அதற்காகவே இந்த படத்தை காண ஆர்வமாக இருக்கிறேன்… ஜான்டி ரோட்ஸ் அசத்தல் டிவிட்!

இயக்குநர் சரோவ் சண்முகம் இயக்கியுள்ள படம்
ஓ மை டாக்
. இந்தப் படத்தில் நடிகர் அருண் விஜய், மஹிமா நம்பியார், அர்னவ் விஜய், விஜயகுமார், வினய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் அமேஸான் பிரைம்மில் இன்று வெளியாகியுள்ளது.

கண் பார்வை இல்லாத நாயை மைய்யப்படுத்தி இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கும் செல்லப் பிராணிகளுக்கும் பிடிக்கும் வகையில் கதையை அமைத்துள்ளார் சரோவ் சண்முகம்.

இந்நிலையில் உலகின் தலைச்சிறந்த ஃபீல்டர்களில் ஒருவரும், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரருமான
ஜான்டி ரோட்ஸ்
ஓ மை டாக் போஸ்டரை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். மேலும் செல்லப் பிராணி ஆர்வலரான தான் இந்தப் படத்தை பார்க்க ஆர்மாக இருப்பதாகவும் டிவிட்டியுள்ளார்.

இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லுங்கள்

இதனை பார்த்த படத்தின் தயாரிப்பாளரான நடிகர்
சூர்யா
, ஜான்டி ரோட்ஸின் டிவிட்டை தனது ரீடிவிட் செய்துள்ளார். மேலும் மிக்க நன்றி… நான் உங்களின் மிகப்பெரிய ரசிகன் ஜான்டி ரோட்ஸ், உங்கள் மகள் இந்தியா ரோட்ஸுக்கும் இந்தப் படம் பிடிக்கும் என்றும் பதிவிட்டுள்ளார். அவர்களின் இந்த பதிவுகள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

நான் பிஜேபி கிடையாது; மன்னிப்பு கேட்ட பாக்கியராஜ்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.