ஒடும் ரயிலில் இருந்து மகன்களை வீசிவிட்டு இறங்க முயன்ற பெண்.. தண்டவாளத்திற்கும் ரயிலுக்கும் சிக்காமல் ரயில்வே காவலர் மீட்பு.. சிசிடிவி வெளியீடு

ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்று தண்டவாளத்திற்கும், பிளாட்பாரத்திற்கும் இடையே விழ இருந்த பெண்ணை ரயில்வே காவலர் மீட்ட சம்பவத்தின் சிசிடிவி வெளியாகி உள்ளது. மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் ரயில் நிலையத்தில், ரயில் மாறி ஏறிய பெண் பின்னர் அதை உணர்ந்து ஓடும் ரயிலில் இருந்து தன் இரு மகன்களை பிளாட்பாரத்திற்கு வீசியுள்ளார். தொடர்ந்து கீழே இறங்க முயன்ற பெண் நிலை தடுமாறி தண்டவாளத்திற்கும் ரயிலுக்கும் இடையே விழ இருந்த நிலையில் அருகில் இருந்த ரயில்வே … Read more

இன்று திரிபுரா புதிய முதல்வர் மாணிக் சகா பதவி ஏற்பு

அகர்தலா இன்று திரிபுராவின் புதிய முதல்வராக மாணிக் சகா பதவி ஏற்கிறார். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் 25 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடைபெற்று வந்தது.  கடந்த 2018ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்தி பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 25 ஆண்டுக்கால ஆட்சி முடிவுக்கு வந்து  முதல்வராக பிப்லப் குமார் தேப் பதவி வகித்து வந்தார். திரிபுராவில் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் … Read more

நெல்லை அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விபத்து – 3 பேர் பலி என தகவல்

நெல்லை: நெல்லை பொன்னாக்குடி அருகே கல் குவாரி ஒன்று அமைந்துள்ளது. இங்கு தொழிலாளர்கள் நேற்று குவாரி பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதற்கிடையே, நேற்று இரவு கல் குவாரியில் இருந்த பாறை திடீரென சரிந்து விழுந்தது. இதில் 300 அடி ஆழ பள்ளத்தில் 6 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்து, தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இந்நிலையில், கல்குவாரி விபத்தில் 3 பேர் பலியாகினர் என மீட்கப்பட்ட தொழிலாளி கூறியதாக தகவல் வெளியானது. மேலும், … Read more

சரத்பவார் குறித்து அவதூறு கருத்து – மராத்தி நடிகை அதிரடி கைது

மும்பை: மராத்தி நடிகை கேதகி சிதாலே வேறு நபர் எழுதியது எனக்கூறி முகநூலில் சரத்பவார் குறித்து அவதூறு கருத்தைப் பதிவிட்டிருந்தார். அவரது பதிவில் ‘நீங்கள் பிராமணர்களை வெறுக்கிறீர்கள்’, ‘நரகம் உங்களுக்கு காத்து கொண்டு இருக்கிறது’ என தெரிவித்திருந்தார். இதற்கிடையே, நடிகையின் முகநூல் பதிவுக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக தானே, புனே உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் போலீசில் புகார் அளித்தனர். சரத்பவார் குறித்து அவதூறு பரப்பிய நடிகையை … Read more

சென்னை காசிமேட்டில் மீன்கள் விலை இரு மடங்கு உயர்வு

சென்னை: காசிமேட்டில் மீன்களின் வரத்து குறைவால் விலை அதிகரித்துள்ளது. வஞ்சிரம் ரூ.1,300, பண்ணை எறா – ரூ.150 முதல் ரூ.500 வரை, நண்டு – ரூ.300 முதல் ரூ.800 வரை விற்பனையாகிறது.

மான், மயில்களை காப்பாற்ற சென்ற 3 போலீசாரை சுட்டுக் கொன்ற வேட்டை கும்பல்

போபால்: மத்திய பிரதேசத்தில் மான்களை வேட்டையாடும் கும்பல், 3 போலீசாரை சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மத்திய பிரதேச மாநிலம், குணா மாவட்டத்தில் உள்ள வன பகுதியில் மான்கள், மயில்கள் அதிகளவில் வாழ்கின்றன.  அந்த பகுதியில் ஒரு கும்பல் மான்களை வேட்டையாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆரான்  போலீஸ் நிலையத்தை சேர்ந்த போலீசார் நேற்று அந்த பகுதிக்கு சென்றனர். அப்போது,  அடர்ந்த வனப் பகுதியில் மறைந்திருந்த  வேட்டை கும்பல், போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில், … Read more

கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா திடீர் தடை – ஜி7 நாடுகள் எதிர்ப்பு

கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்துள்ள நிலையில் அதற்கு மேற்கத்திய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. நாட்டில் விலைவாசி கடுமையாக அதிகரித்துள்ள நிலையில் அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்துள்ளது. ஏற்றுமதியை நிறுத்தி வைப்பது மூலம் அத்தியாவசிய உணவு தானியங்களில் ஒன்றான கோதுமை விலையை குறைக்க முடியும் என அரசு கருதுகிறது. இந்தாண்டில் ஒரு கோடி டன் கோதுமையை ஏற்றுமதி செய்ய இந்தியா திட்டமிட்டிருந்த நிலையில் திடீரென அந்த திட்டத்தை அரசு கைவிட்டுள்ளது. … Read more

உலகின் மிகப்பெரிய பாலம் செக் குடியரசில் திறப்பு| Dinamalar

பிராக் : செக் குடியரசில், உலகின் மிகப்பெரிய தொங்கு நடைபாலம், மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடான செக் குடியரசின் டோல்னி மோரோவா கிராமத்தில், ‘ரிசார்ட்’ எனப்படும், ஒரு சொகுசு விடுதி அமைந்துள்ளது. இங்கு, சுற்றுலா பயணியரை ஈர்க்கும் விதமாக, ஸ்லாம்னிக் மலையையும், கிலம் மலையையும் இணைக்கும் வகையில், பிரமாண்டமான தொங்கு நடைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.’ஸ்கை பிரிட்ஜ் – 721′ என, பெயரிடப்பட்டுள்ள இந்த நடைபாலம், 65 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. 312 அடி உயரத்தில், 2,365 … Read more

“முதன்மை இலக்கிலிருந்து விலகாமல் எதிர்பார்த்த இலக்கை அடைவதே ஒருமைப்பாட்டு இலக்காக இருக்க வேண்டும்”

“முதன்மை இலக்கிலிருந்து விலகாமல் எதிர்பார்த்த இலக்கை அடைவதே ஒருமைப்பாட்டு இலக்காக இருக்க வேண்டும்”. என்று  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.  புனித வெசாக் நோன்மதி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். புனித வெசாக் நோன்மதி தினச் செய்தி  மூன்று உன்னதமான நிகழ்வுகள் நடந்த மகத்தான வெசாக் நோன்மதி தினத்தை நினைவுகூர்ந்து, இலங்கை பெளத்த மக்கள் உட்பட உலகெங்கிலும் வாழும் பெளத்தர்கள் பூஜை வழிபாடுகள் மற்றும்  புண்ணிய கிரியைகளில் ஈடுபடுகின்றனர். புத்த பெருமான் போதித்த தம்மப் போதனைகள் … Read more