தங்கம் விலை மீண்டும் குறையலாம்.. எவ்வளவு சரியும்..வாங்கலாமா.. நிபுணர்களின் செம கணிப்பு..!

தங்கம் விலையானது கடந்த வாரத்தில் புதிய வரலாற்று உச்சத்தினை எட்டிய நிலையில், வார இறுதியில் சற்றே சரிவினைக் கண்டது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ள நிலையில், வரும் வாரத்திலும் இந்த போக்கு தொடரலாமா? அப்படி குறைந்தால் எவ்வளவு குறையலாம்? நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

இதற்கிடையில் கடந்த வாரத்தில் சர்வதேச சந்தையில் என்ன நிலவரம்? இந்திய சந்தையில் என்ன நிலவரம்? ஆபரணத் தங்கத்தின் விலை எப்படியிருந்தது? முக்கிய காரணிகள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.

விலை குறையலாம்?

தங்கம் விலை குறையலாம் என்ற கணிப்பானது முதலீட்டாளர்கள் மற்றும் தங்க ஆர்வலர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தினை தூண்டியுள்ளது. கடந்த வாரத்தில் உக்ரைன் – ரஷ்யா பதற்றத்தின் மத்தியில் தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் வரலாற்று உச்சத்தினையே உடைத்துக் காட்டியுள்ளது. எனினும் வாரத்தின் பிற்பாதியில் தங்கம் விலையானது சரிவினைக் கண்டது. இது வரும் வாரத்திலும் தொடரலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

ஏன் சரிவு

ஏன் சரிவு

இது முதலீட்டாளர்கள் புராபிட் புக்கிங் செய்த காரணத்தினால் இருந்திருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும் மார்ச் 15 மற்றும் மார்ச் 16ல் நடக்கவிருக்கும் ஃபெடரல் ரிசர்வ் வங்கி கூட்டத்தில், கட்டாயம் இந்த முறை வட்டி அதிகரிப்பு இருக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு வரும் வாரத்திலும் தங்கம் விலை குறைய காரணமாக அமையலாம். ஏனெனில் வட்டி விகிதம் அதிகரிக்கும் போது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் இருந்து முதலீடுகள் வெளியேறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம்.

பத்திர சந்தை ஏற்றம்
 

பத்திர சந்தை ஏற்றம்

இதற்கிடையில் தொடர்ந்து அமெரிக்க பத்திர சந்தையானது ஏற்றம் கண்டு வரும் நிலையில், தங்கத்தில் முதலீடுகள் குறையலாம். எப்படியிருப்பினும் நிலவி வரும் உக்ரைன் ரஷ்யா பதற்றமானது மேற்கொண்டு தங்கம் விலையானது பெரியளவில் குறைய விடாது என்றாலும், தங்கம் விலையானது பெரியளவில் அதிகரிக்கவும் செய்யாது எனலாம். இதற்கிடையில் சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது வரும் வாரத்தில் பெரியளவில் சரிவினை காணாவிட்டாலும் 1950 – 1940 டாலர்கள் வரையில் தொடலாம்.

அதிகரிக்கும் டென்சன்

அதிகரிக்கும் டென்சன்

ரஷ்யா – உக்ரைன் இடையேயான பதற்றத்தின் மத்தியில் பல்வேறு நாடுகளும் ரஷ்யா மீது தடைகளை விதித்து வருகின்றன. இதன் காரணமாக ரஷ்யாவை பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்த அண்டை நாடுகள் திட்டமிட்டுள்ளன. ஆரம்பத்தில் பொருளாதார தடை, எண்ணெய் இறக்குமதிக்கு தடை, முக்கிய இறக்குமதிகளுக்கு தடை, இப்படி ரஷ்யாவுக்கு அடி மேல் அடியாக கொடுத்து வருகின்றன. இதற்கு ரஷ்யா தரப்பில் எந்த விதமான பதிலும் வராவிட்டாலும் கூட, நிச்சயம் ரஷ்ய நிறுவனங்களும், தனி நபர்களும் பொருளாதார ரீதியாக பெரும் பின்னடைவை சந்திக்கலாம். இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு சாதகமாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

40 ஆண்டுகளில் இல்லாத உச்சம்

40 ஆண்டுகளில் இல்லாத உச்சம்

குறிப்பாக மார்ச் 16 அன்று ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக வட்டியில்லா முதலீடான தங்கம் விலை சரிவினை காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வட்டி விகிதம் குறைந்தபட்சம் 25 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. எனினும் ஒரு தரப்பு 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனெனில் தொடர்ந்து அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை காரணமாக பணவீக்கமான அமெரிக்காவில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ளது.

