02.05.2022 திங்கட்கிழமை – Today Rasi Palan | Daily Rasi Palan | Indraya Rasi Palan| இன்றைய ராசிபலன்

#indrayarasipalan #rasipalantoday #dailyrasipalan மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். இந்த வார ராசிபலன் : https://youtu.be/Jxoon8CISOw #இன்றையராசிபலன் #DailyHoroscope​ #Rasipalan​ #Horoscope​ #Raasi​ #Raasipalan Daily Rasi Palan in Tamil, Indraya Rasi Palan in Tamil #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam. Source link

துணை வட்டார வளர்ச்சி அலுவலரை தாக்கிவிட்டு தலைமறைவான திமுக கவுன்சிலருக்கு போலீசார் வலைவீச்சு

செங்கல்பட்டில் 100 நாள் வேலை திட்டத்திற்கு பொறுப்பாளரை நியமிப்பது தொடர்பான பிரச்சனையில், துணை வட்டார வளர்ச்சி அலுவலரை தாக்கியதாக கூறப்படும் திமுக கவுன்சிலரை போலீசார் தேடி வருகின்றனர். கொடூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலரான செல்வகுமார், தாம் சொல்பவர்களைத் தான் 100 நாள் வேலை திட்டத்திற்கு பொறுப்பாளராக நியமிக்க வேண்டுமென துணை வட்டார வளர்ச்சி அலுவலரான பாலசுப்பிரமணியத்திடம் கூறியதாக சொல்லப்படுகிறது. அதற்கு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மறுப்பு தெரிவித்த நிலையில், இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய … Read more

ராசிபுரம் அருகே கிராமத்தில் இறந்த தாய்க்கு கோயில் கட்டி வழிபடும் மகன்கள்

ராசிபுரம் அருகே இறந்த தாயின் நினைவாக கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தியதுடன் நாள்தோறும் அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தி வரும் மகன்களின் செயல் வரவேற்பை பெற்றுள்ளது. ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டை நாவல்பட்டி காட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி (82). இவரது மனைவி அலமேலு (72). இவர்களுக்கு முருகேசன், பச்சமுத்து என இரு மகன்கள், மாரியம்மா, ராஜாமணி, ஜெயக்கொடி என 3 மகள்கள் உள்ளனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் அலமேலு உயிரிழந்தார். இதில் மனமுடைந்த முருகேசன், பச்சமுத்து … Read more

ருத்ரதாண்டவம் ஆடிய ருதுராஜ், கான்வே… சென்னை அணி அபார வெற்றி

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 46-வது லீக் ஆட்டத்தில் சென்னை அணி 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. இதனையடுத்து சென்னை அணி முதலில் துடுப்பட்டத்திற்கு அழைக்கப்பட்டது. தொடக்க வீரர்களாக டேவான் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர். தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக விளையாடினர். சிறப்பாக விளையாடிய இருவரும் ஐதராபாத் பந்துவீட்ச்சை நாலாபுறமும் பவுண்டரி சிக்சருக்கு விரட்டினர். அணியின் ஸ்கோர் 182 என இருந்தபோது இந்த … Read more

உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துடன் நடிகை கங்கனா ரனாவத் சந்திப்பு

லக்னோ: தேசிய அளவில் அதிரடி அரசியல் கருத்துகளை தெரிவித்து வரும் நடிகை கங்கனா ரனாவத், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை லக்னோவில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று சந்தித்தார்.  இது தொடர்பான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது: அண்மையில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் மகராஜ் யோகி ஆதித்யநாத் மகத்தான வெற்றி பெற்ற பிறகு அவரைச் சந்திக்கும் பெரும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.  இது ஒரு அற்புதமான மாலை. … Read more

ஐரோப்பிய நாடுகள் பயணமாக ஜெர்மனி புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி

புதுடெல்லி: நடப்பு 2022ம் ஆண்டில் பிரதமர் மோடி முதல் வெளிநாட்டு பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ளார். இதற்காக நேற்றிரவு அவர் தலைநகர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் ஜெர்மனி நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். ஜெர்மனி பயணத்தை தொடர்ந்து டென்மார்க் மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கும் அவர் செல்கிறார். மூன்று நாடுகளிலும் 65 மணி நேரம் செலவிடும் பிரதமர் மோடி, அந்நாடுகளின் தலைவர்களுடனான சந்திப்பு, கலந்துரையாடல், பேச்சுவார்த்தை என 25 நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். மேலும் சர்வதேச தொழில்துறை தலைவர்கள் … Read more

ஏப்ரல் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.67 லட்சம் கோடி: கடந்தாண்டை விட 20% அதிகம்

புதுடெல்லி: முன்பு எப்போதும் இல்லாத வகையில் ஏப்ரல் மாதத்துக்கான ஜிஎஸ்டி.யாக  ரூ.1.67,540 கோடி வசூலாகி சாதனை படைத்துள்ளது. நாடு முழுவதும்  கொரோனா பரவல் குறைந்து, இயல்பு வாழ்க்கை திரும்பி உள்ளது. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு  இருப்பதால், தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அனைத்தும் 2020க்கு முந்தைய நிலையை போல் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றன. ஏற்றுமதி, இறக்குமதி, சந்தைப்படுத்துதல், வர்த்தகம் போன்றவை வழக்கத்தை விட சுறுசுறுப்பாக நடக்கின்றன. இதன் காரணமாக, வருமான வரி, ஜிஎஸ்டி ஆகியவற்றின் வசூலும் கணிசமாக உயர்ந்து கொண்டே … Read more

அமித் ஷா இன்று வருகை| Dinamalar

பெங்களூரு : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று பெங்களூரு வருவதால், பா.ஜ., வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இரண்டு நாள் அரசு முறை பயணமாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று பெங்களூரு வருகிறார். கண்டீரவா விளையாட்டு மைதானத்தில் நாளை நடக்கும் இரண்டாவது சீசன் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளின் நிறைவு விழாவில் பங்கேற்கிறார். முன்னதாக, அவருக்கு முதல்வர் பசவராஜ் பொம்மை மதிய விருந்து ஏற்பாடு செய்துள்ளார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி, அமைச்சரவை விரிவாக்கத்துக்கு ஒப்புதல் … Read more

அதர்வாவின் 'நிறங்கள் மூன்று' படப்பிடிப்பு நிறைவு

நடிகர் அதர்வா நடிப்பில் குருதி ஆட்டம், அட்ரஸ், ட்ரிக்கர், ஒத்தைக்கு ஒத்த ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராக இருக்கின்றன. இந்த நிலையில் துருவங்கள் பதினாறு, மாபியா, மாறன் படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கத்தில் 'நிறங்கள் மூன்று' என்னும் படத்தில் நடித்து வந்தார்.இந்த படத்தில் அதர்வாவுடன் சரத்குமார், ரஹ்மான் ஆகியோரும் நடித்துள்ளனர். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.