கைதிகளை ஜாமீனில் விடுதலை செய்யலாம்: பிரதமர் மோடி சொன்ன யோசனை!

டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும் மாநில முதலமைச்சர்கள் மற்றும் உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் கூட்டு மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நமது நாட்டில், அரசியல் சாசனத்தின் பாதுகாவலாக நீதித்துறை பங்காற்றி வரும் நிலையில், சட்டமன்றங்கள் மக்களின் விருப்பங்களை பிரதிபலித்து வருகின்றன. அரசியல் சாசனத்தின் இரு பிரிவுகளின் சங்கமம் மற்றும் சமன்பாடு நாட்டில் சிறப்பான நீதிபரிபாலன முறைக்கு உரிய வழிகாட்டுதலை உருவாக்கும்’’ என்று கூறினார். நீதித்துறை மற்றும் … Read more

உக்ரைனில் இருந்து ரஷ்யாவிற்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தஞ்சம்

பிப்ரவரி 24ஆம் தேதிக்கு பிறகு உக்ரைனில் இருந்து ரஷ்யாவிற்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தஞ்சம் புகுந்துள்ளதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். இது குறித்து சீன செய்தி நிறுவனத்திடம் கூறிய அவர், உக்ரைனில் உள்ள 28 லட்சம் மக்கள் தங்களை ரஷ்யாவிற்கு வெளியேற்றும்படி கேட்டுக்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய ஆதரவு பகுதிகளான, டொனட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்கில் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் மற்றும் அப்பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே, ஆயிரக்கணக்கான மக்களை ரஷ்யா … Read more

ஜல்லி லோடு ஏற்றிச் சென்ற லாரி மீது டிப்பர் லாரி மோதி விபத்து -சிசிடிவி

புதுச்சேரியில் ஜல்லி லோடு ஏற்றிச் சென்ற லாரி மீது, டிப்பர் லாரி பக்கவாட்டில் அதிவேகமாக மோதியதில், ஜல்லி ஏற்றிச் சென்ற லாரி நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன. புதுச்சேரியில் இருந்து ஜல்லிகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று கடலூர் நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. நள்ளிரவில் தவளக்குப்பம் நான்குமுனை சந்திப்பிற்கு வந்த போது, அபிஷேகப்பாக்கத்தில் இருந்து வந்த டிப்பர் லாரி ஒன்று பக்கவாட்டில் மோதியதில் ஜல்லி லோடு ஏற்றிய லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரியில் … Read more

கனடாவை விட்டு அமைதியாக வெளியேறி வரும் புலம்பெயர்ந்தோர்: அதிகம் பேசப்படாத அதிரவைக்கும் ஒரு செய்தி

கனவுகளுடன் கனடாவுக்கு புலம்பெயரும் பலர், கனடாவிலிருந்து அமைதியாக வெளியேறிக்கொண்டிருப்பதாக அதிரவைக்கும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இந்தியர்களான மன்பிரீத் சிங் (Manpreet Singh) மற்றும் அவரது மனைவியான ஹர்மீத் சிங் (Harmeet Kaur) ஆகியோர், இந்தியாவிலிருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்த புதிதில், புதிதாக கனடாவுக்கு வந்தவர்கள் என்ற வகையில் மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார்கள். ஆகவே, தங்களைப் போலவே புதிதாக வருபவர்களுக்கு உதவும் வகையில், ஒரு யூடியூப் சேனலைத் துவக்கி, தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கியுள்ளார்கள் அவர்கள். அரை மில்லியன் சப்ஸ்கிரைபர்களைக் கொண்ட … Read more

குறைந்த பட்ச ஜிஎஸ்டி 8சதவிகிதமாக உயர்வு? மே முதல் வாரத்தில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

