கீதாஞ்சலி – விகடன் விமர்சனம்

முக்கோணக் காதல்! படிப்பை முடித்துவிட்டு கொடைக்கானலுக்குத் திரும்பும் ஜேம்ஸை (முரளி), ஏழைப் பெண்னை ஜூலி (பவ்யா) காதலிக்கிறாள். பதிலுக்கு அவளிடம் ஜேம்ஸின் காதல் பரிவர்த்தனை!

இவர்கள் காதலித்துக் கொண்டிருக்கும் போது, பணத் திமீர் பிடித்த எஸ்டேட் முதலாளினியான டயானாவை (நளினி) ஒரு விபத்திலிருந்து காப்பாற்றுகிறான் ஜேம்ஸ். திடீரென்று பணத் திமீர் மாயமாக மறைந்துவிட, தன்னைக் காப்பாற்றியதற்கு நன்றி செலுத்தும் வகையில் ஜேம்லை எஸ்டேட்டின் ஜெனரல் மானேஜராக்கி, அவனைக் காதலிக்கவும் ஆரம்பிக்கிறாள் டயானா.

இந்த முக்கோணக் காதலில், ஜேம்ஸுக்கும் ஜூலிக்கும் இறுதியில் திருமணம் நிச்சயமாக, டயான வாபஸ்! அரைத்த மாவு! ஏற்கெனவே பல ‘மிக்ஸி’ (படங்களில்!) களில் அரைக்கப்பட்ட இந்த ‘முக்கோண மாவை’க்கூடப் காதல் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால், இந்தக் காதலுக்கிடையே அநாவசியமாக ஜாதிப் பிரச்னையை வலுக்கட்டாயமாகப் புகுத்தியிருப்பதுதான் படத்துக்கே தேவையில்லாதது!காமெடி அசிங்கம்! காமெடி என்ற பெயரில் கவுண்டமணிக்குக் கிருஷ்ணன் என்ற பெயரைச் சூட்டி… அவர் முதலாளியைக் கொல்ல டூத் பிரஷ்ஷில் விஷம் வைக்கிறார். 

போலிச் சாமியார் வேடம் போட்டு ஊரை ஏமாற்றுகிறார். இன்னும் எத்தனை படங்களில் இந்தக் ‘கவுண்டமணி சாமியாரை’ப் பார்க்க வேண்டும் என்று நம் தலையெழுத்தோ…? அலி மாதிரி பெண் வேடம் போட்டு (கண்றாவி!) ‘ஒத்த ரூபா தந்தா ஒரு ரவுண்டுதான்’ என்று தரக்குறைவான டான்ஸை நடுத் தெருவில் ஆடுகிறார். இதெல்லாம் தேவைதானா…!!

Gitanjali – Vikatanreview

‘பவ்யா’ என்று ஒரு புதுமுகம் அறிமுகம் முரளியைச் சீண்டும் போதும், காதலிக்கும் போதும் இளமை துள்ளாட்டம் போடுகிறது: ‘முதல் படம் என்னும்போது மோசமில்லை!

கொடுமை!படத்தைத் தயாரித்து, இசையமைத்திருப்பவர் இளையராஜா! சொந்தப் படம் என்பதால், ஆரம்ப டைட்டில் சுலோகத்திலிருந்து காதல் டூயட்டுகள் வரை இளையராஜாவே குத்தகை எடுத்துக் கொண்டுவிட்டது கொடுமை!

Gitanjali – Vikatanreview

அரைவேக்காடு! சினிமாவுக்கு மதப் பிரச்னையைக் கதையாக எடுத்துக் கொண்டால், வேலியின் மீது விழுந்த வேஷ்டியைக் கிழியாமல் எடுக்கும் சாமர்த்தியம் வேண்டும். ஆனால், இந்தப் படத்தில் முழுக்க முழுக்க அரைவேக்காட்டுத்தனம்! முரளி வழக்கம் போலக் கையில் கிடாருடன் பாடுகிறார், சண்டை போடுகிறார், காதலிக்கிறார். இதே போல கிடாரும் கையுமாக இவர் இன்னும் இரண்டு படங்களில் வந்தால் நாலாவதோடு அஞ்சாவது நாயகனாகிக் கீழே போவாரே தவிர, மேலே வர சான்ஸ் இல்லை!

கொடுமை! ஹீரோ முரளியின் வாயசைப்புக்குப் பாடகர் இளையராஜாவின் குரல் கொஞ்சமும் பொருந்தாமல்… கர்ன கொடூரம்! இசையமைப்பாளர் இளையராஜா இதை எப்படித்தான் அனுமதித்தாரோ!’பாட்டுப் பாடு தாளம் போடு’ என்று இந்தப் படத்துக்கு முதலில் தலைப்பு வைத்திருந்தார்களாம்! பிறகு அதை மாற்றி கீதாஞ்சலி ஆக்கினார்களாம் ஒரு அருமையான இலக்கியத் தலைப்பு வீணடிக்கப்பட்டிருக்கிறது…!

– விகடன் விமரிசனக் குழு

(03.11.1985 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலில் இருந்து…)

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.