`அங்கிளை அட்ஜெஸ்ட் பண்ணிக்கோ’ – தாயின் துணையுடன் திருமணம் தாண்டிய உறவால் சிறார் வதைக்கு ஆளான மாணவி

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவர் தனது மனைவி சுனிதா மற்றும் 11-ம் வகுப்பு படிக்கும் 16-வயதான மகளுடன் வசித்து வருகிறார். கூலித் தொழிலாளியான ராமசாமி கடந்த சில வருடங்களுக்கு முன் முதுகு தண்டுவட பிரச்னையால் படுத்த படுக்கையாகி, வீட்டிலேயே முடங்கியுள்ளார். இதனால் குடும்ப வறுமையால் வாடியது. குடும்ப சுமையை குறைக்க ராமசாமியின் மனைவி சுனிதா(37) புதுக்கடை பகுதியில் ராஜையன்(48) என்பவர் நடத்தி வரும் பர்னிச்சர் கடையில் வேலைக்கு சென்றுள்ளார். நாளடைவில் ராஜையனுக்கும் சுனிதாவுக்கும் … Read more

வன்னியர் இடஒதுக்கீடு | '5 மாதங்களில் 6 தடைகள் தகர்ப்பு… எஞ்சிய ஒன்றை கடக்கத் தெரியாதா?' – பாமகவினருக்கு ராமதாஸ் கடிதம்

சென்னை: “வன்னியர் இடஒதுக்கீட்டிற்கு எதிராக இருப்பது ஒரே ஒரு முட்டுக்கட்டை தான். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கான பிரதிநிதித்துவம் குறித்த தெளிவான புள்ளிவிவரங்கள் இல்லை என்பதுதான் அதுவாகும். ஐந்து மாதங்களில் 6 தடைகள் தகர்த்தெறிந்த நமக்கு, மீதமுள்ள ஒற்றை முட்டுக்கட்டையை அரசியல் போராட்டத்தின் மூலம் கடக்கத் தெரியாதா?” என்று பாமகவினருக்கு எழுதிய கடிதத்தில் அக்கட்சின் நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து இன்று ‘நாமின்றி சமூக நீதியில்லை… நிச்சயம் வெல்வோம் கலங்காதே!’ என்ற தலைப்பில் அவர் தனது கட்சியினருக்கு … Read more

72 மாநிலங்களவை எம்.பி.க்கு பிரிவு உபச்சார விழா

புதுடெல்லி: மார்ச் முதல் ஜூலை மாதம் வரை மாநிலங்களவையில் 72 எம்.பி.க்களின் பதவிக் காலம் நிறைவடைகிறது. அதன்படி ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி, அம்பிகா சோனி, ஆனந்த் சர்மா, ஜெய்ராம் ரமேஷ், சுரேஷ் பிரபு, பிரபுல் படேல், சுப்பிரமணியன் சுவாமி, சஞ்சய் ராவத், மேரி கோம், ரூபா கங்குலி, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் உள்ளிட்டோரின் பதவிக் காலம் முடிகிறது. பதவிக் காலம் நிறைவடையும் எம்.பி.க்களுக்கு குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவை தலைவருமான வெங்கய்ய நாயுடு தலைமையில் … Read more

படை பலத்துடன் நிர்மலாவை சந்தித்த மு.க.ஸ்டாலின்!

டெல்லியில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், அரசு முறைப் பயணமாக, தலைநகர் டெல்லிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். டெல்லியில் நேற்று, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். அப்போது தமிழகத்தின் தேவைகள் … Read more

சிம்புக்கு பதில் தனுஷ் வந்தது எப்படி ? பலரும் அறியாத தகவல் ஆச்சே இது..!

தனுஷ் துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமாக அதே சமயத்தில் காதல் அழிவதில்லை படத்தின் மூலம் அறிமுகமானார் சிம்பு. இருவரும் சமகாலத்தில் அறிமுகமானதால் ரசிகர்களால் போட்டி நடிகர்களாக பார்க்கப்பட்டனர். ரசிகர்களை தாண்டி சிம்பு மற்றும் தனுஷ் இடையே போட்டி இருந்துவந்தது பலரும் அறிந்ததே. ரஜினி மற்றும் கமல், விஜய் மற்றும் அஜித் வரிசையில் சிம்பு மற்றும் தனுஷ் ஆகியோரும் போட்டிநடிகர்களாக பார்க்கப்பட்டனர். ஆனால் மற்ற போட்டி நடிகர்களிடையே இருந்து வந்த நட்பு இவர்களிடம் இருந்ததா என்றால் அது சந்தேகமே. … Read more