டெல்லி: 47-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மே மாதம் முதல் வாரத்தில் நடக்கலாம் என்று டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கூட்டத்தில், ஜிஎஸ்டி சதவிகிதத்தை குறைந்த பட்சம் 8 சதவிகிதமாக அதிகரிப்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மத்திய நியமைச்சர் தலைமையில், மே மாதம் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் 47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கூடும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. தற்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்னும் ஓரிரு நாளில் … Read more

திண்டுக்கல் அரசு விழா- ரூ.40.45 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டப் பணிகளை திறந்து வைத்தார் முதல்வர்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் அரசின் பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, ரூ.40.45 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டப் பணிகளை திறந்து வைத்தார். மேலும், ரூ.206.54 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொழில் வளர்ச்சியில் உலக அளவில் தமிழகம் முன்னிலை பெறுவதற்காக தொடர்ந்து பாடுபடுவதாக தெரிவித்தார்.  தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வளர்ச்சித் … Read more

மின்வெட்டு பிரச்சனைக்கு யாரை குறைக்கூறுவீர்கள்- நேருவையா? மாநிலங்களையா? மக்களையா? – ராகுல் காந்தி கேள்வி

புது டெல்லி: இந்தியாவில் ஏற்பட்டுள்ள நிலக்கறி பற்றாக்குறைக்கும், மின்வெட்டு பிரச்சனைகளுக்கு யாரை குறைக்கூற போகிறீர்கள் என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.  வழக்கமாக தனது தோல்விகளுக்கு பிறரை குறைக்கூறி வரும் பிரதமர் மோடி, இந்த பிரச்சனைக்கு நேருவை குறைக்கூறுவீர்களா, மாநில அரசை குறைக்கூறுவீர்களா அல்லது மக்களை குறைக்கூறுவீர்களா என்று கேட்டுள்ளார். மேலும் 2015-ம் ஆண்டு பிரதமர் மோடி வாக்குறுதி அளிக்கும் வீடியோ ஒன்றை பதிவிட்ட அவர்,  2015-ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் … Read more

நடிகர் ரஜினிகாந்துக்கு உத்தரவிடக்கோரி சினிமா பைனான்சியர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

சென்னை: நடிகர் ரஜினிகாந்துக்கு உத்தரவிடக்கோரி சினிமா பைனான்சியர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பெயரை தவறாக பயன்படுத்திய கஸ்தூரி ராஜாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ரஜினிக்கு உத்தரவிடக்கோரி போத்ரா என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இரண்டாவது திருமணம் செய்வதற்காக ஆசிட்டில் எலி மருந்து கலந்து கர்ப்பிணியை கொன்ற கொடூரன்

திருமலை: இரண்டாவது திருமணம் செய்வதற்காக, மனைவியை கொடுமைபடுத்தி, ஆசிட்டில் எலி மருந்து கலந்து கொடுத்து கர்ப்பிணி மனைவியை கொன்ற கொடூரனை போலீசார் தேடி வருகின்றனர். தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் ராஜ்பேட் தண்டாவை சேர்ந்தவர் தருண் (34). இவரது மனைவி மல்காபூர் தாண்டாவை சேர்ந்த கல்யாணி (30). திருமணம் நடந்த ஒரு ஆண்டில் இருந்து கல்யாணியிடம் அதிக வரதட்சணை கேட்டு மாமியார் குடும்பத்தினரும், தனக்கு ஏற்ற ஜோடி நீ இல்லை என தருணும் கல்யாணியை கொடுமை செய்துள்ளனர். … Read more

'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் மாடல் தான் திராவிட மாடல்' – முதல்வர் ஸ்டாலின் பேச்சு

“வளர்ச்சி என்பதை அனைவருக்கும் சாத்தியப்படுத்துவதே திராவிட மாடல்” என தேனியில் நடந்த அரசு விழாவில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பேசினார். தேனி பெரியகுளம் அன்னஞ்சி பைபாஸ் சாலை அருகே ஊஞ்சாம்பட்டி கிராமத்தில் அரசு  நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  ரூ.259.82 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி,10 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவிற்கு மாவட்ட … Read more