ஜம்மு- காஷ்மீரில் சீன துப்பாக்கி, வெடிபொருட்கள் பறிமுதல்: சதி திட்டம் முறியடிப்பு

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளை ஒடுக்க அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பூஞ்ச் மாவட்டம் நுர்கேட்டே பகுதியில் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து உள்ளூர் போலீசாருடன் இணைந்து ராணுவத்தினரும் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பயங்கர ஆயுதங்கள் கிடந்தன. சீன வகை ஏ.கே. 47 துப்பாக்கி, 2 ஏ.கே. 47 தாக்குதல் துப்பாக்கிகள்,  223 ஏ.கே. வடிவ துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள், பயங்கர வெடி பொருட்களை போலீசார் கைப்பற்றினார்கள்.
ஆனால் பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அவர்கள் இந்த ஆயுதங்களை கொண்டு நாசவேலைக்கு சதி திட்டம் தீட்டி இருக்கலாம் என்றும் தக்க சமயத்தில் கண்டு பிடிக்கப்பட்டதால் இந்த திட்டம் முறியடிக்கபட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.