பாஜகவை வீழ்த்த காங்கிரஸ், இடதுசாரிகளுடன் அனைத்து மாநிலக் கட்சிகளுமே கைகோக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

புதுடெல்லி: “இந்தியாவின் பன்முகத்தன்மை, கூட்டாட்சி, ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமத்துவம், சகோதரத்துவம், மாநில உரிமைகள், கல்வி உரிமைகள் ஆகியனவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்றால் நாம் அனைவரும் நம் தனிப்பட்ட அரசியல் மனநிலையை விலக்கி வைத்துவிட்டு ஒன்றிணைய வேண்டும். அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து ஒற்றுமையே பலம் என்பதை உணர வேண்டும்.பாஜகவை வீழ்த்த காங்கிரஸ், இடதுசாரிகளுடன் அனைத்து மாநிலக் கட்சிகளுமே கைகோக்க வேண்டும்” என்று கூறியுள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசுமுறைப் பயணமாக டெல்லி சென்றுள்ளார். அங்கு … Read more

உ.பி.யில் ’பள்ளிக்கு செல்லுங்கள்’ திட்டம்: 5 ஆண்டுகளில் ஒரு கோடி மாணவர்களை சேர்க்க யோகி இலக்கு

புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலத்தில் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதை ஊக்குவிக்க ஏப்ரல் 4 முதல், ‘பள்ளிக்கு செல்லுங்கள்’ திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம், அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு கோடி மாணவர்களை பள்ளிகளில் சேர்க்க அம்மாநில முதல்வரான யோகி ஆதித்யநாத் இலக்கு நிர்ணயித்துள்ளார். மீண்டும் பாஜக ஆட்சி தொடரும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்னும் கல்வியறிவில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதற்காக அங்கு ஆளும் அரசுகள் எடுத்த பல முயற்சிகளுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. குறிப்பாக உத்தரப் … Read more

எனக்கும் பெரிய ஏமாற்றம்தான்… அசோக் செல்வன் பரபரப்பு அறிக்கை!

வெங்கட் பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன் , ஸ்ம்ருதி வெங்கட், ரியா சுமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் மன்மத லீலை . முத்தக் காட்சிகள் நிரம்பி வழிந்த இப்படத்தின் ஸ்னீக் பிக்கை நடிகர் சிம்பு வெளியிட்டார். அப்போது படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து விட்டது. இந்நிலையில் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் டைட்டிலில் ஏற்பட்ட பிரச்சனை நீதிமன்றம் வரை சென்றது. Dhanush:மாமியாருக்கே விபூதி அடிக்கும் தனுஷ்… வேற … Read more

இலங்கை அரசின் அமைச்சரவையை கலைத்துவிட்டு காபந்து அரசை அமல்படுத்த வலியுறுத்தல்.!

இலங்கை அரசின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் 11 கூட்டணி கட்சிகள், அமைச்சரவையை கலைத்துவிட்டு காபந்து அரசை அமல்படுத்த வலியுறுத்தியுள்ளன.  இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளன. இதன் காரணமாக அந்நாட்டின் ஆளும் கட்சிக்கும் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராகவும் மக்கள் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இலங்கை அதிபர் மாளிகை முற்றுகையிட்ட விவகாரத்தில் பெண்கள் உள்பட 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த போராட்டத்தை … Read more

அமைதி முயற்சிகளுக்கு எந்த வகையிலும் பங்களிக்க இந்தியா தயார் – பிரதமர் மோடி

உக்ரைன் விவகாரத்தில் அமைதி முயற்சிகளுக்கு எந்த வகையிலும் பங்களிக்க இந்தியா தயாராக உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியா வந்துள்ள ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், டெல்லியில் பிரதமரை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, அமைதிப் பேச்சுவார்த்தைகள் உள்ளிட்ட உக்ரைன் நிலவரம் குறித்து பிரதமரிடம் லாவ்ரோவ் எடுத்துரைத்தார். இதனைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையிலான மோதலை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார். மேலும், கடந்த டிசம்பரில் நடைபெற்ற இந்தியா – … Read more

இனி நாம் பிளவுப்படக்கூடாது! நாட்டு மக்களுக்கு இலங்கை ஜாம்பவான் ஜெயசூர்யா வெளியிட்ட செய்தி

இனி இனம், மதம், சாதி அல்லது கட்சி அரசியல் அடிப்படையல் இனி நாம் பிளவுப்படக்கூடாது என இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் சனத் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார். இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், ஜனாதிபதி இல்லம் மற்றும் மாளிகையை முற்றுகையிட முயன்றனர். இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் சனத் ஜெயசூர்யா ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், இலங்கையர்களான நாம் கடந்த மாதம் அமைதியாக ஒன்றாக அவதிப்பட்டோம். அனைத்திற்கும் மற்றும் அனைவருக்கும் பொறுமை இழக்கும் கட்டம் இருக்கிறது. … Read more

தமிழ்நாட்டில் 389 நடமாடும் மருத்துவ வாகன சேவை அடுத்த வாரம் தொடக்கம்! அமைச்சர் மா.சு. தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 389 நடமாடும் மருத்துவ வாகன சேவை அடுத்த வாரம் தொடங்கப்பட உள்ளதாகவும், இந்த சேவை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாளை  (2-ம் தேதி) தமிழகம் முழுவதும்  27-வது மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் இடங்களில் நடக்க உள்ளது. இதில் முதல் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய 50 லட்சம் பேரும், 2-வது … Read more

முதல்வர் ஸ்டாலினுடன் சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் தலைவர் சந்திப்பு

புதுடெல்லி: புதுடெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில், சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் (FIDE) தலைவர் டிவோர்கோச் ஆர்கடி, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று சந்தித்து பேசினார். அப்போது, சென்னையில் நடைபெற உள்ள 44-வது சர்வதேச சதுரங்கப் போட்டி குறித்து கலந்துரையாடினர். 44-வது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகளை நடத்துவதற்கான பெருமை வாய்ந்த இடமாக சென்னை தேர்வு செய்யப்பட்டிருக்கும் சூழ்நிலையில், உலகமே கொண்டாடும் வகையிலான இந்நிகழ்வினை சிறப்பானதாகவும், வெற்றிகரமாகவும் நடத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்திடவும், அதற்கான பணிகளை விரைந்து … Read more

நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

புதுடெல்லி: டெல்லியில் கட்டப்பட்டுள்ள தி.மு.க. அலுவலக திறப்பு விழா நாளை  நடக்கிறது. இதற்காக தி.மு.க. சார்பில் எல்லா கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மாலை திறந்து வைக்கிறார். இந்த விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். ஏராளமானோர் திரண்டு வந்து மு.க.ஸ்டாலினுக்கு கும்ப மரியாதையும் வழங்கினர். நேற்று பாராளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலக … Read more

தமிழகத்தில் அடுத்த கல்வி ஆண்டு ஜூன் 13ம் தேதி தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் அடுத்த கல்வி ஆண்டு ஜூன் 13ம் தேதி தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 24ம் தேதி வகுப்புகள் தொடங்கும். 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 12 நாட்கள் மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.