பலத்த பிரச்சனையை எதிர்கொள்ள போகும் 51 நிறுவனங்கள்.. ரஷ்யாவால் வந்த விளைவு.. ஏன்?

ரஷ்யா – உக்ரைன் போருக்கு மத்தியில் பல்வேறு நாடுகள் பொருளாதார தடையை விதித்து வருகின்றன. இதற்கிடையில் பல்வேறு நாட்டினை சேர்ந்த நிறுவனங்களும் ரஷ்ய நிறுவனங்களுடனான வணிக உறவினையே முறித்துக் கொண்டு வருகின்றன.

இதற்கிடையில் மூடிஸ் முதலீட்டாளர் சேவை நிறுவனம், 51 ரஷ்ய நிறுவனங்களின் ரேட்டிங்ஸை குறைக்க திட்டமிட்டுள்ளது.

ரீடைல் பணவீக்கம் 6 மாத உயர்வு..!

இது ஏற்கனவே பங்கு சந்தையில் பெரும் சரிவினைக் கண்டுள்ள நிலையில், மேற்கொண்டு சரிவினைக் காண வழிவகுக்கலாம்.

தர மதிப்பீடு

தர மதிப்பீடு

பிப்ரவரி 25 அன்று ரஷ்யா உக்ரைன் மீதான படையெடுப்புக்கு அதிபர் விளாடிமிர் புதின் ஒப்புதல் அளித்த பிறகு, மூடிஸ் நிறுவனத்தின் இந்த அறிவிப்பானது வந்துள்ளது. தற்போதைய நிலையில் ரஷ்யாவில் Baa3 மற்றும் உக்ரைன் B3 மதிப்பீட்டினையும் கொண்டுள்ளது.. இது ரஷ்யா – உக்ரைன் போருக்கு மத்தியில் எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கையாகும்.

எதெல்லாம் எடுத்துக் கொள்ளப்படும்

எதெல்லாம் எடுத்துக் கொள்ளப்படும்

இந்த போர் பதற்றத்தின் மத்தியில் பாதிக்கப்பட்ட நிறுவனங்களின் மதிப்பீடுகளை குறைக்கலாம். இந்த மறுஆய்வில் ரஷ்யாவின் இறையாண்மை மதிப்பீடுகள் மற்றும் நாட்டின் உச்ச வரம்புகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். பாதிக்கப்பட்ட கார்ப்பரேட்டுகளின் தனிப்பட்ட கடன் காரணிகள், கடன் தரத்தின் மீது தடைகளின் விளைவு உள்ளிட்ட காரணிகள், நிதி நெருக்கடியின் போது கார்ப்பரேட்டுகளுக்கு சாத்தியமான அரசின் ஆதரவுகள் என பலவும் கருத்தில் கொள்ளப்படும்.

லிஸ்டில் யாரெல்லாம்
 

லிஸ்டில் யாரெல்லாம்

மூடிஸ் நிறுவனத்தின் இந்த அறிவிப்பில் ரோஸ்நெப்ட் மற்றும் காஸ்ப்ரோம் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களும் அடங்கும் என கூறப்படுகிறது. உக்ரைன் மீதான படையெடுப்பு, ரஷ்ய நிறுவனங்களை மிக கடுமையாகப் பாதித்துள்ளது. ஏற்கனவே விதிக்கப்பட்ட பொருளாதார தடையால் அவற்றின் பங்கு விலைகள் மோசமான சரிவினைக் கண்டன.

1 டிரில்லியன் ரூபிள் பங்கு திட்டம்

1 டிரில்லியன் ரூபிள் பங்கு திட்டம்

இதற்கிடையில் இப்பிரச்சனையை எதிர்கொள்ளும் விதமாக ரஷ்ய அரசு, 1 டிரில்லியன் ரூபிள் மதிப்பிலான பங்குகளை வாங்குவதற்கான திட்டத்தினை அரசாங்கம் அறிவித்துள்ளது. எனினும் ரஷ்யா – உக்ரைன் பதற்றத்தில் மத்தியில் விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகள், ரஷ்யாவின் பொருளாதார வளர்ச்சியில் பாதிப்பினை ஏற்படுத்தலாம். இதனால் அதன் மதிப்பீடுகள் தரமிறக்கப்படலாம்.

மறுஆய்வில் தெரியலாம்

மறுஆய்வில் தெரியலாம்

எனினும் இதெல்லாம் ரஷ்யாவின் பொருளாதாரத்தில் மிகக் குறைந்த தாக்கத்தினையே ஏற்படுத்தும் என்று ஒரு தரப்பு கூறுகின்றது. இது மறு ஆய்வின் போது மதிப்பீட்டில் எதிரொலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் முழு தாக்கமும் மூடீஸின் மறு ஆய்வறிக்கை வெளியானால் மட்டுமே தெரியவரும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Russia – ukraine crisis! Moody’s may downgrade ratings of 51 Russian companies on review

Russia – ukraine crisis! Moody’s may downgrade ratings of 51 Russian companies on review/பலத்த பிரச்சனையை எதிர்கொள்ள போகும் 51 நிறுவனங்கள்.. ரஷ்யாவால் வந்த விளைவு.. ஏன்?

Story first published: Wednesday, March 2, 2022, 18:34 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.