பிரேசில் நாட்டில் 30 தொழிலாளர்களுடன் சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து… 11 பேர் உயிரிழப்பு

பிரேசிலில் மலைச் சாலையில் சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். 30 பணியாளர்களை ஏற்றிக் கொண்டு தொழிற்சாலை நோக்கி சென்ற பேருந்து கனமழையின் காரணமாக சாலையில் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். விபத்தில் 11 தொழிலாளர்கள் சம்பவ  இடத்திலேயே உயிரிழந்ததாகவும் 20 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். விபத்து குறித்து விசாரித்து வருவதாக போலீசார் கூறினர்.  Source link

விமானங்களில் பயன்படுத்தும் எரிபொருள் விலை 2 விழுக்காடு உயர்வு

விமானங்களுக்கான எரிபொருள் விலை 2 விழுக்காடு உயர்த்தப்பட்டு இதுவரை இல்லாத வகையில் ஆயிரம் லிட்டர் ஒரு இலட்சத்து 12 ஆயிரத்து 925 ரூபாயை எட்டியுள்ளது. விமான எரிபொருள் விலை வழக்கமாக ஒரு மாதத்தில் இருமுறை மாற்றியமைக்கப்படுகிறது. மார்ச் 16 அன்று ஒரே நாளில் விமான எரிபொருள் விலை 18 புள்ளி 3 விழுக்காடு உயர்த்தப்பட்டது.  இந்நிலையில் இன்றும் விமான எரிபொருள் விலை 2 விழுக்காடு உயர்த்தப்பட்டுள்ளது.  உக்ரைன் போரால் உலக அளவில் எரிபொருள் விலை உயர்ந்ததே இதற்குக் … Read more

இன்னும் சில வாரங்களில் பிரித்தானியாவில் முக்கிய உணவுப்பொருள் ஒன்றிற்குத் தட்டுப்பாடு: விவசாயிகள் எச்சரிக்கை

அதிகரித்து வரும் உற்பத்திச் செலவுகளை ஈடு செய்யும் அளவில் வர்த்தகர்கள் விலையை உயர்த்தாத பட்சத்தில், பிரித்தானியாவில் இன்னும் சில வாரங்களில் முட்டைக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்படலாம் என விவசாயிகள் எச்சரித்துள்ளார்கள். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படாலன்றி, முட்டை தட்டுப்பாட்டைத் தவிர்க்கமுடியாது என பிரித்தானிய முட்டை உற்பத்தியாளர் கவுன்சில் தெரிவித்துள்ளது. உற்பத்திச் செலவு எக்கச்சக்கமாக உயர்ந்துள்ளதைத் தொடர்ந்து, தொழில் திவாலாகும் நிலைக்கு ஆளாகியுள்ளதால், சுமார் 10 முதல் 15 சதவிகித விவசாயிகள் முட்டை உற்பத்தித்தொழிலையே விட்டுவிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. … Read more

டெல்லியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மற்றும் தலைவர்களுடன் சந்திப்பு – ஆடியோ

டெல்லியில் திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயம் திறப்பு விழா நாளை நடைபெற உள்ள நிலையில், அதற்காக டெல்லியில் முகாமிட்டு உள்ள  முகாமி தமிழக முதல்வர் ஸ்டலின், அங்கு சோனியா காந்தி மற்றும் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து, தமிழக தேவைகள் குறித்தும் மனு கொடுத்தார். அத்துடன் கட்சி பேதமின்றி அனைத்து கட்சித் தலைவர்களையும்  திமுக அலுவலகம் திறப்பு விழாவுக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். https://patrikai.com/wp-content/uploads/2022/04/Pari-Audio-2022-04-01-at-12.01.52-PM.ogg

சென்னையில் 2-ம்கட்ட பணிகளை நிறைவேற்ற மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு ஜப்பான் ரூ.4,710 கோடி நிதி

சென்னை: சென்னையில் போக்கு வரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் முதல்கட்ட மெட்ரோ ரெயில் பாதைகள் அமைக்கப்பட்டு போக்கு வரத்து நடந்து வருகிறது. அடுத்து 2-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் தொடங்கியுள்ளன. 2-வது கட்டத்தில் 3 வழித் தடங்களில் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்பட உள்ளது. மாதவரம் பால்பண்ணையில் இருந்து சோழிங்கநல்லூர் வரை அமைக்கப்படும் மெட்ரோ ரெயில் திட்டம் முக்கியமானதாக கருதப்படுகிறது. 2-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்டப்பணிகளை நிறைவேற்ற … Read more