தீவிரவாத குழுக்கள் வன்முறையை தூண்டிவிட்டன: கோத்தபய ராஜபக்சே குற்றச்சாட்டு

அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அதிபர் இல்லத்துக்கு செல்லும் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட வன்முறையாளர் குழு ஒன்று குழப்பம் ஏற்படுத்தும் வகையில் வன்முறை சம்பவங்களை நிகழ்த்தியது. இரும்பு கட்டைகள் மற்றும் ஆயுதம் ஏந்திய கும்பல் ஆர்ப்பாட்டக்காரர்களை தூண்டிவிட்டு அதிபர் இல்லத்தை நோக்கி பேரணியாக சென்று கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது. வன்முறையில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலர் திட்டமிட்டு தீவிரவாதிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். வன்முறை பின்னணியில் தீவிரவாத குழுக்கள் உள்ளன. சமூக ஊடகங்களை … Read more

நீதிமன்ற உத்தரவை மதிக்காத செயலுக்கு சிறை தண்டனையே பிரதானமாக இருக்க வேண்டும்: சென்னை ஐகோர்ட் கருத்து

சென்னை: நீதிமன்ற உத்தரவை மதிக்காத செயலுக்கு சிறை தண்டனையே பிரதானமாக இருக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.கட்டட விதிமீறல் தொடர்பாக நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளை இ.ஏ.எஸ்.அதிகாரிகள் கருத்தில் கொள்வதில்லை என நீதிபதிகள் கூறியுள்ளனர். லஞ்சப்பணம் மூலம் வருமானம் ஈட்டக்கூடிய பதவி என்று நினைப்பது வெட்கப்பட வேண்டிய விஷயம் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

ராஜஸ்தானில் பிரசவத்தின் போது உயிரிழந்த கர்ப்பிணி: உறவினர்கள் குற்றஞ்சாட்டியதால் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் பெண் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தெளசா மாவட்டத்தில் லால்சோட் பகுதியை சேர்ந்தவர் அர்ச்சனா ஷர்மா. மருத்துவரான இவர் தமது கணவர் உடன் இணைந்து மருத்துவமனை நடத்தி வந்துள்ளார். அந்த மருத்துவமனையில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு அர்ச்சனா பிரசவம் பார்த்த பொழுது கர்ப்பிணி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, கர்ப்பிணி பெண்ணின் உறவினர்கள் மருத்துவர் அர்ச்சனா மீது குற்றஞ்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டதோடு காவல்நிலையத்திலும் புகார் அளித்தனர். … Read more

எழும்பூர் உதவி ஆய்வாளர் பொய் வழக்கு போடுவதாக தற்கொலை முயற்சி

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு எழும்பூர் உதவி ஆய்வாளர் பொய் வழக்கு போடுவதாகக் கூறி மூன்று பேர்; தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை வேப்பேரியில் அமைந்துள்ள சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தின் முதல் நுழைவாயில் முன்பு நேற்றிரவு குடிபோதையில் வந்த மூன்று நபர்கள் தங்கள் கைகள் மற்றும் உடலில் பிளேடால் அறுத்துக் கொண்டும் உடம்பில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூச்சலிட்டுள்ளனர். பின்னர் காவல் ஆணையர் அலுவலகத்தில் பணியில் இருந்த காவலர்கள் … Read more

தள்ளிப்போன ரிலீஸ்… எப்போது ரிலீஸாகும் `மன்மத லீலை'? வெளியானது அடுத்த அப்டேட்!

‘மன்மத லீலை’ திரைப்படம் இன்று காலை ஷோ வெளியாகாத நிலையில், படம் எப்போது திரைக்கு வரும் என்ற அடுத்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது படக்குழு. ’மாநாடு’ திரைப்படத்தின் வெற்றிக்குப்பிறகு இயக்குநர் வெங்கட் பிரபு ‘மன்மத லீலை’ படத்தினை இயக்கியிருந்தார். நடிகர் அசோக் செல்வன் நாயகனாக நடித்துள்ள இப்படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார். வெங்கட் பிரபுவின் உதவி இயக்குநர் மணிவண்ணன் கதையை எழுதியுள்ளார். ராக்ஃபோர்டு எண்டெர்டைன்மெண்ட் சார்பில் டி முருகானந்தம் தயாரித்துள்ளார். வெங்கட் பிரபுவின் 10-வது படமாக உருவாகியுள்ள ’மன்மத … Read more

