Month: May 2022
லீக்கான அவதார்-2 டிரைலர்: படக்குழு ‛ஷாக்'
உலகமே எதிர்பார்த்து காண துடித்துக் கொண்டிருக்கும் ஒரு படம் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் அவதார் படத்தின் இரண்டாம் பாகம். இந்த படத்திற்கு 'அவதார் : தி வே ஆப் வாட்டர்' என பெயரிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். ஜேம்ஸ் கேமரூன் இயக்கி, கேமரூன் மற்றும் ஜான் லாண்டாவ் தயாரித்துள்ள இப்படத்தில் ஜோ சல்டானா, சாம் வொர்திங்டன், சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், கிளிப் கர்டிஸ், ஜோயல் டேவிட் மூர், சிசிஹெச் பவுண்டர், எடி பால்கோ, ஜெமைன் கிளெமென்ட், ஜியோவானி ரிபிசி … Read more
உக்ரைன் நாட்டு அதிபருடன் அமெரிக்க பார்லி., சபாநாயகர் பேச்சு| Dinamalar
ஜபோரிஜியா-உக்ரைன் – ரஷ்யா இடையிலான போருக்கு மத்தியில், உக்ரைன் சென்ற அமெரிக்க பார்லிமென்ட் சபாநாயகர் நான்சி பெலோசி, அந்நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்துப் பேசினார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்குள் நுழைந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். தற்போது, நாட்டின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில், ரஷ்ய படையினர் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றனர்.துறைமுக நகரமான மரியுபோலில் ஸ்டீல் ஆலை அமைந்துள்ள பகுதி மட்டும் உக்ரைன் ராணுவம் வசம் உள்ளது. அங்கு, … Read more
உயர்நீதிமன்றத்தில் தமிழ்: சட்டமன்றத்தில் புதிய தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் – Dr. அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.!
பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் இன்று விடுத்துள்ள அறிக்கையில், “இந்தியாவின் நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் உள்ளூர் மொழிகளில் நடத்தப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். அதற்கான நேரம் வந்து விட்டதாக உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் ரமணாவும் தெரிவித்திருக்கிறார். இருவரது கருத்துகளும் வரவேற்கத்தக்கவை. தில்லியில் நடைபெற்ற மாநில முதலமைச்சர்கள் மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர்களின் கூட்டு மாநாட்டில் பேசும் போது இந்தியப் பிரதமரும், இந்திய தலைமை நீதிபதியும் இதை கூறியுள்ளனர். நீதிமன்றங்களில் தாய்மொழியை பயன்படுத்த … Read more
CSK v SRH: தோனியின் கேப்டன்ஸி… மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பிய சென்னை!
நிழல் கேப்டனில் இருந்து மீண்டும் நிஜ கேப்டனாக மாறியிருக்கிறார் தோனி, விளையாடிய எட்டு போட்டிகளில் ஆறில் தோற்று இருப்பதால், ஜடேஜாவிடம் இருந்து மீண்டும் கேப்டன் பதவி தோனிக்குச் சென்றிருக்கிறது. அணியின் நலனைக் கருத்தில்கொண்டு என்று சொல்லப்படுகிறது. சர்வதேச போட்டிகளில் இருந்து தோனி கேப்டன் பதவியில் விலகியபோது கோலி கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால், அர்ஜுனருக்கு கிருஷ்ணர் போல, ஃபீல்டிங் செட் செய்வதில் பல விஷயங்களில் தோனிதான் ஆலோசனை, முடிவு எல்லாம் எடுத்துக்கொண்டிருப்பார். வெற்றி பெற்றால் தோனிக்குப் புகழுரையும், அது … Read more
நடிகர் விவேக் வாழ்ந்த வீடு அமைந்த சாலையின் பெயரை ‘சின்னக்கலைவாணர் விவேக் சாலை’ என மாற்றம்..