மோதல் அதிகரிக்கலாம்

மோதல் அதிகரிக்கலாம்

இதற்கிடையில் தொடர்ந்து உக்ரைன் – ரஷ்யா இடையேயான மோதல் போக்கு இன்னும் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யாவின் அண்டை நாடுகளில் அமெரிக்காவும், ரஷ்யாவுக்கு ஆதரவாக சீனாவும் போர் பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது மேற்கொண்டு இன்னும் நெருக்கடியான நிலையை உருவாக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

திரவத் தங்கம்

திரவத் தங்கம்

திரவத் தங்கம் என்று அழைக்கப்படும் கச்சா எண்ணெய் விலையானது ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதத்தில் 8% அதிகரித்துள்ளது. மார்ச் மாதத்தில் கிட்டதட்ட இதுவரையில் 15% அதிகரித்துள்ளது. இந்த போக்கு இன்னும் தொடரலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இது மேற்கொண்டு பணவீக்கத்தினை ஊக்கப்படுத்தலாம் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. இது அமெரிக்கா மட்டும் அல்ல, இந்தியா போன்ற அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

பாதுகாப்பு புகலிடத்துக்கு ஆதரவு

பாதுகாப்பு புகலிடத்துக்கு ஆதரவு

தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கமானது சங்கிலித் தொடராக சர்வதேச பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தலாம். ஆக பாதுகாப்பு புகலிடமாக சிறந்து விளங்கும் தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று தடுமாற்றத்தில் இருந்தாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

டெக்னிக்கல் பேட்டர்ன்

டெக்னிக்கல் பேட்டர்ன்

தங்கம் விலையானது டெக்னிக்கலாக பார்க்கும்போது சர்வதேச சந்தையில் மீடியம் டெர்மில் சற்று குறைந்து, பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. ஆக வாரத் தொடக்கத்தில் தங்கம் விலையானது பெரியளவில் சரிவினைக் காணாவிட்டாலும், பெரியளவில் ஏற்றம் காணாது என எதிர்பார்க்கலாம். இதேபோலத் தான் இந்திய சந்தையிலும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

COMEX தங்கம் விலை

COMEX தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது கடந்த வாரத்தின் தொடக்கத்தில் ஏற்றத்திலேயே தொடங்கியது. இது கடந்த திங்கட்கிழமையன்று 1978.50 டாலர்களாக தொடங்கிய நிலையில், செவ்வாய்கிழமையன்று அதிகபட்சமாக 2078.80 டாலர்களாக தொட்டது. எனினும் அதன் பிறகு சரியத் தொடங்கிய தங்கம் விலையானது தொடர்ந்து சரிவினையே கண்டு வந்தது. குறிப்பாக வார இறுதி வர்த்தக நாளான வெள்ளிக்கிழமையன்று குறைந்தபட்சமாக 1960.60 டாலர்களை தொட்டது. எனினும் முடிவில் 1992.25 டாலர்களாகவும் முடிவுற்றது. இது மீடியம் டெர்மில் நாளை தொடக்கத்தினை பொறுத்தும், ஃபெடரல் வங்கியின் அறிவிப்பினை பொறுத்தும் இருக்கலாம். ஆக மீடியம் டெர்ம் முதலீட்டாளார்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வாங்கலாம்.

COMEX வெள்ளி விலை

COMEX வெள்ளி விலை

தங்கத்தின் விலையை போலவே, வெள்ளியின் விலை கடந்த வாரத்தில் தொடக்கத்தில் ஏற்றத்தில் தொடங்கி, முடிவில் சரிவில் முடிவடைந்துள்ளது. இது கடந்த திங்கட்கிழமையன்று 26.025 டாலர்களாக தொடங்கிய நிலையில், செவ்வாய்க்கிழமையன்று அதிகபட்சமாக 27.495 டாலர்களை தொட்டது. அதன் பிறகு சரியத் தொடங்கிய வெள்ளி விலையானது வியாழக்கிழமையன்று குறைந்தபட்சமாக 25.600 டாலர்கள் வரையில் சென்று, வெள்ளிக்கிழமையன்று முடிவில் 26.225 டாலர்களாக முடிவுற்றது. இது மீடியம் டெர்மில் நாளை தொடக்கத்தினை பொறுத்தே, இந்த வாரம் இருக்கும் என்பதால் முதலீட்டாளர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வாங்கலாம். நீண்டகால நோக்கில் வாங்கலாம்.

