2023-ம் ஆண்டு உலகில் மிகப்பெரிய போர் ஏற்படும்- நாஸ்டர்டாம் கணிப்பில் அதிர்ச்சி தகவல்

பிரான்ஸ் நாட்டில் 15-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் நாஸ்டர்டாம். இவர் எதிர்காலத்தில் உலகில் என்னென்ன நடக்கும் என்பதை பாடல்கள் போல எழுதி வைத்து உள்ளார். சித்தர்கள் பேசும் பரிபாஷை போன்று அந்த பாடல் வரிகள் உள்ளன. அந்த வரிகளில் உள்ள அர்த்தங்கள்படி குறிப்பிட்ட நிகழ்வுகள் நடந்தது பிறகே தெரிய வந்தது. குறிப்பாக நாஸ்டர்டாம் மறைவுக்கு பிறகுதான் அவர் எழுதி வைத்துள்ள குறிப்புகள் ஒவ்வொன்றாக நடக்க தொடங்கின. 450 ஆண்டுகளுக்கு முன்பு அவரது குறிப்புகள் புத்தக வடிவில் வெளியிடப்பட்டன. அந்த … Read more

கடம்பூர் பேரூராட்சி தேர்தலில் ஏற்பட்ட தகராறு தொடர்பான புகார்கள், வழக்குகள் குறித்த ஆவணங்களை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கடம்பூர் பேரூராட்சி தேர்தலில் ஏற்பட்ட தகராறு தொடர்பான புகார்கள், வழக்குகள் குறித்த ஆவணங்களை தாக்கல் செய்ய மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடம்பூர் பேரூராட்சி தேர்தல் ரத்தானத்தை எதிர்த்து, சுயேச்சை வேட்பாளர்கள் நாகராஜா, ராஜேஸ்வரி மனு தாக்கல் செய்த மனுவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பீகாரில் பாஜக தலைமையில் ஆட்சி நிதிஷ்குமாரை துணை ஜனாதிபதியாக்க முயற்சி?: அதிகார பகிர்வு குறித்து ரகசிய பேச்சு

பாட்னா: பீகாரில் பாஜக தலைமையில் ஆட்சி அமைக்கவும், அம்மாநில முதல்வரை துணை ஜனாதிபதியாக்கவும் பாஜக முயற்சித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணி ஆட்சியானது முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நிதிஷ்குமார் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்படவுள்ளதாக பீகாரில் தகவல்கள் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து அம்மாநில அமைச்சர் சஞ்சய் குமார் ஜா வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘முதல்வர் நிதிஷ்குமார் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட உள்ளதாக வெளியான … Read more

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான புதிய விதிமுறைகள் – சாதகம், பாதகம் என்ன?

குறிப்பிட்ட சில பொறியியல் படிப்பில் சேர்வதற்கு இனி கணிதம், இயற்பியல், வேதியியல் அவசியமில்லை என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிவித்திருக்கிறது. அதன் புதிய விதிகள் என்ன என்பதை தெரிந்துகொள்வோம். பன்னிரெண்டாம் வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களை கட்டாயம் படித்திருந்தால் மட்டுமே, பொறியியல் படிப்பில் சேர முடியும் என்ற சூழல் இருந்தது. ஆனால், பள்ளிகளில் இந்த படிப்புகளை படிக்காமல் சில குறிப்பிட்ட பொறியியல் படிப்புகளில் சேரலாம் என்று அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் எனப்படும் ஏஐசிடிஇ … Read more

மனைவி மீது சந்தேகம்.. ஒட்டுமொத்த குடும்பத்தையே கொலை செய்துவிட்டு தப்பியோடியவர் கைது!

தன் மனைவிக்கு திருமணத்தை மீறிய தொடர்பு இருப்பதாக எழுந்த சந்தேகத்தால் ஒட்டுமொத்த  குடும்பத்தையே கொலை செய்துவிட்டு தப்பியோடிய கணவரை காவல்துறையினர் கைது செய்தனர். குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் ஓதவ் பகுதியில் வசித்துவந்தவர் வினோத் ஜெய்க்வாட். இவருக்கு சோனால்பென் என்ற மனைவியும், 17 வயதில் கணேஷ் என்ற மகனும், 15 வயதில் பிரகதி என்ற மகளும் இருந்தனர். இவர் தனது குடும்பத்துடன் ஓதவ் பகுதியில் வசித்து வந்தார். இவரது வீட்டில் சோனால்பென்னின் பாட்டி சுபத்ராபென்னும் வசித்து வந்தார். … Read more

