"தமிழகத்தில் நாளை ரம்ஜான் பண்டிகை" – அரசு தலைமை காஜி அறிவிப்பு

சென்னை: இஸ்லாமியர்கள் கடந்த ஏப்.3-ம் தேதி முதல் ரமலான் நோன்பு தொடங்கினர். இந்நிலையில், ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் குறித்து அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ‘‘ஷவ்வால் பிறை மே 1-ம் தேதி (நேற்று) தென்படவில்லை. எனவே, மே 3-ம் தேதி (நாளை) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது’’ என்று தெரிவித்துள்ளார். Source link

வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக கேரள அரசியல் தலைவர் பி.சி. ஜார்ஜ் கைது

திருவனந்தபுரம்: கேரளாவின் மூத்த அரசியல் தலைவர் பி.சி. ஜார்ஜ், வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக நேற்று கைது செய்யப்பட்டார். கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் அண்மையில் நடைபெற்ற அனந்தபுரி இந்து மகா சம்மேளன மாநாட்டில் ஜார்ஜ் பங்கேற்று பேசினார். அப்போது அவர், “முஸ்லிம்கள் நடத்தும் ஓட்டல்களில் குளிர்பானம், தேநீரில்கருத்தடை மாத்திரை கலக்கப்படுகிறது. இதனால் ஆண்கள், பெண்களுக்கு மலட்டுத் தன்மை ஏற்படும். இந்துக்களின் மக்கள் தொகையை கட்டுப்படுத்தி முஸ்லிம்களின் மக்கள் தொகையை அதிகரிக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது” என்று குற்றம் சாட்டினார். … Read more

உணவு திருவிழாவில் புகுந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்திய மர்மநபர்… ஒருவர் பலி – 5 பேர் காயம்

அமெரிக்காவின் மிஸ்ஸிஸிப்பி மாகாணத்தில் நடைபெற்ற உணவு திருவிழாவில் புகுந்த மர்மநபர் ஒருவன் சுற்றியிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டதில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 5 பேர் காயமடைந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். ஜாக்சன் நகரில் ஆண்டுதோறும் மட்பக் என்ற பெயரில் நடைபெறும் உணவு திருவிழாவில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், சமையல் போட்டிகள் மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இந்நிலையில், இந்த ஆண்டிற்கான திருவிழாவின் போது, புகுந்த புகுந்த மர்மநபர் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு, அங்கிருந்து தப்பியோடி விட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தவர்கள் … Read more

ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி?… ரஷ்யாவுக்கு எதிராக சர்வதேசக் கூட்டணியை ஏற்படுத்த முயற்சி

ரஷ்யாவுக்கு எதிராக சர்வதேச கூட்டணியை உருவாக்கும் முயற்சியாக அடுத்த மாதம் நடைபெற உள்ள ஜி7 உச்சி மாநாட்டிற்கு பிரதமர் மோடியை அழைக்க ஜெர்மனி பிரதமர் ஓலாஃப் ஷோல்ஸ் திட்டமிட்டுள்ளார். ஜூன் 26ந் தேதி பவேரியன் ஆல்ப்ஸில் தொடங்கும் மாநாட்டில் இந்தோனேசியா, தென்னாப்பிரிக்கா, செனகல் ஆகிய நாடுகளின் தலைவர்களும் பங்கேற்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் பங்கேற்க சிறப்பு அழைப்பாளராக மோடியை அழைப்பது எனவும், ரஷ்யாவுக்கு எதிரான கூட்டணியை உருவாக்க ஜெர்மனி பிரதமர் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. … Read more

வட மாநிலங்களில் வெயிலின் தாக்கம் குறைந்து இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

புதுடெல்லி: வட மாநிலங்களில் வெயிலின் தாக்கம் குறைந்து இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று முதல் வெப்பம் குறையும். ராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி, ஹரியானா மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறியுள்ளது. தென்மேற்கு பருவக் காற்று மே 15 ஆம் தேதி முதல் வீச வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

கொரோனாவுக்கு உலக அளவில் 62,61,391 பேர் பலி

ஜெனீவா:உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62.61லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,261,391 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 51,35,27,290 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 46,75,65,925 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 111,845 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழ்நாட்டில் மே 3-ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்: தலைமை காஜி

தமிழ்நாட்டில் மே 3-ஆம் தேதி, அதாவது நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தலைமை காஜி முப்தி முகமது சலாவுதீன் அயூப் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஷவ்வல் பிறை ஞாயிறன்று தென்படாததால் ரம்ஜான் பண்டிகை வரும் செவ்வாய் கிழமை கொண்டாடப்படும் என்று தெரிவித்துள்ளார். அரபு நாட்டின் பிறை பார்க்கும் குழு பிறையைப் பார்த்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட பின்னரே ரமலான் மாதத்தின் தொடக்கம் மற்றும் முடிவின் சரியான தேதி அறிவிக்கப்படுகிறது. அந்த … Read more

“அனுமான்போல இலங்கை நெருக்கடியை சுமக்க பிரதமர் மோடி தயார்”- அண்ணாமலை பேட்டி

பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்டெடுப்பதற்கு இந்தியாவும் போராடிக் கொண்டிருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மே தின நிகழ்ச்சி இலங்கை கொட்டகலை சி.எல்.எவ்.வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டைமான், தலைவர் செந்தில் தொண்டைமான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, `சஞ்சீவி மலையை அனுமான் சுமந்தது போன்று இலங்கை பொருளாதார நெருக்கடியை … Read more