ப்ளூ சட்டை மாறனின் 'வலிமை' விமர்சனம்: சார்பட்டா பட நடிகர் வேம்புலியின் பதிலடி..!

நடிகர் அஜித்தின் ‘ வலிமை ‘ படம் திரையிட்ட இடங்களில் எல்லாம் வரவேற்பை பெற்று வருகிறது. இரண்டு வருடங்களுக்கு பிறகு வெளியான அஜித் படம் என்பதால் ‘வலிமை’ பட ரிலீசை திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள். ரசிகர்களின் வரவேற்பை போலவே இந்தப்படத்திற்கு பலவிதமான நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்தது. அந்த வகையில் யூடியூப்பர் ப்ளு சட்டை மாறன் ‘வலிமை’ படம் குறித்தும், அஜித் குறித்தும் மோசமாக பேசியிருந்தார். இதற்கு ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ‘சார்பட்டா … Read more

உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் இந்திய மாணவன் பலி

ரஷ்ய படையினர், உக்ரைனின் கார்கிவ் நகரை இலக்கு வைத்து நடத்திய செல் வீச்சு தாக்குதலில் உக்ரைனில் கல்வி கற்று வந்த இந்திய மாணவன் உயிரிழந்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் இராணுவ தாக்குதலில் உக்ரைனில் கல்வி கற்று வந்த வெளியாட்டு மாணவன் உயிரிழந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும். உக்ரைனில் பல நாடுகளை சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இந்த மாணவர்களை அங்கிருந்து அழைத்துச் செல்ல பல நாடுகள் நடவடிக்கை எடுத்திருந்தன. இந்தியாவும் ரஷ்ய இராணுவம் … Read more

உக்ரைனுக்கு ஆதரவாக இருப்பதை நிரூபியுங்கள் என ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் செலன்ஸ்கி வலியுறுத்தல்.! <!– உக்ரைனுக்கு ஆதரவாக இருப்பதை நிரூபியுங்கள் என ஐரோப்பிய நாட… –>

ரஷ்யாவுடனான போர் 6ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், உக்ரைனுக்கு ஆதரவாக இருப்பதை நிரூபியுங்கள் என ஐரோப்பிய யூனியன் உறுப்பினர்களிடம் அதிபர் செலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய உக்ரைன் அரசு நேற்று விண்ணப்பத்திருந்த நிலையில், ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில் காணொலி மூலம் செலன்ஸ்கி உரையாற்றினார். அதில், உக்ரேனியர்கள் தங்களின் நிலத்திற்காகவும், சுதந்திரத்திற்காகவும் தொடர்ந்து போரிட்டு வருவதாக தெரிவித்தார். மேலும், தங்களை யாராலும் வீழ்த்த முடியாது என்றும் தாங்கள் வலிமையானவர்கள் என்றும் செலன்ஸ்கி குறிப்பிட்டார். இந்நிலையில், செலன்ஸ்கி … Read more

மஹா சிவராத்திரி கொண்டாட்டம்.! <!– மஹா சிவராத்திரி கொண்டாட்டம்.! –>

நாடு முழுவதும் மகா சிவராத்திரி விழா சிவபக்தர்களால் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. வடமாநிலங்களில் பெருங்கூட்டமாக பக்தர்கள் சிவாலயங்களில் திரண்டு வழிபாடு செய்தனர். உலகம் முழுவதுமுள்ள இந்துக்களால் மஹா சிவராத்திரி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மஹாராஷ்டிர மாநிலம் திரிம்பாக் நகரிலுள்ள திரிம்பகேஸ்வரர் கோயில் 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாக விளங்குகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மஹா சிவராத்திரிக்காக பக்தர்கள் திரண்டு வந்து சிவனை வழிபட்டனர். ஒடிஷா – புவனேஷ்வரில் உள்ள லிங்கராஜர் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மஹா சிவராத்திரி … Read more

