மங்காத்தா பாணியில் அஜித் 62வது படம்: விக்னேஷ் சிவன் வெளியிட்ட தகவல்

தற்போது விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கி உள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது வினோத் இயக்கத்தில் தனது 61வது படத்தில் நடிக்கும் அஜித், அடுத்தபடியாக விக்னேஷ் சிவன் இயக்கும் 62வது படத்தில் நடிக்கப் போகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அஜித்தின் 62வது படம் குறித்து விக்னேஷ் சிவன் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். அதில், அஜித் நடித்த வாலி மற்றும் … Read more

அரசு மருத்துவக்கல்லூரியில் இப்போகிரெடிக் உறுதிமொழியை தவிர வேறு உறுதிமொழி எடுக்கப்பட்டால் நடவடிக்கை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அரசு மருத்துவ கல்லூரியில் வழக்கமாக எடுக்கப்படும் இப்போகிரெடிக் உறுதி மொழியை மட்டுமே எடுக்க வேண்டும் எனவும், வேறு உறுதி மொழி எடுக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்து அரசு மருத்துவ கல்லூரிக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுத்து கொள்ள வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி, அதை தன் கவனத்திற்கு கொண்டு வராமல் அந்த மருத்துவமனை டீன் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுத்து கொண்டதாக கூறினார்.  … Read more

நியாயவிலைக்கடைகளில் தரமான பொருட்கள் வழங்குவதை உறுதி செய்ய கண்காணிப்பு குழு – தமிழக அரசு

சென்னை: நியாயவிலைக் கடைகளில் தரமான பொருட்கள் வழங்குவதை உறுதி செய்யும் வகையில், மாவட்டம்தோறும் 4 அதிகாரிகள் கொண்ட கண்காணிப்புக் குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது. தமிழகத்தில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நியாயவிலைக் கடைகள் உள்ளன. இங்கு இலவசமாக வழங்கப்படும் அரிசியின் தரம்குறித்து அவ்வப்போது புகார் எழுந்து வந்தது. இதை தவிர்க்க,தரமற்ற அரிசியை கடைகளுக்கு அனுப்பக் கூடாது என்று பொறுப்புஅதிகாரிகளுக்கும், அவ்வாறுவந்தால் அதை மக்களுக்கு விநியோகம் செய்யக் கூடாது என்று கடைபணியாளர்களுக்கும் உணவுத் துறை உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் சில … Read more

4-வது அலை இன்னும் உருவாகவில்லை: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூடுதல் இயக்குநர் தகவல்

புனே: இந்தியாவில் கரோனா 4-வது அலை இன்னும் உருவாகவில்லை என்றும் சில பகுதிகளில் மட்டுமே பாதிப்பு அதிகரித்திருப்பதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) இயக்குநர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில் டெல்லி, கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்தியாவில் தினசரி கரோனா தொற்று ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக படிப்படியாக அதிகரித்து வருகிறது. … Read more

கொழும்பு கொள்ளுப்பிட்டி வீதி ஆர்ப்பாட்டக்காரர்களால் முற்றாக முடக்கம்

நாட்டில் இடம்பெற்று வரும் பொருளாதார சிக்கல் மற்றும் றம்புக்கணயில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து இன்று (01) மேற்குறித்த சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு – கொள்ளுப்பிட்டி பகுதியில் பிரதான வீதியை மறித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியல் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டதுடன் கொழும்பு – காலிமுகத்திடலில் இருந்து கொள்ளுப்பிட்டிக்கு மட்டும் வாகனங்கள் வரக்கூடியதாக உள்ளது.  ஆனால் கொள்ளுப்பிட்டியிலிருந்து காலிமுகத்திடல் நோக்கி செல்லும் … Read more

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகுவார் என தகவல்

இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகுவார் என தகவல் வெளியாகி உள்ளது. அதிபர் கோத்தபயவுடனான சந்திப்பிக்கு பின் பேசிய மகிந்த ராஜபக்சே, 20வது சட்டத் திருத்தத்தின் படி நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண அதிபருக்கு உரிமை உள்ளதாகவும், அப்படி அதிபர் எடுக்கும் முடிவுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்தார். கடந்த வாரம் பிரதமரை நீக்கி இடைக்கால அரசை அமைக்குமாறு அதிபரை சந்தித்து எதிர்கட்சிகள் தெரிவித்த நிலையில், வரும் நாட்களில் இலங்கை அரசியலில் … Read more

கோடை வெப்பம் எதிரொலி – மருத்துவ உபகரணங்கள் போதிய அளவில் கையிருப்பு வைக்க மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

நாட்டில் நாளுக்கு நாள் வெப்ப நிலை அதிகரித்து வரும் நிலையில், மாநில அரசுகள் முன்னெடுக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து, அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கடிதம் எழுதி உள்ளார்.  நாடு முழுவதும் கோடையின் வெப்பம் தகித்து வருகிறது. டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் 122 ஆண்டுகளில் காணாத அளவில் வெப்ப நிலை பதிவாகி உள்ளது. தமிழகத்தில் 4ஆம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெளியில் தொடங்க உள்ளதால் அதிகபட்ச வெப்பநிலை … Read more

வெளிநாட்டில் மரண தண்டனையை எதிர்நோக்கும் பிரித்தானியர்: உதவி கோரும் குடும்பம்

ஈராக்கில் கடத்தல் குற்றச்சாட்டில் மரண தண்டனையை எதிர்கொள்ளும் ஓய்வுபெற்ற பிரித்தானிய புவியியலாளருக்கு உதவ அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈராக் சிறையில் உள்ள 66 வயது Jim Fitton என்பவரை மீட்கும் பொருட்டு, மூன்று நாட்களில் சுமார் 100,000 மக்கள் மனுவில் கையெழுத்திட்டுள்ளனர். Jim Fitton-ன் மகள் லைலா குறிப்பிடுகையில், தமது தந்தையின் மரண தண்டனை நிறைவேற்றப்படும் நாளும் தமது திருமணமும் ஒரே நாளில் நிகழவிருப்பது தாங்க முடியாது ஒன்று என குறிப்பிட்டுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக … Read more

சென்னை கிழக்கு கடற்கரை சாலை இனி ‘முத்தமிழறிஞர் கலைஞர் சாலை’ என்று அழைக்கப்படும்: முதல்வர் அறிவிப்பு

சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலை இனி ‘முத்தமிழறிஞர் கலைஞர் சாலை’ என்று அழைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை கிண்டியில் நெடுஞ்சாலைத் துறையின் பவளவிழா நினைவுத் தூணை திறந்து வைத்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை கிழக்கு கடற்கரை சாலைக்கு கலைஞர் பெயர் சூட்டப்படும் என்றும், சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லக்கூடிய கிழக்கு கடற்கரை சாலை இனி முத்தமிழறிஞர் கலைஞர் சாலை என்று அழைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் நடந்த துப்பாக்கிச் சூட்டிற்கு 8 பேர் உயிரிழப்பு, 42 பேர் காயம்

சிகாகோ  அமெரிக்காவில் துப்பாக்கிசூடு வன்முறை பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக வார இறுதி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் ஆங்காங்கே துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் வழக்கமான நிகழ்வுகளாக மாறி உள்ளன. இந்நிலையில் சிகாகோ நகரின் தெற்கு கில்பாட்ரிக் பகுதியில் வீடு ஒன்றில் 69 வயது முதியவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.  இதேபோல்  பிரைட்டன் பார்க், சவுத் இந்தியானா, நார்த் கெட்ஸி அவென்யூ, ஹம்போல்ட் பார்க் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில்  மொத்தம் … Read more