நீட் மசோதா… மீண்டும் ஆளுநரை அட்டாக் செய்த தி.மு.க!

தமிழ்நாட்டில் நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதால், நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதில் முந்தைய அதிமுக அரசும் தற்போது உள்ள திமுக அரசும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளன. திமுக அரசு, தமிழ்நாட்டுக்கு நீட் ரத்து மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. ஆளுநர் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தார். தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்ட பிறகு, திமுக அரசுக்கும் ஆளுநருக்கும் சர்ச்சைகள் நிலவி வருகிறது. நீட் … Read more

ஆசை வார்த்தை கூறி பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞர்.. போக்சோவில் கைது.!

பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய கார் ஓட்டுநரை போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகில் மாணவி ஒருவர் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்தநிலையில் மாணவிக்கும் அதே பகுதியை சேர்ந்த கார் ஓட்டுனர் சுப்பிரமணியம் இருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கமான பழக்கத்தால் பள்ளி மாணவி 3 மாத கர்ப்பமாக இருந்துள்ளார். இதனைக கேட்டு ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர் திருப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து பள்ளி மாணவியை ஆசை வார்த்தை … Read more

“ஆட்சியைக் கலைக்கவேண்டும்!" – இலங்கை அரசுக்கு எதிராகக் களமிறங்கிய 11 எதிர்க்கட்சிகள்

இலங்கையில் தொடர்ந்து பொருளாதார நெருக்கடி நிலை அதிகரித்து வருகிறது. அதனால் அத்தியாவசியப் பொருள்களின் விலை விண்ணை முட்டுகிறது. மேலும் தற்போது 13 மணி நேர மின்வெட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இலங்கையில் மக்கள் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என அவரது வீட்டு முன்பாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராகப் போராட்டம்-இலங்கை இதைத் தொடர்ந்து, அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோருக்கு எதிராக சமூக வலைதளங்களில் மக்கள் கருத்துகளைப் … Read more

மோட்டார் சைக்களும் காரும் மோதிய விபத்தில் கல்லூரி மாணவனுக்கு படுகாயம்

கோவையில் மோட்டார் சைக்கிளும் காரும் மோதிய விபத்தில் கல்லூரி மாணவனுக்கு படுகாயம் ஏற்பட்ட நிலையில், அவர் ஓட்டி வந்த வாகனம் மட்டும் தனியே ஓடி, தரையில் விழுந்த காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன. குறிச்சி பகுதியின் ஒருவழிப்பாதையில் போக்குவரத்து விதிகளை மீறி கல்லூரி மாணவர் ஒருவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம், எதிரே வந்த கார் மீது மோதியது. இதில் அவர் நிலைதடுமாறி சாலையில் விழுந்த நிலையில், வாகனம் நிற்காமல் சிறிது தூரம் தனியே ஓடி … Read more

பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமி குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு: உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட 15 வயது சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கலைக்குமார். இவரது மனைவியும் ஆசிரியர். கடந்த 2011- ல் கணவன், மனைவி இருவரும் பள்ளிக்கு சென்று விட, இவர்களின் 15 வயது மகளும், 5 வயது மகனும் வீட்டில் இருந்தனர். அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் சிறுமியை பாலியல் … Read more

ஆயுதப் படை சிறப்பு அதிகார பகுதிகள் குறைப்பு: அமித் ஷா தகவல்

புதுடெல்லி: வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால் அங்கு ஆயுதப் படைகளுக்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கும் சட்டம் (ஏஎப்எஸ்பிஏ) அமலில் உள்ளது. இந்த சட்டம் நடைமுறையில் உள்ள பகுதிகளில் ராணுவத்தினர் யாரை வேண்டுமானாலும் கைது செய்ய முடியும். எங்கும் சோதனை நடத்த முடியும். ராணுவ நடவடிக்கையில் யாரேனும் உயிரிழந்தால் மத்திய அரசின் ஒப்புதலின்றி விசாரணை நடத்த முடியாது. இந்த சட்டம் அமலில் இருக்கும் பகுதிகளில் மனித உரிமை மீறல்கள் நடப்பதாகவும் எனவே இந்த சட்டத்தை நீக்க வேண்டும் … Read more

’இந்தியாவுடன் நட்பு பாராட்டும் அந்த வல்லரசு பாக். மீது மட்டும் கோபமாக உள்ளது’ – இம்ரான் கான்

இஸ்லாமாபாத்: தனது ரஷ்ய பயணத்தால், வல்லரசு நாடு ஒன்று பாகிஸ்தான் மீது கோபமாக உள்ளது. அதே நேரத்தில் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியாவுடன் நட்பு பாராட்டுகிறது என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். இஸ்லாமாபாத் பாதுகாப்பு உரையாடலில் இம்ரான்கான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “ஒரு நாட்டிற்கு சுதந்திரமான வெளியுறவுக் கொள்கை மிகவும் முக்கியமானது. பாக்கிஸ்தானால் அதன் உச்சக்கட்ட திறனை அடைய முடியாததற்கு காரணம், அது மற்ற சக்தி வாய்ந்த நாடுகளை சார்ந்திருப்பது தான். … Read more

யாஷிகாவின் இந்த முடிவிற்கு என்ன காரணம்? ஷாக்கான ரசிகர்கள்..!

தன் நடிப்பையும் தாண்டி அதீத கவர்ச்சியில் ரசிகர்களை ஈர்த்த நடிகை தான் யாஷிகா ஆனந்த். ஜீவா நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான கவலை வேண்டாம் படத்தில் சிறு கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமானார் யாஷிகா. அதன் பின் கார்த்திக் நரேன் இயக்கத்தில் துருவங்கள் பதினாறு படத்தில் நடித்தார். இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு கெளதம் கார்த்திக்குடன் யாஷிகா இணைந்து நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார் யாஷிகா. சிம்புக்கு … Read more

மெக்சிகோவுக்கு கடத்தப்பட இருந்த 140 சிலந்திகள் பறிமுதல்

பொகாடோ சர்வதேச விமான நிலையம் வழியாக மெக்சிகோவுக்கு கடத்தப்பட இருந்த 140  சிலந்திகளை கொலம்பிய அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அங்குள்ள சரக்குப் பெட்டிகளை சோதனை செய்யும் போது வெளிநாட்டு பொருட்கள் இருப்பதாக பார்சல் நிறுவனத்திடம் இருந்து வந்த குறிப்பினை பார்த்த அதிகாரிகள் அதனை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். அப்போது அந்த பெட்டியில் 140 பிளாஸ்டிக் பைகளில் சிலந்திகள் தனித்தனியாக அடைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. அவைகளில் 131 சிலந்திகள் உயிருடன் இருப்பதும், 12சிலந்திகள் உயிரிழந்தும் … Read more

ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு.!

ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஏப்ரல் 5-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 2022-23 ஆம் கல்வியாண்டிற்கான ஜேஇஇ தேர்வு, 2 கட்டங்களாக நடத்தப்பட உள்ள நிலையில் முதற்கட்ட தேர்வு ஏப்ரல் 21 முதல் மே 4ஆம் தேதி வரையும், 2ஆம் கட்ட தேர்வு மே 24 முதல் 29ஆம் தேதி வரையும் நடைபெற உள்ளது. Source link