மறைந்த நடிகர் விவேக்கின் நினைவாக அவர் வசித்து வந்த சென்னை பத்மாவதி நகர் பிரதான சாலையின் பெயரை ‘சின்னக்கலைவாணர் விவேக் சாலை’ என பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. விவேக் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள சாலைக்கு அவரின் பெயரை சூட்ட வேண்டும் என அவரது குடும்பத்தினர் கடந்த மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மனு அளித்தனர். மேலும், திரையுலகினரும் அதே கோரிக்கையை முன்வைத்த நிலையில், விருகம்பாக்கம் பத்மாவதி நகர் பிரதான சாலைக்கு விவேக்கின் … Read more
ரம்ஜான் | அன்னூர் வாரச் சந்தையில் ரூ.20,000 வரை ஆடுகள் விற்பனை
ரம்ஜான் பண்டிகை நெருங்கும் நிலையில், அன்னூர் ஆட்டுச் சந்தையில் நேற்று ரூ.8 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை அன்னூரில் ஆட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம். நேற்றும் வழக்கம்போல கூடிய சந்தையில் அதிகாலை முதலே ஆடுகள் விற்பனை களைகட்டியது. ரம்ஜான் பண்டிகை நெருங்கும் நிலையில், இறைச்சி வியாபாரிகள் போட்டிபோட்டுக் கொண்டு, ஆடுகளை வாங்கிச் சென்றனர். கோவை மாவட்டம் மட்டுமின்றி, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான … Read more
ராக்கிங் கொடுமையால் தற்கொலை செய்த மாணவி குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்- அன்புமணி வலியுறுத்தல்
சென்னை: பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: செங்கல்பட்டு அரசு சட்டக்கல்லூரியில் பயின்று வந்த கவிப்பிரியா என்ற மாணவி ராக்கிங் கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். மாணவியின் தற்கொலைக்கு காரணமானோர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறையினர், தற்கொலை செய்து கொண்ட மாணவியின் குடும்பத்தினரை மிரட்டி, உண்மைகளை மூடி மறைக்க முயல்வது கண்டிக்கத்தக்கதாகும். இதை தீவிரமாக எடுத்துக் கொண்டு முறையான விசாரணை நடத்தி, கவிப்பிரியாவின் … Read more
உக்ரைன் – ரஷ்ய போருக்கு மத்தியில் ஐரோப்பிய நாடுகளுக்கு மோடி இன்று பயணம்: 8 உலக தலைவர்களுடன் சந்திப்பு
புதுடெல்லி: உக்ரைன் – ரஷ்யா இடையே போர் நடக்கும் சூழலில், பிரதமர் மோடி இன்று முதல் 3 நாட்களுக்கு ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் செல்கிறார். ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க் ஆகிய மூன்று நாடுகளில் மேற்கொள்ளும் பயணத்தின்போது, 7 நாடுகளை சேர்ந்த 8 தலைவர்களை அவர் சந்தித்து பேசுகிறார். நேட்டோ அமைப்பில் சேர முயன்ற உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து, 3வது மாதமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரின் காரணமாக உலகளவில் மிகப்பெரிய அளவில் பொருளாதார பாதிப்புகள் … Read more
அமலாக்க இயக்குனரகத்திற்கு சீல் வைப்பு| Dinamalar
புதுடில்லி,-டில்லியின் தெற்கு பகுதியில் உள்ள லோக்நாயக் பவனில் இரண்டு மாடிகளில் அமலாக்கத்துறை இயக்குனர் அலுவலகம் செயல்பட்டு வருகிறருது. விமான கொள்முதல் மோசடி வழக்கை விசாரிக்கும் சிறப்பு இயக்குனர் உட்பட, அமலாக்கத்துறை ஊழியர்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது சமீபத்தில் தெரியவந்தது. இவர்களில், 10 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். இதையடுத்து அமலாக்கத்துறை இயக்குனர் அலுவலகத்தில் கிருமிநாசினி தெளித்து, சுத்தப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நேற்று முன்தினம் முதல், 48 மணி நேரத்திற்கு அமலாக்கத்துறை இயக்குனர் அலுவலகம் ‘சீல்’ வைக்கப்பட்டது. புதுடில்லி,-டில்லியின் … Read more