மழைக்கால நிவாரண நிதிக்கான அரசாணை வெளியிட வேண்டும்; சிவப்பு மையில் கை பதித்த தொழிலாளர்கள்!

தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 25,000 ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தித் தொழில் நடந்து வருகிறது. இந்தத் தொழிலில் சுமார் 20,000 பேர் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாத இறுதியில் தொடங்கி அக்டோபர் மாதத்தில் பாதியில் வரையிலும் உப்பு உற்பத்தி நடக்கிறது. ஆண்டுக்கு 25 லட்சம் முதல் 30 லட்சம் டன் வரையிலும் உப்பு உற்பத்தி நடக்கிறது. தமிழகத்திலேயே உப்பு உற்பத்தி அதிகம் நடைபெறும் மாவட்டம் இது. 6 மாதங்கள் மட்டுமே நடைபெறும் இந்தத் தொழில், … Read more

துணை வட்டார வளர்ச்சி அலுவலரை காலணியால் தாக்கிய புகாரில் ஊராட்சி துணைத்தலைவர் கைது

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலரை காலணியால் தாக்கிய புகாரில் ஊராட்சி துணைத்தலைவர் கைது செய்யப்பட்டார். கண்டமங்கலம் என்ற கிராமத்தில் காட்டுமன்னார்கோவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஊராட்சி வரவு செலவு கணக்கை படிக்கும்பொழுது, திடீரென எழுந்த ஊராட்சி துணைத்தலைவர் சரண்யா, துணை வட்டார வளர்ச்சி அலுவலரை காலணியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, தன்னை பணி … Read more

விலை குறைவால் பயிரிட்ட வெங்காயத்தை இலவசமாக எடுத்துச்செல்லுங்கள்: வேதனை வீடியோ வெளியிட்ட விவசாயி  

பழநி: வெங்காயத்திற்கு உரிய விலை கிடைக்காததால், பயிரிட்ட வெங்காயத்தை இலவசமாக எடுத்து செல்லலாம் என பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்து வலைதளங்களில் வீடியோ வெளியிட்டுள்ளார் பழநி அருகே பனம்பட்டி கிராமத்தை விவசாயி சிவராஜ். இழப்பிலும் வெங்காயம் வீணாகாமல் தடுக்க எனக்கு வேறு வழிதெரியவில்லை என்கிறார் விவசாயி. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பனம்பட்டியை சேர்ந்த விவசாயி சிவராஜ். இவர் தனக்கு சொந்தமான 14 ஏக்கர் விளைநிலத்தில் வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள்‌ பயிரிட்டுள்ளார். இரண்டு ஏக்கரில் … Read more

அசாமில் சோதனை அடிப்படையில் மெத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை..

அசாம் மாநிலத்தில் சோதனை அடிப்படையில் மெத்தனால் கலந்த பெட்ரோல், மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அம்மாநிலத்தின் தின்சுக்கியா மாவட்டத்தில் எம்15 பெட்ரோல் என்ற பெயரில் 15% மெத்தனால் கலந்த பெட்ரோல் இந்தியன் ஆயில் பெட்ரோல் நிரப்பு நிலையங்களில் விற்கப்படுகிறது. மெத்தனாலை கலந்து பயன்படுத்துவது மூலம் பெட்ரோல் விலை உயர்வை ஓரளவு கட்டுக்குள் வைக்க முடியும் என்றும், கச்சா எண்ணெய் இறக்குமதியையும் கணிசமாக குறைக்க முடியும் என்றும் பெட்ரோலியத் துறை இணையமைச்சர் ராமேஸ்வர் தெலி கூறியுள்ளார். ஏற்கனவே, சீனா, ஜப்பான், … Read more

ருத்ரதாண்டவம் ஆடிய ருதுராஜ், கான்வே… சென்னை அணி 202 ரன்கள் குவிப்பு

புனே: ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியின் துவக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட், கான்வே ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவித்தது. இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் ஐதராபாத் பந்துவீச்சாளர்கள் திணறினர்.  பந்துகளை பவுண்டரி, சிக்சர்களாக பறக்க விட்ட இந்த ஜோடி, அணியின் ஸ்கோர் 182 என இருந்தபோது … Read more

இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள்- முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய மந்திரி ஜெய்சங்கர் கடிதம்

புதுடெல்லி: இலங்கைத் தமிழர்களுக்குத் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து உணவு தானியங்கள், காய்கறிகள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அனுப்புவதற்கு உரிய வசதியை செய்து தருமாறும், யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வதற்குத் தேவையான சட்டப்பூர்வ உதவிகளை மேற்கொள்ளுமாறும் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இலங்கையில் தற்போது நிலவும் மோசமான பொருளாதார நிலைமையைக் கருத்தில் கொண்டு விரைவில் பொருட்களை அனுப்புவதற்கான வசதியை செய்து தருமாறு முதலமைச்சர் கேட்டுக் … Read more

3வது, 4வது அணிகளால் முடியாது…! பாஜகவை தோற்கடிக்க 2வது அணிதான் ‘பெஸ்ட்’; பிரசாந்த் கிஷோர் பரபரப்பு பேட்டி

புதுடெல்லி: பாஜகவை தோற்கடிக்க 3வது, 4வது அணிகளால் முடியாது; இரண்டாவது அணியால் தான் முடியும் என்று பிரசாந்த் கிஷோர் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் கட்சியில் இணைவதாக தகவல்கள் வெளியாகின. அவரும், காங்கிரஸ் கட்சி வலுபெற தேவையான ஆலோசனைகளை வழங்கினார். ஆனால், திடீர் திருப்பமாக தான் காங்கிரசில் சேரப் போவதில்லை என்று அறிவித்தார். இந்நிலையில் தனியார் டிவி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், ‘வரவிருக்கும் 2024ம் ஆண்டு நடக்கும் … Read more

நிலக்கரி பற்றாக்குறை: மேட்டூர் அனல் மின் நிலையத்தில் உற்பத்தி பாதிப்பு

மேட்டூர் 840 மெகாவாட் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக 3 அலகுகளில் 630 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூரில் தலா 210 மெகாவாட் வீதம் நான்கு அலகுகள் கொண்ட 840 மெகாவாட் அனல் மின் நிலையமும், 600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட மற்றொரு அனல் மின் நிலையமும் இயங்கி வருகிறது. இதன் மூலமாக நாளொன்றுக்கு 1,440 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய வேண்டும். இதற்காக மேட்டூர் அனல் … Read more

கேரளா: முஸ்லீம்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்காக கைதான பி.சி.ஜார்ஜ் பிணையில் விடுதலை

மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் கேரளாவின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான பி.சி.ஜார்ஜ் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கேரளாவில் இஸ்லாமியர்கள் நடத்தும் உணவகங்களில் கருத்தடை மாத்திரை கலக்கப்படுவதாகவும் எனவே அங்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இந்து மதம் சார்ந்த நிகழ்ச்சியில் ஜார்ஜ் பேசியதாக தகவல் வெளியானது. கருத்தடை மாத்திரைகளை தருவது மூலம் பிற மதத்தவர் எண்ணிக்கையை குறைக்க முயற்சி நடப்பதாக அவர் பேசியதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இத்தகவல்கள் கேரளாவில் … Read more

கொரோனா இழப்பை ஈடு செய்ய 12 ஆண்டு ஆகும்: ரிசர்வ் வங்கி| Dinamalar

மும்பை : ‘கொரோனாவால் இந்திய பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடு செய்ய 12 ஆண்டுகள் ஆகும்’ என, ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் நாட்டிற்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து, ரிசர்வ் வங்கியின் பொருளாதாரம் மற்றும் கொள்கை ஆய்வுக் குழு உறுப்பினர்களின் கருத்துகள் அடங்கிய ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:இந்திய பொருளாதாரத்தில் கடுமையான தாக்கத்தை கொரோனா தொற்று ஏற்படுத்திஉள்ளது. கொரோனாவால் 2020 – 21 மற்றும் 2021 – 22ம் நிதியாண்டுகளில் முறையே, 19.10 லட்சம் கோடி … Read more