இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு பல மாதங்களுக்கு பின்னர் இன்று ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து 913 ஆக பதிவாகி உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதித்த 13 பேர் உயிரிழந்த நிலையில், ஆயிரத்து 316 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தினசரி பெருந்தொற்று பாதிப்பு விகிதம் பூஜ்ஜியம் புள்ளி 29 சதவீதமாக இருப்பதுடன், நாடு முழுவதும் 12 ஆயிரத்து 597 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.