இந்திய ராணுவத்தின் புதிய தளபதியாக மனோஜ் பாண்டே பொறுப்பேற்பு

இந்திய ராணுவத்தின் புதிய தளபதியாக மனோஜ் பாண்டே பொறுப்பேற்றுக் கொண்டார். ஏற்கெனவே தளபதியாக இருந்த மனோஜ் முகுந்த் நரவானேவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்துப் புதிய தளபதியாக ஜெனரல் மனோஜ் பாண்டே பொறுப்பேற்றுக்கொண்டார். அவரிடம் நரவானே பொறுப்புக்களை ஒப்படைத்தார். பொறியாளர் பிரிவில் இருந்து ராணுவத் தளபதி பதவிக்கு வந்த முதல் ஆள் என்கிற பெருமையையும் மனோஜ் பாண்டே பெற்றுள்ளார். புனேயில் உள்ள தேசியப் பாதுகாப்பு அகாடமியில் பயின்ற இவர் 1982ஆம் ஆண்டு ராணுவப் பொறியாளர் பிரிவில் பணியில் … Read more

அதிகபட்சம் 2 வாரத்திற்குள் தீர்வு… உக்ரேனிய மக்களுக்கு உறுதியளித்த ஜெலன்ஸ்கி

உக்ரைனில் நிலவி வரும் எரிபொருள் பற்றாக்குறைக்கு அதிகபட்சம் 2 வாரத்திற்குள் அரசாங்கம் தீர்க்கும் என ஜனாதிபதி ஜெலன்ஸ்கி உறுதியளித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யா படையெடுப்பால் அந்நாட்டில் கடும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. உக்ரைனில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளது மட்டுமின்றி பெட்ரோல் நிலையங்களில் மக்கள் வாகனத்தில் எரிபொருள் நிரப்ப  நீண்ட தூரத்திற்கு வரிசையாக பல மணிநேரம் காத்துக்கிடக்க வேண்டியுள்ளது. உக்ரைனிலிருந்து பல லட்சம் டன் உணவுப் பொருட்கள் மாயம்… அம்பலமான ரஷ்யா  இந்நிலையில், ரஷ்யர்கள் வேண்டுமென்றே எரிபொருள் உற்பத்தி, … Read more

மின் தடைசமூக ஊடகங்களில் அவதூறு பரப்பினால் நடவடிக்கை! மிரட்டுகிறார் அமைச்சர் செந்தில்பாலாஜி

கரூர்:  மின் தடை குறித்து சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் செந்தில்பாலாஜி மிரட்டல் விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் அவ்வப்போது மின்தடை ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக தென்மாவட்டங்களில் உள்ள பல கிராமங்களில் அடிக்கடி மின்தடை உள்ளது. ஆனால், மாநில அரசு மின்தடை இல்லை என்றும், தூத்துக்குடி அனல் மின்நிலையத்துக்கு நிலக்கரி கிடைக்காததால்தான் மின்விநியோகம் தடை ஏற்படுவதாக தமிழகஅரசு கூறி வருகிறது. தற்போது போதுமான அளவுக்கு மத்தியஅரசு நிலக்கரி ஒதுக்கி உள்ளதால், இனிமேல் மின்தடை ஏற்படாது என்று … Read more

சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் அரசு அலுவலகங்கள் இயங்க வேண்டும்- மக்கள் நீதி மய்யம்

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மக்கள் பல்வேறு சலுகைகள், சான்றிதழ்கள் பெறுவதற்காக அரசு அலுவலகங்களை நாடுகின்றனர். அரசு அலுவலகங்களுக்கு மக்கள் பலமுறை படையெடுப்பது எந்த வகையிலும் நியாயமில்லை. பன்னெடுங்காலமாகத் தொடரும் இப்பிரச்சனையின் ஒருபகுதியைச் சரிசெய்யும் நோக்கில் தமிழக அரசு எடுத்துள்ள இந்த முயற்சி வரவேற்புக்கும், பாராட்டுக்கும் உரியது. பத்திரப்பதிவு அலுவலகங்கள் சனிக்கிழமையும் இயங்கும் என்பதே அந்த அறிவிப்பு. இந்த அறிவிப்பை முன்னெடுத்த அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், ஒப்புதலளித்த முதல்வர் அனைவரும் நல்லதொரு … Read more

