புரோ கபடி லீக்: யு மும்பாவிடம் வீழ்ந்தது தமிழ் தலைவாஸ்

பெங்களூரு,  8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் யு மும்பா அணியும், தமிழ் தலைவாஸ்  அணியும் மோதின. இந்த போட்டியானது இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 35-33 என்ற புள்ளிகள் கணக்கில் யு மும்பாவிடம் தோல்வியடைந்தது. தற்போது தமிழ் தலைவாஸ் அணி 15 போட்டிகளில் விளையாடி 5 வெற்றியுடன் புள்ளிகள் பட்டியலில் ஆறாம் இடத்தில் உள்ளது.

அமெரிக்காவில் திருவள்ளுவர் பெயரில் சாலை…

வாஷிங்டன், உலக பொதுமறையான திருக்குறளை எழுதிய திருவள்ளுவரை சிறப்பிக்கும் வகையில், இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரியில், தமிழக அரசு சார்பில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் பல்வேறு பள்ளிகள், கல்லூரிகள், சாலைகளுக்கு திருவள்ளுவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இருப்பினும் திருவள்ளுவரின் சிறப்பு என்பது தேசங்களை கடந்து பரவி இருக்கிறது என்பதற்கு சான்றாக, தற்போது  அமெரிக்காவில் முதல் முறையாக ஒரு சாலைக்கு திருவள்ளுவரின் பெயர் சூட்டப்பட இருக்கிறது. அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் உள்ள பேர்பேக்ஸ் … Read more

நீட் விவகாரம்: சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை நடத்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

NEET Exemption for Tamil Nadu: 143 நாட்கள் நீட் மசோதாவை கிடப்பில் போட்டுவிட்டு தற்போது திருப்பி அனுப்பியுள்ளார் ஆளுநர் என்று இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் நீட் விவகாரம் குறித்து தெரிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து தமிழக அரசு கோரிக்கை எழுப்பி வந்த நிலையில், தமிழக அரசு உயர்மட்ட கமிட்டி அமைத்து நீட் தேர்வால் மாணவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்து, … Read more

#BigBreaking || இங்கிலாந்து அணி ஆல்-அவுட்., உலக கோப்பையை 5 வது முறையாக வெல்ல., இந்திய அணிக்கு வைக்கப்பட்ட இலக்கு.! 

ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி ஆட்டத்தில் இன்று இந்திய அணியும், இங்கிலாந்து அணியும் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்ய முடிவு செய்து. அதன்படி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஜார்ஜ் தோமஸ் 27 தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவரை தொடர்ந்து அணியின் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு அடுத்தடுத்த இந்திய அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனை … Read more

இன்றைய ராசி பலன் | 06/02/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today’s Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam 12 ராசிகளுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2022 : https://bit.ly/3srMOsv Source link

நீட் தேர்வில் இருந்து விலக்கு : பிப்.8ல் சட்டமன்ற சிறப்பு கூட்டம் – சபாநாயகர் அப்பாவு <!– நீட் தேர்வில் இருந்து விலக்கு : பிப்.8ல் சட்டமன்ற சிறப்பு… –>

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரும் மசோதாவை மீண்டும் நிறைவேற்ற வரும் 8ஆம் தேதி சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், வரும் செவ்வாய்கிழமை காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் சிறப்புக் கூட்டம் நடைபெறும் என தெரிவித்தார். மேலும், மாணவர்களின் நலனுக்காகவே சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் நடத்தப்படுவதாக குறிப்பிட்ட சபாநாயகர், கொரோனா பரிசோதனை மேற்கொண்டவர்கள் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்க … Read more

பிப்ரவரி 5: தமிழக நிலவரம்; மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 5) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,04,762 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண் மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் பிப். 4 வரை பிப். … Read more

தமிழ் மொழிக்கு முக்கிய பங்காற்றியுள்ளார் ராமானுஜர்.. – பிரதமர் மோடி பேச்சு

ஹைதராபாத்: வைணவ ஆச்சாரியார் ராமானுஜர் அவதரித்து 1000 ஆண்டு நிறைவுற்றதை கொண்டாடும் வகையில், ஹைதராபாத்தை அடுத்துள்ள முச்சிந்தல் பகுதியில், சின்ன ஜீயர் ஆஸ்ரமத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் மிக பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ள இடத்தில் பத்ம பீடத்தின் மீது 216 அடிஉயரத்தில் ராமானுஜருக்கு பஞ்சலோக சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை இன்று திறந்து வைக்கப்பட்டது. இவ்விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ஹைதராபாத் நகருக்கு விமானம் மூலம் வந்தார். ஆனால் பிரதமரை வரவேற்க தெலங்கானா … Read more

இந்தியாவின் கிராமப்புறத்தில் முதல் 5ஜி சோதனை: ஏர்டெல் – எரிக்ஸன் கூட்டு முயற்சி

5ஜி தொழில்நுட்பம் இந்தியாவில் இருக்கும் டிஜிட்டல் பாகுபாட்டைச் சரிசெய்யும் என்று காட்டும் விதமாக, முதல் முறையாக இந்தியாவின் கிராமப்புறப் பகுதியில் 5ஜி சோதனை ஓட்டத்தை ஏர்டெல் நிறுவனமும், மொபைல் கருவி உற்பத்தியாளரான எரிக்ஸன் நிறுவனமும் நடத்திக் காட்டியுள்ளன. டெல்லி நகரத்தைத் தாண்டி, பாய்பு பிரம்மணன் கிராமத்தில் இந்த சோதனை நடைபெற்றது. இதற்காக பிரத்யேக 5ஜி அலைக்கற்றை, தொலைத்தொடர்புத் துறையால் ஒதுக்கப்பட்டிருந்தது. மேம்படுத்தப்பட்ட மொபைல் பிராட்பேண்ட் மற்றும் நிலையான கம்பியில்லா இணப்பு சேவைகள் வழியாக எல்லாப் பகுதிகளிலும் அதிவேக … Read more

திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு செம குட் நியூஸ் சொன்ன தேவஸ்தானம்!

திருமலை திருப்பதிக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தனர். கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக திருப்பதியில் சாமி தரிசனத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் முக்கியமாக கட்டண தரிசனம், இலவச தரிசனம் ஆகியற்றுக்கான டிக்கெட்டுகள் கடந்த பல மாதங்களாக ஆன்லைனில் மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றன. பிப்ரவரி மாதத்துக்கான 300 ரூபாய் கட்டண தரிசன டிக்கெட்டுகள் ஜனவரி மாத இறுதியில் வழங்கப்பட்டன. ஒரு நாளைக்கு 12 ஆயிரம் டிக்கெட்டுகளஅ வீதம், 28 … Read more