
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே கணவரை கடத்தி மனைவியிடம் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
காளம்பாளையத்தைச் சேர்ந்த சந்தோஷ்- மனினீமேகர் ஆகியோர் அவிநாசியில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 1ஆம் தேதி இரவு வெளியே சென்ற சந்தோஷ் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. அதிகாலை 2.30 மணியளவில் மனினீமேகருக்கு போன் செய்த மர்ம நபர்கள் கணவர் சந்தோசை கடத்தி விட்டதாகவும், அவரை விடுவிக்க தங்களது வங்கி கணக்கிற்கு 2 லட்சம் பணம் செலுத்துமாறும் கூறியுள்ளனர்.
அதிர்ச்சி அடைந்த மனினீமேகர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிரப் புலன் விசாரணை நடத்தி செல்போன் சிக்னலை ஆய்வு செய்து 7பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர்.