உலக வங்கியின் உதவியுடன் இரத்தினபுரி மாவட்டத்தில் வீதி அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பம்

உலக வங்கியின் உதவியுடன் முழு நாட்டையும் உள்ளடக்கிய 3000 கிலோமீற்றர் வீதிகளை அபிவிருத்தி செய்யும் ஒருங்கிணைக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் (ICDP) இரத்தினபுரி மாவட்டத்தில் பல வீதிகளின் அபிவிருத்தித் திட்டங்கள் ஆளும் தரப்பு பிரதம கொறடா நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.

அதன்படி, கும்பகொட ஆரா சந்தியிலிருந்து கடதாசிச் தொழிற்சாலை தொழிற்சாலை – தலாவ வீதி (4.15 கி.மீ.), கலகெடி ஆரா – நுகே குறுக்கு வீதி (1 கி.மீ.), ஹிங்குர ஆரா – கெட்டகல் ஆரா வீதி, ஹிங்குரா ஆரா பழைய வீதி, ஹிங்குரா ஆரா கிராம வீதி (கி.மீ. 4.4), வெலேகும்புர சீதாகல, உட கந்த வீதி (8.10 கி.மீ), பம்பஹின்ன கிஞ்சிகுனே வீதி (2.8 கி.மீ) மற்றும் தம்புலுவான கல்துர வீதி (2 கி.மீ.) என்பவற்றின் அபிவிருத்தித் திட்டங்களுக்காக 833 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ 4.15 கிலோமீற்றர் நீளமான கும்பகொட அர சந்தியிலிருந்து கடதாசி ஆலை – தலாவ வீதியின் அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைப்பதை படத்தில் காணலாம்.

ஊடகப் பிரிவு
நெடுஞ்சாலை அமைச்சு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.