பலவீனங்களை பலமாக ஆக்குங்கள்: மாணவர்களை ஊக்கப்படுத்திய பிரதமர்| Dinamalar

புதுடில்லி: பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, ‛உங்கள் பலவீனங்களை பலமாக ஆக்குங்கள்’ என ஊக்கப்படுத்தினார். மாணவர்கள் தேர்வில் எதிர்கொள்ளும் மன அழுத்தத்தை போக்கும் வகையில், கடந்த 2018 முதல் ஒவ்வொரு ஆண்டும் பிரதமர் மோடி பள்ளி, கல்லூரி மாணவர்களுடன் ‛பரிக்ஷா பே சர்ச்சா’ என்னும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் உரையாற்றி வருகிறார். கடந்த 2021ம் ஆண்டு மட்டும் கோவிட் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, காணொலி காட்சி வாயிலாக கலந்துரையாடினார். இந்நிலையில், இந்தாண்டுக்கான (2022) … Read more

'மன்மத லீலை, இடியட்' வெளியீட்டில் சிக்கல்

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ஏப்ரல் மாதம் 1ம் தேதியே சிக்கலுடன் ஆரம்பித்துள்ளது. இன்று தியேட்டர்களில் “செல்ஃபி, மன்மத லீலை, இடியட், பூ சாண்டி வரான்” ஆகிய படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இவற்றில் 'மன்மத லீலை, இடியட்' ஆகிய படங்களுக்கு காலை சிறப்புக் காட்சியாக 7.45, 8 மணி ஆகிய காட்சிகளுக்கான முன்பதிவும் நடைபெற்றது. இந்நிலையில் இந்தக் காலை காட்சிகள் திடீரென ரத்து செய்யப்பட்டது. தியேட்டர்கள் முன்பு காத்திருந்தவர்களுக்கு விரைவில் படம் வரும் என்ற தகவல் மட்டுமே தரப்பட்டது. … Read more

வீட்டு கடன் வாங்குவோர் ஷாக்.. ஏப்ரல் 1 முதல் ரூ.1.5 லட்சம் வரி சலுகை ரத்து.. மத்திய அரசு முடிவு..!

2022-23ஆம் நிதியாண்டு துவங்கிவிட்ட நிலையில் பல வரி மாற்றங்கள் நடைமுறைக்கு வருகிறது, இதனால் மக்கள் அனைவரும் எந்த விதத்தில் அதிகப் பாதிப்பையும், எந்த இடத்தில் கூடுதல் லாபம் கிடைக்கப்போகும் என்பதையும் கவனித்து வருகின்றனர். இந்நிலையில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் புதிய வீட்டை வங்கி கடன் மூலம் வாங்கத் திட்டமிடுவோருக்கு அதிர்ச்சி அளிக்கும் செய்தி காத்திருக்கிறது. தங்கம் விலை ரூ.3600-க்கு மேல் வீழ்ச்சி.. வாங்க சரியான இடமா..ஆபரண தங்கம் நிலவரம் என்ன? மத்திய அரசு மத்திய அரசு … Read more

அடுத்த பிரச்சினைக்கு தயாராகும் சந்தியா… சிவகாமி நிலைமை என்னவோ…!

Tamil Serial Raja rani 2 Rating Update : கன்னியமா போட்டுக்கிற எந்த ட்ரெசும் நல்ல ட்ரெஸ்தான் என்று சொன்னது உண்மையியே சூப்பர் யா இப்போதான் கொஞ்சம் சரியான ரூட்டல போறீங்க என்று சொல்ல வைத்துள்ளது ராஜா ராணி 2. விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று ராஜா ராணி 2. இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதை விட விமர்சனங்களை பெற்றதே அதிகம். அதற்கு முக்கிய காரணம் இந்த சீரியலின் திரைக்கதை. திருமணத்திற்கு … Read more

தற்காலிக நீக்கம் கட்சி கொடுத்த தண்டனை., கைது செய்வது எப்போது? முதல்வர் ஸ்டாலினுக்கு அறப்போர் இயக்கம் கேள்வி.!

போலீசாரை மிரட்டிய வீடியோ வெளியான நிலையில், திமுக கவுன்சிலரின் கணவர் ஜெகதீசன் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சென்னை : ராயபுரம் கிழக்கு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை மூன்று பேர் சேர்ந்து மர்ம கும்பல் மிரட்டும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இந்த காணொளி குறித்து வெளியான முதல் கட்ட தகவலின்படி, போலீசாரை மிரட்டியது  திமுக பெண் கவுன்சிலரின் கணவர் ஜெகதீசன் என்பது தெரியவந்தது. மேலும் அவர் திமுகவில் பொறுப்பில் இருப்பதாகவும் … Read more