MCX தங்கம் விலை நிலவரம்

MCX தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது, கடந்த வாரத்தில் தொடத்தில் ஏற்றம் கண்டாலும், பிற்பாதியில் மீண்டும் சரிவினைக் கண்டது. இது கடந்த திங்கட்கிழமையன்று தங்கம் விலை தொடக்கத்தில் 10 கிராமுக்கு 53,266 ரூபாயாக தொடங்கிய நிலையில், செவ்வாய்கிழமையன்று அதிகபட்சமாக 55,558 ரூபாயினை தொட்டது. எனினும் அதன் பின்னர் சரியத் தொடங்கிய தங்கம் விலையானது வார இறுதி நாளான வெள்ளிக்கிழமையன்று குறைந்தபட்சமாக 52,240 ரூபாயினை தொட்டது. எனினும் முடிவில் 52,878 ரூபாயாகவும் முடிவுற்றது. இது வரும் வாரத்தில் வட்டி அதிகரிக்கப்பட்டால் இன்னும் குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

MCX வெள்ளி விலை

MCX வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் வெள்ளியின் விலையும் ஆரம்பத்தில் ஏற்றம் கண்டு, பின் சரிவில் காணப்பட்டது. கடந்த திங்கட்கிழமையன்று கிலோவுக்கு 70,297 ரூபாயாக தொடங்கியது. செவ்வாய்கிழமையன்று அதிகபட்சமாக 73,078 ரூபாயினை தொட்டது. எனினும் வியாழக்கிழமையன்று குறைந்தபட்சமாக 68,932 ரூபாயினையும் தொட்டது. அதன் பிறகு வெள்ளிக்கிழமையன்று சற்று அதிகரித்து, 70,370 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இது வரும் வாரத்தில் வட்டி அதிகரிக்கப்பட்டால் இன்னும் குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது இன்று கிராமுக்கு 4895 ரூபாயாகவும், சவரனுக்கு 39,160 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இது கடந்த திங்கட்கிழமையன்று, சவரனுக்கு 40,568 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. அதனுடன் ஒப்பிடும்போது இன்று சவரனுக்கு 1408 ரூபாய் குறைந்துள்ளது.

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலையும் மூன்று நாள் தவிர, மற்ற நாட்கள் அதிகரித்துள்ளது. கடந்த திங்கட்கிழமையன்று 10 கிராம் தூய தங்கத்தின் விலையானது 55,320 ரூபாயாக இருந்த நிலையில், இன்று அதன் விலை 53,400 ரூபாயாகும். ஆக மொத்தத்தில் நடப்பு வார தொடக்கத்தில் இருந்து 10 கிராம் தூய தங்கத்தின் விலையானது சற்று குறைந்து தான் காணப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளியின் விலையானது இன்று கிராமுக்கு 74.70 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 747 ரூபாயாகவும், கிலோவுக்கு 74,700 ரூபாயாகவும் உள்ளது. நடப்பு வார தொடக்கத்தில் 75,700 ரூபாயாக இருந்த கிலோ வெள்ளியின் விலை, இன்று 74,700 ரூபாயாக உள்ளது. இந்த வாரத்தில் வெள்ளியின் விலையும் சற்று குறைந்துள்ளது.

இந்த இடத்தில் வாங்கி வைக்கலாமா?

இந்த இடத்தில் வாங்கி வைக்கலாமா?

மீடியம் டெர்ம் வர்த்தகர்கள், வார கேண்டில், தினசரி கேண்டில் பேட்டர்ன் என அனைத்தும் நாளை எப்படி தொடங்குகிறது என்பதை பொறுத்து வாங்கலாம். நாளையின் சந்தையின் போக்கினையும் கண்கானித்து அதற்கேற்ப தீர்மானிக்கலாம். குறிப்பாக ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதத்தினை பொறுத்து வாங்கி வைக்கலாம். ஆக வரும் வாரத்தில் சற்று பொறுத்திருந்து வாங்குவது நல்லது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

gold price on march 13th 2022: gold prices may extend downward correction on hawkish fed stance

gold price on march 13th 2022: gold prices may extend downward correction on hawkish fed stance/தங்கம் விலை மீண்டும் குறையலாம்.. எவ்வளவு சரியும்..வாங்கலாமா.. நிபுணர்களின் செம கணிப்பு..!

Story first published: Sunday, March 13, 2022, 11:27 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.