உயர் எத்தனால் எரிபொருளின் தற்காலிக விற்பனைக்கு தள்ளுபடி… அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் அறிவிப்பு

அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் உயர் எத்தனால் எரிபொருளின் தற்காலிக விற்பனையை தள்ளுபடி செய்து அறிவித்தது. எரிபொருள் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் உயர் எத்தனால் எரிபொருள் விற்பனையை அனுமதித்துள்ளது. இது சோளம் உள்ளிட்ட பொருட்களை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படும் எத்தனாலின் விற்பனையை அதிகரிக்கும் என கருதப்படுகிறது. மேலும் 16 ஆண்டுகளில் இல்லாத அளவில் ஏற்பட்டுள்ள பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சியாகவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் எத்தனாலை போட்டியாக கருதும் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு அறிவிப்பு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. … Read more

தெலுங்கானாவில் 2 மாடி கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து – 4 பேர் பலி.!

தெலுங்கானாவில் அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு பகுதி இடிந்து விழுந்த விபத்தில், 4 பேர் உடல்நசுங்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாதாத்ரி மாவட்டத்தில் சுமார் 35 ஆண்டுகள் பழைமையான இரண்டு மாடி கட்டிடம் இருந்தது. இந்த கட்டிடத்தின் கீழே கூரை போல ஷெட் அமைத்து கடைகள் செயல்பட்டு வந்த நிலையில், உறுதித் தன்மை இழந்திருந்த அந்த கட்டிடத்தின் மேல் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து கூரை மீது விழுந்தது. இதில், 4 பேர் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே … Read more

சுவிட்சர்லாந்துக்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி

மே மாதம் 2ஆம் திகதியன்று, சுவிட்சர்லாந்துக்குள் நுழைவதற்கான கொரோனா தொடர்பான அனைத்துக் கட்டுப்பாடுகளும் விலக்கிக்கொள்ளப்பட உள்ளன. இந்த தகவலை சுவிஸ் புலம்பெயர்தல் மாகாணச் செயலகம் தெரிவித்துள்ளது. 2022 மே 2 முதல், சுவிட்சர்லாந்துக்கு வரும் அனைத்துப் பயணிகளும் வழக்கம்போல, சாதாரண விசா கட்டுப்பாடுகளை மட்டுமே சந்திக்க இருக்கிறார்கள். அதாவது, Schengen பகுதிக்கு வெளியே வாழும் மக்கள், அதவது சுவிஸ் குடியுரிமையோ, அல்லது சுவிஸ் வாழிட உரிமமோ இல்லாதவர்கள், உதாரணமாக அமெரிக்கக் குடிமக்கள் என்று வைத்துக்கொள்வோம், அவர்கள் தடுப்பூசி … Read more

4 நாள் பயணமாக பாஜக தலைவர் அண்ணாமலை இலங்கை பயணம்!

சென்னை: 4 நாட்கள் பயணமாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இலங்கை செல்கிறார். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அங்குள்ள தமிழர்கள் நிலை குறித்த அறிய அண்ணாமலை சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இலங்கையில் ராஜபக்சே குடும்பத்தினரின் மோசமான ஆட்சியால் இலங்கை நாடே திவாலாகும் நிலையில் உள்ளது. ஆட்சியாளர்களின் மோசமான நிர்வாகம் மற்றும்,   2019 ஈஸ்டர் குண்டு வெடிப்பாலும் அந்நாட்டின் முக்கிய வருமானமான சுற்றுலா தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கியில் சிக்கி … Read more

இந்தியா விரைவான வளர்ச்சி பெற கடின உழைப்பு நல்கிட உறுதி ஏற்போம்- தமிழக கவர்னர் மே தின வாழ்த்து

சென்னை: தமிழக கவர்னர் என்.ரவி வெளியிட்டுள்ள மே தினச் செய்தியில் கூறி இருப்பதாவது: சர்வதேச தொழிலாளர் தினம் என்று அழைக்கப்படும் இந்த மே தினத்தில், தமிழ் நாட்டைச் சார்ந்த உழைக்கும் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நமது சமுதாயத்தின் முன்னேற்றம், செழிப்பு, நல்வாழ்வு மற்றும் நாட்டிற்கான புகழ்பெற்ற சேவைகளுக்காக உழைக்கும் சக்திகளின் தனித்துவமான பங்களிப்புகளைக் கொண்டாடுவதற்கும் நினைவுகூருவதற்கும் உகந்த நாள் இதுவாகும். நமது தேசம் சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவைக் கொண்டாடும் வேளையில், … Read more

ஸ்ரீநகரில் தெருநாய்கள் கடித்து சுற்றுலா பயணிகள் உள்பட 39 பேர் படுகாயம்

ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரின் டலகேட் பகுதியில் தெருநாய்கள் கூட்டம் தாக்கியதில் சுமார் 39 பேர் காயமடைந்துள்ளனர். இதில், 17 சுற்றுலாப் பயணிகளும், 22 உள்ளூர்வாசிகளும் அடங்குவர். காயமடைந்த அனைவரும் ஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை, எஸ்எம்எச்எஸ் மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் கவால்ஜீத் சிங், நாய் கடியால் பாதிக்கப்பட்ட 39 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தினார். நகரில் அதிகரித்து வரும் தெருநாய் தொல்லையை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும என்று அப்பகுதி மக்கள் … Read more

வங்கக்கடலில் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுத் பகுதி உருவாக வாய்ப்பு.: வானிலை மையம் தகவல்

சென்னை: வங்கக்கடலில் தெற்கு அந்தமான் கடல், அதை சார்ந்த பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுத் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாவதால் மே 4, 5-ல் அந்தமான் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

மே 4-ல் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி; வட மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லி: வங்கக்கடலில் தெற்கு அந்தமான் கடல், அதை சார்ந்த பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மே 4-ல் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி:வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால் மே 4, 5ல் அந்தமான் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கிறது. தெற்கு அந்தமான், தென் கிழக்கு வங்கக்கடலில் மே 4ம் தேதி முதல் பலத்த சூறாவளி வீச வாய்ப்புள்ளது. மணிக்கு 40 முதல் 60 … Read more

நெல்லை: மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் – சிகிச்சையில் இருந்த மாணவர் உயிரிழப்பு

அம்பாசமுத்திரம் அருகே அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் கையில் (ஜாதி அடையாள) கயிறு கட்டுவது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்த மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள பாப்பாக்குடி பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர்கள் முருகன் – உச்சிமாகாளி தம்பதியர். இவர்களுக்கு செல்வசூர்யா (17) என்ற மகனும், பவித்ரா (15) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், செல்வசூர்யா, இடைகாலை அடுத்த பள்ளக்கால் புதுக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பில் படித்து வந்தார். … Read more

ஹிந்தி நடிகை போட்டார் குண்டு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஹிந்தி மொழி பற்றிய சர்ச்சை ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் சமஸ்கிருத மொழியில் இருந்து தான் தமிழ் உள்ளிட்ட பிற மொழிகள் தோன்றின. ஆகவே சமஸ்கிருதத்தை ஏன் தேசிய மொழியாக ஆக்க கூடாது என தெரிவித்துள்ளார் ஹிந்தி நடிகை கங்கனா ரணாவத். பாலிவுட்டின் பிரபல நடிகை கங்கனா ரணாவத். அவ்வப்போது சர்ச்சையான விஷயங்களை பேசி சமயங்களில் வம்பில் மாட்டிக் கொள்வார். மும்பையில் தனது பட விழாவில் பங்கேற்ற இவரிடம் சில தினங்களுக்கு … Read more