைட்டில வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்துடன் சேர்த்து, தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் தயாராகி வரும் நானே வருவேன் படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த மாத இறுதியில் தனது மனைவியை பிரிவதாக அறிவித்தார். நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட தனுஷ் தற்போது 18 வருடங்களுக்கு பின் பிரவதாக அறிவத்தது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் நீங்கள் பிரியக்கூடாது என்று வேண்டுகோள் விடுத்தனர்.

ஆனாலும் தங்களது முடிவில் இருந்த மாறாத தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் தங்களது படம் தொடர்பான பணிகளை கவனிக்க சென்றுவிட்டனர். இந்நிலையில், பிரிவு அறிவிப்புக்கு பின் சமீபத்தில் நடிகர் தனுஷ் தனது மூத்த மகன் யாத்ராவுடன் ஊட்டிலயில் இருந்தபடி புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.  இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவியது.

இந்நிலையில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் சம்யுக்தா மேனன் நடிக்கும் வாத்தி படத்தின் படத்தின் பணியை மீண்டும் தொடங்க தனுஷ் ஹைதராபாத் திரும்பியுள்ளார். தெலுங்கு தமிழ் இந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியாகும் இந்த படத்திற்கு தமிழில் வாத்தி என்றும் இந்தி சார் என்றும் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்.  ஹைதராபாத்தில் உள்ள 1980 என்ற மிலிட்டரி ஹோட்டலில் ஒரு பெண்ணுடன் அமர்ந்து சாப்பிடும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

கருப்பு நிற ஹூடி மற்றும் தொப்பியை அணிந்துள்ள தனுஷ் மற்றும் இந்த இளம் பெண் சாப்பிட்டக்காண்டிருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், அந்த இளம்பெண் குறித்து ஆர்வத்துடன் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். தற்போது இந்த புகைப்படம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.

தனுஷின் நடிப்பில் அடுத்து மாறன் ஹாலிவுட் அறிமுகமான ‘தி கிரே மேன்’ மற்றும் மற்றும் சன் பிக்சர்ஸ் தயாரித்த ‘திருச்சிற்றம்பலம்’ ஆகிய படங்கள் வெளியீட்டிற்கு தயாராக உள்ளன. இதில் மாறன் படத்தில் மாளவிகா மோகனன் நாயகியாக நடித்துள்ள நிலையில், திருச்சிற்றம்பலம் படத்தில், நித்யா மேனன், ராஷி கண்ணா மற்றும் பிரியா பவானி ஷங்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.