தப்புக்கணக்கு போட்டுவிட்டார் புடின்… பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் காட்டம்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு நீடித்துவரும் நிலையில், ரஷ்ய ஜனாபதி புடின் தொடர்பில் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் காட்டமாக விமர்சித்துள்ளார். உக்ரைன் மீது 6வது நாளாக ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் எல்லையில் ரஷ்யா ஆயுதங்கள் மற்றும் துருப்புகளை குவித்து வந்தபோது, உலக நாடுகளை நெருக்கடிக்கு தள்ளும் ஒரு சூழல் ஏற்படாது என்றே உலக நாடுகள் நம்பி வந்தன. ஆனால் அமெரிக்கா மட்டும் ரஷ்யாவின் நகர்வுகளை கண்காணித்து வந்ததுடன், அதை வெளிப்படையாக அறிவித்தும் வந்துள்ளது. … Read more

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமீன் மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

சென்னை மாநகராட்சி 49-வது வார்டுக்குட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில் கள்ள ஓட்டுப்போட முயன்றதாக தி.மு.க. பிரமுகர் நரேஷ் என்பவரை தாக்கி அவரது சட்டையை கழட்டி கைகளை கட்டி இழுத்து வந்ததாக பதிவான வழக்கில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு சாலை மறியலில் ஈடுபட்டதாக அவர் மீது 2-வது வழக்கும், ரூ.5 கோடி மதிப்புள்ள மீன் வலை தொழிற்சாலை அபகரிப்பு தொடர்பாக 3-வது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போது ஜெயக்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் … Read more

உக்ரைன் சூழ்நிலையை மதிப்பிடுவதில் மத்திய அரசு தோற்றுவிட்டது: காங்கிரஸ் தலைவர் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கும் ரஷியாவுக்கும் இடையில் மோதல் உருவாகும் நிலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருந்தது. கடந்த மாதம் முதல் வாரத்தில் இருந்தே எந்த நேரத்திலும் ரஷியா உக்ரைன் மீது போர் தொடுக்க வாய்ப்புள்ளது என அமெரிக்கா எச்சரித்து வந்தது. இதனால் சில நாடுகள் தங்களுடைய நாட்டு மக்களை உக்ரைனில் இருந்து வெறியேற உத்தரவிட்டது, தூதர்களும் அழைக்கப்பட்டனர். கடந்த மாதம் 23-ந்தேதி அமெரிக்க- ரஷிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. இந்த நிலையில்தான் 24-ந்தேதி … Read more

உணவு பொருட்கள் வாங்க கடையில் நீண்ட வரிசையில் நின்றபோது கொல்லப்பட்ட கர்நாடக மாணவர்

உக்ரைனில் ரஷியா 6-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷிய படைகள் உக்ரைனின் மிகப்பெரிய 2-வது நகரான கார்கீவ் மீது மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்தி வருகிறது. தெருக்களில் வீரர்கள் சண்டையிட்டு வருகிறார்கள். ராக்கெட் மூலமும் தாக்குதல் நடத்தி வருகிறது. இன்று கார்கீவ் நகரில் உள்ள முக்கியமான அரசு கட்டிடம் அருகில் பதுங்கி இருந்த இந்திய மாணவர் நவீன் சேகரப்பா குண்டுவீச்சுக்கு பலியாகியுள்ளார். நவீன் சேகரப்பா கர்நாடக மாநிலம் ஹாவேரி பகுதியைச் சேர்ந்தவர். இவர் கார்கீவ் தேசிய … Read more

ரஷ்ய விளையாட்டு வீரர்களுக்கு அனைத்து போட்டிகளில் இருந்தும் தடை: உலக தடகள கூட்டமைப்பு அறிவிப்பு

ரஷ்ய: ரஷ்ய விளையாட்டு வீரர்களுக்கு அனைத்து போட்டிகளில் இருந்தும் தடை என உலக தடகள கூட்டமைப்பு அறிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் தடகள கூட்டமைப்பு இவ்வாறு அறிவித்துள்ளது.

ஜே.இ.இ. முதன்மை தேர்வு : ஏப்ரல் 16, 17 ஆகிய தேதிகளில் முதற்கட்டமாக நடைபெறும்

டெல்லி: ஜே.இ.இ. முதன்மை தேர்வு ஏப்ரல் 16, 17 ஆகிய தேதிகளில் முதற்கட்டமாக நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.  2ஆம் கட்ட தேர்வு மே 24 முதல் 29ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் கூறியுள்ளது.