நிலக்கரி தட்டுப்பாட்டால் மேட்டூர் அனல்மின் நிலையத்தில் 3 அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தம்

நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக, சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின் நிலையத்தின் 3 அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மேட்டூர் அனல்மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள் செயல்படுகின்றன. முதல் பிரிவில் 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 4 அலகுகளும், இரண்டாம் பிரிவில் 600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட ஒரு அலகும் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் தினசரி 1,440 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக முதல் … Read more

சரகர் உறுதிமொழியை ஏற்று மருத்துவ மாணவர்களின் மனதில் பிற்போக்குத் தனத்தை திணிப்பதா? – அன்புமணி ராமதாஸ் கேள்வி

இந்திய ஆயுர்வேத அறிஞர் சரகரின் உறுதிமொழியை ஏற்று மருத்துவ மாணவர்களின் மனதில் பிற்போக்குத் தனத்தை திணிப்பதா என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “மதுரை மருத்துவக் கல்லூரியின் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்பு தொடக்க நிகழ்ச்சியின் போது ஹிப்போகிரட்டிக் உறுதிமொழிக்கு மாற்றாக மகரிஷி சரகர் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டிருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. அமைச்சர்கள் முன்னிலையில் நடந்த இந்நிகழ்வு தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். கிரேக்க மருத்துவ அறிஞர் ஹிப்போகிரட்டீஸ் நோயாளிகள் அனைவருக்கும் நம்பிக்கையளித்து, மருத்துவம் … Read more

3 நாள் வெளிநாட்டு பயணத்தில் 25 நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தனது 3 நாள் வெளிநாட்டுப் பயணத்தில் 8 உலகத் தலைவர்களை சந்திப்பது உட்பட 25 நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். பிரதமர் மோடி ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு மே 2, 3, 4 ஆகிய தேதிகளில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டில் பிரதமர் மோடி மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். மேலும் ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகளை ஒன்றிணைத்துள்ள … Read more

வீட்டுக்கு பிரதமர் மோடி பெயர்: பாஜக தொண்டர் வெறித்தனம்!

திரைப்பட நடிகர், நடிகைகள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டவர்கள் மீதுள்ள ஈர்ப்பால் அவர்களுக்கு கோயில் கட்டுவதும், தங்களுக்கு சொந்தமான இடங்களுக்கு அவர்களது பெயர்களை வைப்பது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. இந்த நிலையில், பாஜக தொண்டர் ஒருவர் தான் கட்டிய புது வீட்டுக்கு பிரதமர் மோடியின் பெயரை சூட்டி அந்த வரிசையில் இணைந்துள்ளார். கர்நாடக மாநிலம் தாவங்கரே மாவட்டத்தை சேர்ந்தவர் கவுடர் ஹலேஷ் (56). பாஜக தொண்டரான இவர், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் … Read more

7 நாட்களில் 2 குழந்தைகளுக்கு போலியோ தொற்று – பீதியில் பெற்றோர்கள்!

பாகிஸ்தானில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும், இரண்டு குழந்தைகளுக்கு போலியோ தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. பச்சிளம் குழந்தைகளை அதிகம் தாக்கும் மிகவும் கொடூரமான தொற்று நோயான போலியோ (இளம் பிள்ளைவாதம்) நோய், உலகின் பெரும்பாலான நாடுகளில் முற்றிலுமாக ஒழிக்கப்பட்ட போதிலும், பாகிஸ்தான் , ஆப்கானிஸ்தான் போன்ற ஒருசில நாடுகளில் இன்னமும் போலியோ பாதிப்பு உள்ளது. அண்டை நாடான பாகிஸ்தானில் 7 நாட்களில் 2 குழந்தைகளுக்கு போலியோ தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கைபர் பக்துங்வா மாகாணத்தின் வடக்கு … Read more

ஐக்கிய மக்கள் சக்தியின் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி ஆரம்பம்

