வெறும் 4000 ரூபாய்க்கு Realme ஸ்மார்ட் டிவி – அதிரடி தள்ளுபடி விற்பனை!

ஆன்லைன் ஷாப்பிங் தளமான பிளிப்கார்ட்டில் Big Bachat Dhamal Sale விற்பனை தொடங்கியுள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதியான இன்று தொடங்கிய விற்பனை ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மூன்று நாள் விற்பனையில், நீங்கள் ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவிகள் மற்றும் பிற மின்னணு பொருள்களை அதிக தள்ளுபடியில் வாங்கலாம். Flipkart விற்பனையில் ஸ்மார்ட் டிவிகள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன. நீங்கள் புதிய ஸ்மார்ட் டிவி வாங்க நினைத்தால், இந்த தள்ளுபடி விற்பனை நாள்கள் உங்களுக்கு … Read more

இன்றும் தொடர்கிறது மக்கள் போராட்டம்! பேருவளையில் குழுமிய மக்கள்

அரசாங்கத்திற்கெதிரான மக்கள் போராட்டமானது  மேலும்  தீவிரமடைந்துள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் இன்றும் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது பேருவளை நகரிலும் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.  எரிவாயு, எரிபொருள் மற்றும் மின்சார தட்டுப்பாட்டுக்கு தீர்வு கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இதன் காரணமாக அப்பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.   Source link

ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி சேரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.!

கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகு ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி சேரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஆஸ்திரேலியா வர்த்தக மற்றும் முதலீட்டு ஆணையத்தின் ஆணையர் டாக்டர் மோனிகா தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் உள்ள உயர்கல்வி வாய்ப்புகள் குறித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆஸ்திரேலியாவில் 90 ஆயிரத்துக்கும் அதிகமான இந்திய மாணவர்கள் இருப்பதாகவும் கடந்த 2 ஆண்டுகளாக உயர்கல்வி சேருவதற்கான வாய்ப்புகள் இல்லாத நிலையில், தற்போது அதிக எண்ணிக்கையிலான இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி சேர ஆர்வம் காட்டுவதாகவும் … Read more

அகமதாபாத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான யோகா போட்டியில் 3 பதக்கங்களை வென்ற கோவையை சேர்ந்த கல்லூரி மாணவி.! 

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான யோகா போட்டியில் தமிழக அணி சார்பில் பங்கேற்ற கோவையை சேர்ந்த கல்லூரி மாணவி 3 பதக்கங்களை வென்றுள்ளார். தேசிய யோகாசன விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற போட்டியில் தமிழக அணியில் நெய்வேலி, சென்னை, கோவையை சேர்ந்த 5 மாணவிகள் குழுவினர் பங்கேற்றிருந்தனர். அவர்களில் கோவை தனியார் கல்லூரி மாணவி வைஷ்ணவி, சீனியர் தனிநபர் ஆர்ட்டிஸ்டிக் போட்டி மற்றும் பாரம்பரிய யோகா போட்டியில் தலா ஒரு தங்கப்பதக்கமும்,  குழு போட்டியில் … Read more

கிவ் அருகே பயங்கர மோதல் வெடித்துள்ளது! நகர வாசிகளுக்கு மேயர் எச்சரிக்கை

உக்ரைன் தலைநகர் கீவ் அருகே பயங்கர மோதல் வெடித்துள்ளதாக அந்நகர மேயர் Vitali Klitschko எச்சரிக்கை விடுத்துள்ளார். Vitali Klitschko கூறியதாவது, உக்ரைன் தலைநகர் கீவின் வடக்கு மற்றும் கிழக்கில் பயங்கர மோதல்கள் வெடித்துள்ளன.  கீவ் நகரில் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கான அபாயம் மிகவும் அதிகமாக உள்ளது, எனவே கீவ் திரும்ப விரும்பும் மக்கள், தயவு செய்து இன்னும் சிறிது காலம் எடுத்துக்கொள்ளுமாறு நான் அறிவுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார். தலைநகரைச் சுற்றியுள்ள சில பகுதிகளில் ரஷ்யப் படைகள் பின்வாங்கத் … Read more

விஜய் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது பீஸ்ட் டிரெய்லர்…

பீஸ்ட் படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘பீஸ்ட்’. விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், டாம் சாக்கோ ஆகியோர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஏப்ரல் 13 ம் தேதி ஐந்து மொழிகளில் உலகெங்கும் ரிலீசாக இருக்கும் இந்தப் படத்தை தமிழில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. இந்தப் படத்தின் டிரெய்லர் நாளை மாலை … Read more

ரஷியர்கள் வெளியேறிய பிறகு செர்னோபில் அணு உலையை சோதனை செய்யும் உக்ரைன்

வார்சா: உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷிய ராணுவம், முதல் நாளில் வடக்கு உக்ரைனில் உள்ள செர்னோபில் அணு உலையை கைப்பற்றி தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. தற்போது கீவ் புறநகர்ப்பகுதிகள் மற்றும் பிற முன்கள பகுதியில் சண்டை தீவிரமடைந்துள்ள நிலையில், செர்னோபில் அணு உலையில் இருந்து ரஷிய ராணுவ வீரர்கள் வெளியேறினர். ஆனால், கடுமையாக மாசுபட்ட அப்பகுதியில் ரஷிய வீரர்கள் அகழிகளை தோண்டியபோது கதிர்வீச்சு தாக்கத்தை எதிர்கொண்டதால் அணு உலையை விட்டு வெளியேறியதாக உக்ரைன் … Read more

கெஜ்ரிவால் அரசு உருவாக்கியுள்ள டெல்லி மாதிரி பள்ளியை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் 4 நாள் பயணமாக நேற்று முன்தினம் டெல்லி சென்றார். அங்கு தமிழ்நாடு அரசு இல்லத்தில் தங்கி உள்ள அவர் நேற்று காலை பாராளுமன்ற வளாகத்தில் உள்ள தி.மு.க. அலுவலகத்திற்கு சென்றார். இதை கேள்விப்பட்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பகல் 12.30 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சென்று சந்தித்தார். இதன் பிறகு மதியம் 1 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை அவரது அலுவலகத்தில் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்து பேசினார். அப்போது … Read more

இம்ரான் கான் ராஜினாமா செய்வதுதான் அவருக்கு கவுரவம்- எதிர்க்கட்சிகள் கருத்து

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளன. இம்ரான் கான் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை முக்கிய கூட்டணி கட்சியான முத்தாஹிதா குலாமி இயக்கம்- பாகிஸ்தான் கட்சி வாபஸ் பெற்றது. இதனால் இம்ரான் கான் அரசு பெரும்பான்மையை இழந்தது.  ஆனால் நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய இம்ரான் கான், பிரதமர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என்றும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ளப் போவதாகவும் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நாளை மறுநாள் நம்பிக்கையில்லா … Read more

நீலகிரியில் பெட்டிக்கடைகளுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற மாவட்ட ஆட்சியருக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நீலகிரியில் பெட்டிக்கடைகளுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தமாட்டோம் என உத்தரவாதம் அளித்ததன் பேரில் சீலை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட மலைப் பிரதேசங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.