தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை – தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தில் மட்டக்களப்பு கல்வி வலயம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பகுப்பாய்வின் படி மட்டக்களப்பு கல்வி வலயம் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் சித்தி பெற்ற அடிப்படையில், இலங்கையில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளதாக மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே வலயக் கல்விப் பணிப்பாளர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இலங்கையிலுள்ள 100 கல்வி வலயங்களுள் மட்டக்களப்பு கல்வி வலயம் 2 ஆம் இடத்தைப் பெற்றுள்ளது. மட்டக்களப்பு கல்வி வலயத்தில் இருந்து 2,050 பிள்ளைகள் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர்.

இவர்களுள் 449 பிள்ளைகள் வெட்டுப் புள்ளிக்கு மேல் சித்தி பெற்றுள்ளனர்.

2020ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுள் 433 மாணவர்கள் வெட்டுப் பள்ளிக்கு மேல் சித்தி பெற்று, அகில இலங்கை ரீதியில் ஐந்தாம் இடத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது என்றும் வலயக் கல்விப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.