ஐக்கிய மக்கள் சக்கியினரின் ஆர்ப்பாட்ட பேரணியானது தற்பொழுது கொழும்பு – கொலன்னாவை பகுதியிலிருந்து ஆரம்பமாகியுள்ளது. கொலன்னாவை பகுதியில் ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டம் இன்று மாலை கொழும்பு – டெம்பிள் மைதானத்தில் நிறைவடையவுள்ளது. இவ்வார்ப்பாட்டத்தில் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியினரின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளார்கள். கொழும்பு – கொலன்னாவையில் ஆரம்பமான இந்த பேரணி தெமட்டகொடை, பேஸ்லைன், மற்றும் பொரல்லை வழியாகக் கொழும்பு – … Read more

எரிபொருள், எரிவாயு இறக்குமதியில் ஐரோப்பிய நாடுகளுக்கு நிலவும் சிக்கல்

எரிபொருள் மற்றும் எரிவாயுக்கு ரஷ்யாவை நம்பியுள்ள ஐரோப்பிய நாடுகள், ரூபிள் பணப் பரிமாற்றத்தால் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றன. ரூபிளை கொண்டு எரிவாயு வாங்க ஒத்துக் கொள்ளாததால் போலந்து மற்றும் பல்கேரியாவுக்கு எரிவாயு விநியோகத்தை நிறுத்திய ரஷ்யாவின் நடவடிக்கையை அச்சுறுத்தலாக கருதுவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. 2019ல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் மொத்த எரிவாயு இறக்குமதியில் 41 சதவீதத்தை கொண்டிருந்த ரஷ்யா, சப்ளையை நிறுத்தினால் ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட இறக்குமதி மூலம் எரிவாயுவை பூர்த்தி செய்யும் நாடுகளை … Read more

ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி நிர்வாகி மறைவுக்கு ஆறுதல் கூற சென்ற அக்கட்சியின் எம்.எல்.ஏ.வை அடித்து விரட்டிய பொதுமக்கள்.!

ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி நிர்வாகி மறைவுக்கு ஆறுதல் கூற சென்ற அக்கட்சியின் எம்.எல்.ஏ.வை பொதுமக்கள் அடித்து விரட்டிய நிகழ்வு அரங்கேறியுள்ளது. ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி நிர்வாகியும், கோட்டப்பள்ளி கிராம தலைவருமான கஞ்சி பிரசாத் இரண்டு நாட்களுக்கு முன் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இவரது மறைவுக்கு அக்கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. தலாரி வெங்கட் ராவ் ஆறுதல் கூறுவதற்காக அவரது வீட்டுக்குச் சென்ற நிலையில், ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் நிர்வாகி கொலை சம்பவத்தில் எம்.எல்.ஏ வெங்கட்ராவிற்கும் தொடர்பு இருப்பதாக … Read more

அரை சதம் அடித்த கோலி ஸ்டெம்பை தெறிக்கவிட்ட ஷமி! இருந்தபோதிலும் செய்த நெகிழ்ச்சி செயலின் வீடியோ

ஐபிஎல் போட்டியில் அரை சதம் விளாசிய கோலி தோள் மீது கை போட்டு அவரை பாராட்டிய ஷமி வீடியோ வைரலாகியுள்ளது. ஐபிஎல் தொடரின் 43வது போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதிய நிலையில் குஜராத் அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில் பெங்களூர் நட்சத்திர வீரர் கோலி அரைசதம் விளாசினார். 15 இன்னிங்ஸ்களுக்கு பிறகு அவர் அடித்த முதல் அரை சதம் இதுவாகும். pic.twitter.com/irzCmfjqPe — Diving Slip (@SlipDiving) April 30, … Read more

மே 6ல் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகும்: வானிலை மையம்

சென்னை: மே 6ல் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகும் என்று வானிலை மையம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் மே 6ல் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகும்: வானிலை மையம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி. தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு தீவிர வெப்பநிலை தொடரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.