Vijay:விஜய் அப்பவே எச்சரித்தார், நாம தான் கேட்கல

நெல்சன் திலீப்குமார்
இயக்கத்தில்
விஜய்
, பூஜா ஹெக்டே, யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்த
பீஸ்ட்
படம் இன்று ரிலீஸாகியிருக்கிறது.

படம் பார்த்த விஜய் ரசிகர்கள் நெல்சன் மீது பயங்கர கோபத்தில் இருக்கிறார்கள். எல்லாமே வெறும் பில்ட்அப் மட்டும் தானா கோப்ப்பால் என்று சினிமா ரசிகர்கள் நெல்சனை கிண்டல் செய்கிறார்கள்.

பீஸ்ட்டுக்கு வில்லு, பைரவா, புலி பரவாயில்லை. என்ன நெல்சா, இப்படி பண்ணிட்டீங்க என்று சமூக வலைதளவாசிகள் கலாய்க்கிறார்கள்.

இந்நிலையில் பீஸ்ட் படம் பார்க்கச் செல்பவர்களை விஜய் ஏற்கனவே எச்சரித்தார், நமக்கு தான் புரியவில்லை என்கிறார்கள் சினிமா ரசிகர்கள்.

Vijay:பீஸ்ட் பற்றி விஜய் சொன்னது அப்போ புரியல, இப்போ தான் புரியுது
என்னது, விஜய் எச்சரித்தாரா என்று வியக்க வேண்டாம். பீஸ்ட் ட்ரெய்லரில் யோகி பாபுவிடம் என்ன பயமா இருக்கா, இதுக்கப்புறம் இன்னும் பயங்கரமா இருக்கும் என்றார் விஜய்.

ட்ரெய்லரை பார்த்து பயமா இருக்கா, படம் பயங்கரமா இருக்கும் என்று விஜய் அப்பொழுதே எச்சரித்தார் என்று கிண்டல் செய்கிறார்கள்.

பீஸ்ட் படத்தில் விஜய் என்னவோ அருமையாக தான் நடித்திருக்கிறார். ஆனால் மாஸ் ஹீரோவுக்கான கதை இது அல்ல. விஜய்யை வச்சு செஞ்சுட்டார் நெல்சன் என்று விமர்சனம் எழுந்திருக்கிறது. அதனால் விஜய்யின் உழைப்பு வீணாகிவிட்டதே என ரசிகர்கள் ஃபீல் பண்ணுகிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.