ரஷ்யாவின் போர் ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திய உக்ரைன் ராணுவம்..! போர் ஹெலிகாப்டர் இரண்டாக உடைந்து விழும் வீடியோ காட்சிகள்

ரஷ்யாவுக்கு சொந்தமான போர் ஹெலிகாப்டரை உக்ரைன் ராணுவம் சுட்டு வீழ்த்திய நிலையில், ஹெலிகாப்டர் இரண்டாக உடைந்து விழுந்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

ரஷ்யாவுக்கு சொந்தமான MI 28 N என்ற போர் ஹெலிகாப்டர் கிழக்கு உக்ரைனின் லுஹான்ஸ்க் பகுதியில் சென்ற போது தங்கள் ராணுவத்தினரால் தாக்கி அழிக்கப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட அதிவேக வான் பாதுகாப்பு அமைப்பான ஸ்டார்ஸ்ட்ரீக் மூலம் ரஷ்ய ஹெலிகாப்டர் தாக்கப்பட்டுள்ளது.

The Times is reporting that this shootdown of a Russian Mi-28 was by a British Starstreak SAM pic.twitter.com/zsQb1DkQ74

— OSINTtechnical (@Osinttechnical) April 2, 2022

“>

ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில் பிரிட்டன் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை வழங்கிய நிலையில், அதில் ஸ்டார்ஸ்ட்ரீக் வான் பாதுகாப்பு அமைப்பும் ஒன்றாகும். இந்த வான் பாதுகாப்பு அமைப்பு, ஒலியை விட மூன்று மடங்கு வேகத்தில் குறைந்த உயரத்தில் செல்லும் எதிரியின் இலக்கை தாக்கும் திறன் கொண்டதோடு, எளிதாக இயக்கும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.