சின்ன சின்னதாய் செய்திகள்| Dinamalar

சின்ன சின்னதாய்29 மையங்களில் தேர்வு
கோலார் மாவட்டத்தில் இன்று முதல் 29 மையங்களில் பி.யு.சி., தேர்வு நடக்கிறது. கோலாரில் 11, பங்கார்பேட்டை, தங்கவயல், சீனிவாசப்பூர் ஆகிய மையங்களில் தலா 3, முல்பாகலில் 5, மாலுாரில் 4 என 29 மையங்களில் பி.யு.சி., தேர்வு நடக்கிறது.இம்மாவட்டத்தில் 17 ஆயிரத்து 8 மாணவர்கள் தேர்வெழுத பெயர் பதிவு செய்துள்ளனர். முதல்முறையாக தேர்வெழுதும் மாணவர்கள் 7,116; மாணவியர் 7,626 என 14 ஆயிரத்து 742 பேர் தேர்வெழுதுகின்றனர்.தேர்வில் தவறிய 2,266 பேர் மீண்டும் தேர்வு எழுத பதிவு செய்துள்ளனர்.
கால்வாயில் ஆண் பிணம்
பேத்தமங்களா – வி.கோட்டா சாலை கால்வாயில் 45 வயதுடைய ஆண் ஒருவரின் உடல்இறந்த நிலையில் நேற்று காணப் பட்டது.பேத்தமங்களா போலீசார் நேரில் பார்வையிட்டனர். தீயணைப்பு படை யினருக்கு தகவல் கொடுத்தனர். இறந்தவர் உடலை மீட்டனர். போலீசார் விசாரிக்கின்றனர்.மாரடைப்பால் ஒருவர் சாவுகோரமண்டல் ரயில் நிலையத்தில் பெங்களூரு செல்ல டிக்கெட் எடுக்க கவுண்டர் அருகில் உரிகம் பேட்டை பகுதியை சேர்ந்த முருகன் 35., என்பவர் வந்துள்ளார்.அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் இருக்கையில் அமர்ந்து ள்ளார். உடல் முழுவதும் வியர்வை கொட்டியது. சில நிமிடத்தில் திடீரென கீழே விழுந்து உயிரிழந்தார்.
சாலையில் பள்ளம்

கோலார் கட்டாரிப்பா ஜளையம் முக்கிய சாலையில் கால்வாய் மீது மூடப்பட்டுள்ள கான்கிரீட் சிலாப் உடைந்துள்ளது. இதனால் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.வாகனங்களில் செல்வோரும், நடந்து செல்வோரும் அடிக்கடி பள்ளத்தில் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். நேற்று பைக்கில் வந்த நபர் ஒருவர், அந்த பள்ளத்தில் விழுந்ததால் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக பள்ளத்தை மூடும் படி அப்பகுதியினர் போராட்டம் நடத்தினர்.
‘ம.ஜ.த.,வில் இல்லையே’
”தனக்கும், ம.ஜ.த., கட்சிக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. ஜனதா ஜலதாரே நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டேன்,” என்று கோலார் ம.ஜ.த., – எம்.எல்.ஏ., சீனிவாசகவுடா தெரிவித்தார். செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ”நான், ம.ஜ.த.,வை விட்டு விலகி பல மாதங்கள் ஆகின்றன. எனக்கும், அந்த கட்சிக்கும் சம்பந்தமே இல்லை. அந்த கட்சியுடன் என்னை இணைத்து பேச வேண்டாம். அடுத்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதா; வேண்டாமா; யாரை ஆதரிப்பது என்பதற்கு தேர்தல் அறிவிப்பு வரட்டும் தெரிவிக்கிறேன., ஜலதாரே யாத்திரையில் பங்கேற்க மாட்டேன்,” என்றார்.
மருத்துவமனையில் முறைகேடு
கோலார் மாவட்ட அரசு எஸ்.என்.ஆர்., மருத்துவமனையில் சிகிச்சை பெற கமிஷன் ஏஜென்டுகளின் தொல்லையும்,முறைகேடும் அதிகமாகி விட்டதென கோலார் மாவட்ட விவசாயிகள் சங்கத்தினர், மருத்துவமனை எதிரில் நேற்று தர்ணா நடத்தினர்.போராட்டம் நடத்திய விவசாயிகளிடம், தலைமை மருத்துவர் விஜயகுமார் கோரிக்கை மனுவை பெற்றனர். அரசின் இலவச சிகிச்சைக்கு பணம் கேட்போர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என்று அவர் கூறினார்.
சுத்தமான குடிநீர் வழங்கப்படுமா?
பங்கார்பேட்டை தமட்டுக்கரே கிராமத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பழுதடைந்து பல மாதங்கள் ஆகின்றன. இதனை சரிபடுத்தவே இல்லை. இதனால் சுத்தமான குடிநீர் கிடைக்காமல் கிராம மக்கள் அல்லல் படுகின்றனர். இதனால் இப்பகுதியின் பல மைல் துாரம் சென்று சுத்தமான குடிநீர் பெற வேண்டிய நிலை தொடர்கின்றன. இதுகுறித்து அப்பகுதி யினர் கோலார் மாவட்ட கலெக்டர் வெங்கட்ராஜுவிடம் நேற்று புகார் செய்தனர். இதுகுறித்து விசாரிக்க மாவட்ட பஞ்சாயத்து, தாசில்தாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திட்டமிடப்பட்ட கலவரம்
கோலாரின் கேளனுாரில் கோவில் திருவிழாவுக்கு வந்திருந்த அமைச்சர் முனிரத்னா, செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ”ஹூப்பள்ளியில் நடந்த சம்பவம் திட்டமிட்டு செய்யப்பட்ட கலவரம். பெங்களூரு டிஜே.ஹள்ளி, கே.ஜி.ஹள்ளி கலவரம் போல திட்டமிட்டு செயல்பட்டுள்ளனர்.இதுபோன்ற சம்பவங்கள் நடக்காதபடி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.இதன் பின்னணியில் உள்ளவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்,” என்றார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.