ரூ.1.42 லட்சம் கோடியை தாண்டியது| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: கடந்த ஜன., மாதம் ரூ.1.40 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகி சாதனை படைத்த நிலையில் கடந்த மார்ச் மாத வசூல் அதனை முறியடித்து ரூ.1,42,095 கோடி வசூலாகியதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கை: மார்ச் மாதம் ஜிஎஸ்டி ரூ.1,42,095 கோடி வசூல் ஆகியது.அதில்,சிஜிஎஸ்டி ரூ.25,830 கோடிஎஸ்ஜிஎஸ்டி ரூ.32,378 கோடிஐஜிஎஸ்டி ரூ.74,470 கோடி( பொருட்கள் இறக்குமதி மூலம் வசூலான ரூ.39,131 கோடி உட்பட)செஸ்- ரூ.9,417 கோடி( … Read more

நீச்சல் குளத்தில் ஒய்யாரமாக போஸ் கொடுத்த பிரியங்கா நல்காரி

ரோஜா சீரியலில் ஹீரோயினாக நடித்து வரும் பிரியங்கா நல்காரி சின்னத்திரை ஹன்சிகா என செல்லமாக அழைக்கப்பட்டு வருகிறார். அவருக்காகவே சீரியல் பார்க்கும் வாலிபர்களும் உண்டு. இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் அவர் அடிக்கடி ரீல்ஸ், போட்டோஷூட் என பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். பிரியங்கா நல்காரியை இன்ஸ்டாகிராமில் மட்டும் 6.4 லட்சம் பேர் பின் தொடந்து வருகின்றனர். இந்நிலையில் அவர் தற்போது, நீச்சல் குளத்தில் சொட்ட சொட்ட நனைந்த உடையுடன் ஹாட்டான போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை … Read more

பிஎப் வட்டி குறைப்பால் மாத சம்பளக்காரர்களுக்கு 7 லட்சம் நஷ்டம்.. எப்படி தெரியுமா..?

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) மத்திய டிரஸ்டி அமைப்பு 2021-22 ஆம் ஆண்டிற்கான வட்டி விகிதங்களை 8.5% இலிருந்து 8.1% ஆகக் குறைக்கப் பரிந்துரை செய்தது மாத சம்பளக்காரர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. 3 மாதத்தில் 11.5 பில்லியன் டாலர் கடன்.. இந்தியாவின் மொத்த கடன் எவ்வளவு தெரியுமா..?! இதை விட முக்கியமாக மத்திய அரசு தனது சிறு சேமிப்பு திட்டத்திற்கான வட்டி விகிதத்தைக் குறைக்கும் என அதிகளவினோர் நம்பினர். ஆனால் மத்திய … Read more

என்ன இன்னிக்கு பெட்ரோல் – டீசல் ரேட்டு ஏறல… ட்ரெண்டிங் ஏப்ரல் ஃபூல் தின மீம்ஸ்!

Tamil memes news: இன்று ஏப்ரல் 1ஆம் தேதி உலகம் முழுவதும் முட்டாள்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. இன்றைய தினத்தில் யாரும் யாரிடமும் ஏமாறாமல் உஷாராக இருக்க வேண்டும் என்பதை ஒவ்வொருவருக்கும் புரிய வைப்பதற்காக கொண்டாடப்படுகிறது. இத்தினத்தை அனைத்து தரப்பினரும் கொண்டாடி மகிழ்ந்து, ஒருவருக்கொருவர் வேண்டுமென்றே ஏமாற்றி அவர் ஏமாந்த பின்பு “ஏப்ரல் ஃபூல்” என்று கூறுவது வழக்கம். அந்த வகையில், இன்று ஏப்ரல் ஃபூல் தினத்தை முன்னிட்டு நெட்டிசன்கள் சுவையான மீம்ஸ்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். தற்போது இணைய … Read more

#BigBreaking || இலங்கையில் ஆட்சி கவிழ்கிறதா? சற்றுமுன் ஆளும் கூட்டணி கட்சிகள் முக்கிய முடிவு,!

பொருளாதார நெருக்கடியை தடுப்பதற்கு இலங்கை அரசு தவறியதை கண்டித்து பொதுமக்கள் நேற்று போராட்டம் நடத்திய நிலையில், தற்போது இலங்கை அரசை கலைக்க வேண்டும் என்று, ஆளும் கட்சியின் கூட்டணி கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய காங்கிரஸ் கட்சி, ஸ்ரீ லங்கா மகாஜன கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தேசிய சுதந்திர முன்னணி கட்சி, இடதுசாரி ஜனநாயக முன்னணி கட்சி, லங்கா சமசமாச கட்சி உள்ளிட்ட 11 கட்சிகள்  வலியுறுத்தியுள்ளன. இலங்கை அமைச்சரவையில் அங்கம் வகித்த … Read more