தீவிரமடையும் போராட்டம்…இலங்கையில் தற்போதைய நிலவரம் என்ன?

கொழும்பு, 
இலங்கையில் இப்போது மிக மோசமான பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை கூட விண்ணை மூட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. 
கொரோனா காரணமாகப் பாதிக்கப்பட்ட இலங்கையின் பொருளாதாரம் இன்னும் மேம்படவில்லை. இதனால் இலங்கையில் உணவு பற்றாக்குறை எரிபொருள் தட்டுப்பாடு ஆகியவையும் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக அங்குள்ள மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்திவருகின்றனர். தலைநகர் கொழும்புவில் அதிபர், பிரதமர் மற்றும் பிரதமர் தலைமையிலான அமைச்சரவை பதவி விலகக்கோரி நடைபெற்றுவரும் இந்த போராட்டம் தொடர்ந்து 15 ஆவது நாளாக நீடித்து வருகிறது. இந்த போராட்டத்திற்கு வலு சேர்க்கும் விதமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 
இந்த நிலையில், வரும் 26 ஆம் தேதி கண்டியில் இருந்து கொழும்பு வரை ஒரு வாரம் எதிர்க்கட்சி சார்பில் பேரணி நடைபெற உள்ளது. தொடர்ந்து இலங்கை அரசு, பொருளாதார நெருக்கடியை சீர்செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.