புதிய iPhone SE 3 விலை இவ்வளவு தானா – இந்தியர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க காத்திருக்கும் ஆப்பிள்!

இந்தியாவில் Apple நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் வெளியீட்டு நிகழ்வை, அதன் விரும்பிகள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த சூழலில், வெளியாகும் ஆப்பிள் தகவல் சாதனங்கள் குறித்த தகவல்கள் அவ்வபோது கசிந்தவன்ணம் உள்ளன.

அந்த வகையில், தற்போது ஆப்பிள் iPhone SE விலை குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, புதிய ஆப்பிள் ஐபோன் எஸ்இ ஸ்மார்ட்போனின் விலை சுமார் ரூ.25,000க்கு இந்திய சந்தையில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Asus வெளியிட்ட கைக்கு அடக்கமான போன்… ஆனா பவர்ல இத அடிச்சுக்க முடியாது!

இந்த தகவல் ஆப்பிள் விரும்பிகளை மேலும் குஷிப்படுத்தி உள்ளது. அதாவது, பழைய ஐபோன் எஸ்இ வெளியீட்டு விலையை விடவும், இந்த முறை 99 டாலர்கள், விலை குறைவாக ஐபோன் எஸ்இ களம் காண்கிறது. இந்திய மதிப்பில் இது ரூ.7,500 வரை விலை குறைவாகும்.

ஐபோன் எஸ்இ 3 அம்சங்கள்

இந்தாண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் இந்த குறைந்த விலை ஐபோன் வெளியாகலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் வரிசையில் சக்கைபோடுபோட்ட ஐபோன் எக்ஸ் ஆர் டிசைனை, புதிய ஐபோன் எஸ்இ 3 கொண்டுள்ளதால், நாட்ச் திரை இதில் இடம்பெறுவது உறுதியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல், குறைந்தளவு பெசல்களே இந்த ஸ்மார்ட்போன் திரையில் இருக்கும் என்பதையும் உறுதிபடுத்தியுள்ளது.

ஐபோன் எஸ்இ 3 (iPhone SE 3) ஸ்மார்ட்போனில் 3ஜிபி ரேமும், 128ஜிபி ஸ்டோரேஜ் மெமரி இருக்கும் என்று தெரிகிறது. ஏ15 பயோனிக் சிப் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தலைமுறைக்கான 5ஜி ஆதரவும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய குறைந்த விலை ஐபோனில், டச் ஐடி கொடுக்கப்படாது. பேஸ் அன்லாக் அல்லது கடவுசொல் மூலமாக மட்டுமே இந்த ஸ்மார்ட்போனை திறக்க முடியும். இதற்காக, இரவு நேரங்களிலும் தெளிவாக முகத்தைக் கண்டறியும் கேமரா முன்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இது தெளிவான செல்பி எடுக்கவும் பயனர்களுக்கு உதவும்.

ஐபோன் எஸ்இ 3 கேமரா

கேமராவைப் பொருத்தவரை, பின்பக்கம் 12 மெகாபிக்சல் ஒற்றைக் கேமராவுடன் ஐபோன் எஸ்இ 3 உள்ளது. இதனைக் கொண்டு 4k தரத்திலான வீடியோக்களை பயனர்கள் எடுக்க முடியும். இந்த கேமராவில் தெளிவான படங்களை எடுக்க ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷனும் கொடுக்கப்பட்டுள்ளது.

iPhone-ஐ மிஞ்சும் கேமரா… Oppo Find X5 Pro 5G போனில் எல்லாமே ஸ்பெஷல் தான்!

மேலும், யூஎஸ்பி டைப்-சி இணைப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகலாம் என கருதப்படுகிறது. 6” அங்குல எல்சிடி திரையுடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் பயனர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கெத்து காட்டும் Elon Musk – உக்ரைனுக்கு Starlink இண்டர்நெட் ரெடி… அதிர்ச்சியடைந்த ரஷ்யா!

இந்திய மதிப்பில் சுமார் 25,000 ரூபாய் இதன் தொடக்க விலையாக இருக்கும் என்று நம்பப்படும் நிலையில், கூடுதலாக ஐபோன் எஸ்இ ப்ளஸ் மாடலும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் புதிய 27” அங்குல ஐமேக், எம்1 ப்ரோ மற்றும் எம்1 மேக்ஸ் சிப்செட்கள் கொண்ட பிரீமியம் மேக் மினி மாடல்களையும் ஆப்பிள் அறிமுகம் செய்யலாம் என தெரிகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.