திருச்சூரில் வணிக வளாகத்தில் பொதுமக்களை துரத்தி சிலரை முட்டித்தள்ளிய எருமையின் சிசிடிவி காட்சிகள்.!

கேரள மாநிலம் திருச்சூரில் வணிக வளாகம் ஒன்றுக்குள் முரட்டுத்தனமாக நுழைந்த எருமை மாடு ஒன்று அங்கிருந்தவர்களை ஆக்ரோஷமாக துரத்திச்சென்று 3 பேரை முட்டித்தள்ளியதுடன், வாகனங்களையும் சேதப்படுத்திய காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருந்தன. சாலையில் மிரண்டு ஓடிக்கொண்டிருந்த எருமை மாடு ஒன்று வழியில் சாலையோரமிருந்த வணிக வளாகத்திற்குள் புகுந்தது. ஆரம்பத்திலேயே ஒருவரை முட்டித்தள்ளி உள்ளே நுழைந்த அந்த எருமை பின்னர் வணிக வளாகத்தின் பல்வேறு பகுதிகளில் நபர்களை துரத்திச்சென்றது. 50-க்கும் மேற்பட்ட வாகனங்களை சேதப்படுத்தியதுடன் 3 … Read more

இந்த உண்மையை ஜடேஜா புரிந்து கொண்டதால் தான் கேப்டன்சி பொறுப்பை ராஜினாமா செய்தார்: போட்டுடைத்த பிரபல வீரர்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் பதவியை ஜடேஜா ராஜினாமா செய்தது குறித்து பிரபல வீரர் பேசியுள்ளார். 2008 ஐபிஎல் முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனாக இருந்தவர் தோனி. ஆனால் இந்தாண்டு ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு 2 நாட்களுக்கு முன் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி, ரவீந்திர ஜடேஜாவிடம் கேப்டன் பொறுப்பை தோனி ஒப்படைத்தார். ஆனால் அது சென்னை அணிக்கு சாதகமாக அமையவில்லை. இதுவரை ஆடிய 8 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி … Read more

கஞ்சா ஒழிப்பு நல்ல தொடக்கம், ஆனால் போதுமானதல்ல… டாக்டர் ராமதாஸ் அறிக்கை

சென்னை: பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதமாக, காவல்துறையினர் நடத்திய இரண்டாம் கட்ட கஞ்சா ஒழிப்பு சோதனையில் 2,423 கஞ்சா வணிகர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 3,562 கிலோ கஞ்சாவும், 6,319 குட்கா வணிகர்கள் கைது செய்யப்பட்டு 44.90 டன் குட்காவும் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் காவல்துறை களமிறங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், இந்த நடவடிக்கை போதுமானது அல்ல. கல்விக்கும், … Read more

ஆந்திராவில் வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ 3.30 லட்சம் கொள்ளை

திருப்பதி: ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டம், காசிம்கோட்டா நரசிங்க பில்லியில் ஆந்திர கிராம வங்கி இயங்கி வருகிறது. நேற்று மதியம் 2 மணி அளவில் ஊழியர்கள் அனைவரும் உணவு அருந்திக் கொண்டு இருந்தனர். அப்போது டிப்டாப் உடையணிந்த வாலிபர் ஒருவர் வங்கிக்குள் நுழைய முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலாளி உணவு இடைவேளை நேரம் என்பதால் வாலிபரை உள்ளே செல்ல அனுமதிக்க முடியாது என தெரிவித்தார். அதனை பொருட்படுத்தாத வாலிபர் காவலாளி தள்ளி விட்டு நேராக … Read more

அமைச்சர் மா சுப்பிரமணியனுக்கு எம்.பி.ரவிக்குமார் பாராட்டு

மதுரை: மதுரை அரசு மருத்துவக் கல்லூரி டினை காத்திருப்போர்  பட்டியலுக்கு மாற்றி நடவடிக்கை எடுத்ததற்காக அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி பாராட்டு தெரிவித்துள்ளது: சனாதனத்துக்குத் துணைபோகும் துணை வேந்தர்களை உயர்கல்வி அமைச்சர் பொன்முடி எச்சரிக்கை வேண்டும் என்று எம்பி ரவிக்குமார் கூறியுள்ளார்.

உக்கிரமாகிறது கோடை வெயில் – தமிழகத்தில் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும்

தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தெற்கு கடலோர தமிழக மாவட்டங்கள் மற்றும் உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மே 3 முதல் 5-ம் தேதி வரை தமிழ்நாடு, … Read more

ரம்ஜான் பண்டிகை அன்று ஊரடங்கு – எந்த மாநிலத்தில் தெரியுமா?

மத்திய பிரதேசத்தில் ரம்ஜான் பண்டிகை தினத்தன்று ஊரடங்கை பிறப்பித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் கார்கோனில் கடந்த மாதம் நடைபெற்ற ராமநவமி நிகழ்ச்சியில் இருதரப்பு மக்களிடையே பயங்கர வன்முறை வெடித்தது. இந்தக் கலவரத்தில் ஒருவர் உயிரிழந்தார். 24 பேர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தை அடுத்து மத்திய பிரதேசத்தில் அடுத்தடுத்து நடைபெறும் பண்டிகைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை மாநில அரசு விதித்து வருகிறது. இந்நிலையில், ரம்ஜான் பண்டிகை நாளை அல்லது நாளை … Read more

கமலுக்கு ஜோடியாக ஷான்வி ஸ்ரீவாத்சவா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய்சேதுபதி, பஹத் பாசில் என மிகப்பெரிய நட்சத்திர கூட்டணியுடன் உருவாகியுள்ள படம் விக்ரம். இந்தப்படம் வரும் ஜூன் 3ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் நடிக்கும் கதாநாயகிகள் குறித்து இதுவரை வெளியான தகவல்கள் எல்லாமே விஜய்சேதுபதிக்கு மூன்று பேர் ஜோடி என்றும் அவர்கள் சின்னத்திரை புகழ் ஷிவானி, மைனா நந்தினி மற்றும் விஜே மகேஸ்வரி ஆகியோர் என்றும் சொல்லப்பட்டது. அதேசமயம் கமலுக்கும் அல்லது பஹத் பாசிலுக்கும் ஜோடி இருக்கிறதா என்றோ … Read more

ஐரோப்பிய நாடுகளில் பிரதமர் மோடி நாளை முதல் 3 நாட்கள் அரசு முறைப்பயணம்

புதுடெல்லி, பிரதமர் மோடி ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு மே 2, 3, 4 ஆகிய தேதிகளில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டில் பிரதமர் மோடி மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். முதலில் ஜெர்மனி செல்லும் பிரதமர், பிறகு அங்கிருந்து டென்மார்க் செல்கிறார். டென்மார்க் பயணத்தை முடித்துக் கொண்டு இறுதியாக அவர் பாரீஸ் வருகிறார். 2-ம் தேதி இரவு ஜெர்மனியிலும் 3-ம் தேதி இரவு … Read more