டெல்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்

உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் இன்று சந்தித்து பேசினார். உ.பி மாநில முதல்வராக யோகி ஆதித்யநாத் தொடர்ந்து 2வது முறையாக பதவியேற்ற பிறகு, அவர் இரண்டு முறை டெல்லி சென்றுள்ளார். முன்னதாக யோகி ஆதித்யநாத் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு டெல்லி சென்றிருந்தபோது அமித் ஷாவை சந்தித்தார். அப்போது, மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி மற்றும் நிர்வாக முயற்சிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று முதல்வர் யோகியுடன் … Read more

ஆசிய பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெண்கலம் வென்றார்

சென்னை: ஆசிய பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெண்கலம் வென்றுள்ளார். அரையிறுதி போட்டியில் ஜப்பான் வீராங்கனை யாமகுச்சி வெற்றி பெற்றதை அடுத்து பி.வி.சிந்துவுக்கு வெண்கலம் கிடைத்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குழந்தையுடன் பெற்றோர் செல்ல சிறப்பு நுழைவு தரிசன திட்டம்: 2 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அமலானது

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரு வயதிற்குட்பட்ட குழந்தையுடன் பெற்றோர்கள் குறுகிய தொலைவில் நடந்து சென்று சுவாமி தரிசனம் செய்யும் விதமாக சிறப்பு நுழைவு தரிசனத்தில் மீண்டும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த தரிசனம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. வைகுண்டம் காத்திருப்பு அறையில் உள்ள சுபதம் நுழைவாயில் வழியாக மதியம் 12 மணி முதல் மாலை 5 மணி வரை குழந்தைகளுடன் பெற்றோர் இலவசமாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். … Read more

'ஸ்டேஷன் மாஸ்டர் பணிக்கான தேர்வை தமிழ்நாட்டிலேயே நடத்துக' -டிஆர்.பாலு எம்.பி கடிதம்

ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் பணி நியமனங்களுக்கான தேர்வை தமிழ்நாட்டிலேயே நடத்த வேண்டுமென ரயில்வே அமைச்சர் அஸ்வினி குமார் வைஷ்ணவுக்கு திமுக நாடாளுமன்றக் குழுத்தலைவர் டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார். மே 9 மற்றும் 10ஆம் தேதிகளில் நடைபெற உள்ள இரண்டாம் கட்ட தேர்வு மையங்கள் அலகாபாத், மைசூர், ஷிமோகா, உடுப்பி உள்ளிட்ட தொலைதூர பகுதிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் கடும் இன்னலுக்கு ஆளாவார்கள். ஆகவே தமிழ்நாட்டில் உள்ள நகரங்களிலேயே தேர்வு மையங்களை … Read more

ஒரே ஒரு படம்… டோட்டல் இந்தியாவும் க்ளோஸ்! – வாசகர்களின் கமெண்ட்ஸ் #Like#Dislike

தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, ஏப்ரல் 29-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக ‘கர்நாடகாவில் தொடங்கியிருக்கும் இந்திப் போராட்டம்… தென்னிந்தியா முழுக்க பரவுகிறதா இந்தி எதிர்ப்புணர்வு?’ எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த … Read more

பஞ்சாபில் போலீஸ் உயர் அதிகாரிகள் மாற்றம்| Dinamalar

சண்டிகர்: பஞ்சாபில் வாள் கொண்டு இரு தரப்பினர் மோதிக்கொண்ட சம்பவம் தொடர்பாக ஐ.ஜி உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.இங்கு பஞ்சாபை பிரித்து தனிநாடாக அறிவிக்க, பல ஆண்டுகளுக்கு முன் ஆயுதப் போராட்டம் நடத்திய காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு, மீண்டும் தலையெடுத்து வருகிறது. காலிஸ்தான் குழுக்களுக்கு எதிராக கோஷம் எழுப்பியபடி, சிவசேனா கட்சியினர் நேற்று பாட்டியாலாவில் பேரணியாக சென்றனர். இந்த பேரணி மீது, காலிஸ்தான் ஆதரவு சீக்கிய குழுக்கள் கற்களை வீசி திடீர் தாக்குதல் நடத்தினர். சம்பவ … Read more