ஏர்டெல் முக்கிய அறிவிப்பு: ப்ரீபெய்டு சேவை கட்டணம் விரைவில் உயர்வு.. ஜியோ திட்டம் என்ன..?

இந்திய மக்கள் ஏற்கனவே பெட்ரோல், டீசல், மின்சாரம், சமையல் எரிவாயு, சமையல் எண்ணெய், உணவுப் பொருட்களின் விலை உயர்வால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் தற்போது டெலிகாம் கட்டணமும் உயர உள்ளது.

அதிலும் குறிப்பாக நாட்டின் முன்னணி டெலிகாம் சேவை நிறுவனமான ஏர்டெல், ஏற்கனவே பல முறை கட்டணத்தை உயர்த்தியுள்ள நிலையில் மீண்டும் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது.

இதனால் ஏர்டெல் சேவையைப் பயன்படுத்தும் சாமானிய மற்றும் நடுத்தர மக்கள் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொள்கின்றனர்.

புதிய டெக் சென்டரை அமைக்கும் ஏர்டெல்.. எந்த ஊரில் தெரியுமா..?!

 ஏர்டெல்

ஏர்டெல்

ஏர்டெல் தனது ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை மீண்டும் உயர்த்த திட்டமிட்டு உள்ளதாக ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கோபால் விட்டல் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த முறை ஏர்டெல் நிறுவனத்தின் ஒரு வாடிக்கையாளரின் சராசரி வருவாய் (ARPU) ரூ.200 ஆக உயர்த்தும் இலக்குடன் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது.

வோடபோன் ஐடியா, ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல்

வோடபோன் ஐடியா, ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல்

கடந்த ஆண்டு, வோடபோன் ஐடியா, ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் உள்ளிட்ட தொலைத்தொடர்பு சேவை அளிக்கும் 3 தனியார் நிறுவனங்களும் கூடுதலான வருவாய் பெறவும், நஷ்டத்தின் அளவுகளைக் குறைக்கவும் தங்களது ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தின.

மக்கள் பாதிப்பு
 

மக்கள் பாதிப்பு

ஏற்கனவே உயர்த்தப்பட்ட கட்டணங்கள் மூலம் மக்கள் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் நிலையில் இப்போது சந்தாதாரர்களுக்குப் பெரும் அடியாக, ஏர்டெல் அதன் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை மீண்டும் அதிகரிக்கத் தயாராகி உள்ளது.

டெலிகாம் நிறுவனங்கள்

டெலிகாம் நிறுவனங்கள்

இந்திய டெலிகாம் நிறுவனங்கள் ஏற்கனவே அதிகப்படியான கடன் சுமையும், போட்டியும் எதிர்கொண்டு வரும் நிலையில் மத்திய அரசு 5ஜி அலைக்கற்றை விலை குறைத்ததது போதுமானதாக இல்லை என்று ஏர்டெல் கூறியுள்ளது.

18-25 சதவீத கட்டண உயர்வு

18-25 சதவீத கட்டண உயர்வு

கடந்த வருடம் டெலிகாம் நிறுவனங்கள் 18-25 சதவீதம் வரையில் கட்டணத்தை உயர்த்திய நிலையில், தற்போது மீண்டும் கட்டணத்தை உயர்த்தி 5ஜி அலைக்கற்றை ஏலத்திற்குப் போதுமான நிதியை திரட்ட முடிவு செய்துள்ளது. இதனால் 5ஜி சேவை கட்டணமும் மிகப்பெரிய அளவில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

4ஜி வாடிக்கையாளர்கள்

4ஜி வாடிக்கையாளர்கள்

ஏர்டெல் நிறுவனம் விலை உயர்வுக்குப் பின்பு மார்ச் காலாண்டில் 52.4 லட்சம் 4ஜி வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. இதன் எண்ணிக்கை டிசம்பர் காலாண்டில் வெறும் 3 மில்லியனாக இருந்தது. நவம்பர் 2021ல் முதலாவதாக ஏர்டெல் நிறுவனம் கட்டணத்தை உயர்த்தியதும் கவனிக்க வேண்டிய ஒன்று.

பார்தி ஏர்டெல் Q4

பார்தி ஏர்டெல் Q4

மார்ச் காலாண்டில் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் மொத்த லாபம் 165 சதவீதம் அதிகரித்து ரூ.2,008 கோடி ஆகவும், மொத்த வருவாய் 22 சதவீதம் அதிகரித்து ரூ.31,500 கோடியாகவும் அதிகரித்துள்ளது. இக்காலாண்டில் ஏர்டெல் நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 1 சதவீதம் அதிகரித்து 360 மில்லியன் ஆக உள்ளது.

ஜியோ

ஜியோ

இந்த முறையும் இதே போட்டி தான் யார் முதலில் உயர்த்த போகிறார்கள் என்பது தான் முக்கியப் பிரச்சனையாக உள்ளது. ஏர்டெல் உயர்த்தும் வரையில் ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் ஐடியா உயர்த்தாது.

இதற்கிடையில் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை அறிமுகம் செய்யத் திட்டமிட்டு அதற்கான பணிகளைச் செய்து வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Airtel may hike the price of its prepaid plans again says Airtel CEO Gopal Vittal

Airtel may hike the price of its prepaid plans again says Airtel CEO Gopal Vittal ஏர்டெல் முக்கிய அறிவிப்பு: ப்ரீபெய்டு சேவை கட்டணம் விரைவில் உயர்வு.. ஜியோ திட்டம் என்ன..?

Story first published: Saturday, May 21, 2022, 16:58 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.