மாநில அளவிலான கலைநிகழ்ச்சி காரைக்கால் கல்லுாரி முதலிடம்

காரைக்கால், : மதுரையில் நடைபெற்ற மாநில அளவிலான கலைநிகழ்ச்சியில் காரைக்கால் வேளாண் கல்லுாரி மாணவர்கள் முதல் இடம் பிடித்தனர்.மதுரையில் கடந்த 11ம் தேதி மாநில அளவிலான கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 48க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில் இருந்து மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.காரைக்கால், நெடுங்காடு பண்டித ஜவகர்லால் நேரு வேளாண் கல்லுாரியில் பயிலும் 20 மாணவர்கள், பேராசிரியர் நடராஜன் தலைமையில் கலைநிகழ்ச்சியில் பங்கேற்றனர்.இதில் 34 போட்டிகளில் வேளாண் கல்லுாரி மாணவர்கள் முதல் இடம் பிடித்து கோப்பை வென்றனர்.போட்டியில் … Read more

பிரபாஸிற்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா

தமிழில் சுல்தான் படத்தில் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா, தற்போது வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தமிழ் தெலுங்கில் விஜய் நடிக்கும் 66 வது படத்தில் அவருக்கு ஜோடியாகி இருக்கிறார். மேலும் புஷ்பா படத்தை தொடர்ந்து ஹிந்தியில் மிஷன் மஜ்னு, குட் பை, அனிமல் போன்ற படங்களில் நடித்துவரும் ராஷ்மிகா மந்தனா, அடுத்தபடியாக பிரபாஸ் நடிக்கும் ஒரு படத்தில் கமிட் ஆகி இருப்பதாக டோலிவுட்டில் செய்திகள் வெளியாகியுள்ளன. ராதே ஷ்யாம் படத்தை அடுத்து ஆதிபுருஷ், சலார், பிராஜக்ட் கே போன்ற … Read more

நீலகிரி மாவட்டம்! மே 20 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.!

மே 20ஆம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் அம்ரித் அவர்கள் உள்ளூர் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார். கொரோனோ பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக நடைபெறாமல் இருந்த ஊட்டி மலர் கண்காட்சி இந்த வருடம் மே 20ஆம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை நடைபெற உள்ளது. நீலகிரியில் இந்த வருடம் சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்த வண்ணம் இருக்கின்றனர். சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி, ரோஜா பூங்காவில் ரோஜா … Read more

பெண்கள் பாதுகாப்பு வசதியுடன்500 அரசுப் பேருந்துகள் இயக்கம் – சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காக ‘நிர்பயா’ திட்டத்தின் கீழ் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிசிடிவி கேமரா, அவசர அழைப்பு பொத்தான் பொருத்தப்பட்ட 500 பேருந்துகளின் சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். போக்குவரத்துத் துறை சார்பில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பான பயணத்துக்காக ‘நிர்பயா’ பாதுகாப்பான நகரத் திட்டத்தின் கீழ், 2,500 மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் அவசர பொத்தான்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக சென்னை மாநகரப் … Read more

திரிபுரா முதல்வரை மாற்றியது ஏன்? – பின்னணி தகவல்கள்

அகர்தலா: திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேவ் நேற்று பதவியை ராஜினாமா செய்தார். அவருக்குப் பதிலாக மாநில பாஜக தலைவர் மாணிக் சாஹா புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் கடந்த 2018-ம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 60 தொகுதிகளில் பாஜக 36 இடங்களைக் கைப்பற்றியது. 25 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கட்சிக்கு 16 இடங்கள் மட்டுமே கிடைத்தன. இதைத் தொடர்ந்து திரிபுராவின் 10-வது … Read more

அமரகீர்த்தி அத்துகோரளவின் மரணம் தொடர்பில் கேள்வியெழுப்பியுள்ள நாமல் ராஜபக்ச!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள தற்கொலை செய்து கொண்டதாக ஊடகங்களில் வெளியான ஆரம்பக் கூற்றுக்கள் தொடர்பில் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த திங்கட்கிழமை நிட்டம்புவவில் இடம்பெற்ற வன்முறையின் போது அமரகீர்த்தி அத்துகோரள தற்கொலை செய்துகொண்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. எவ்வாறாயினும், அமரகீர்த்தி அத்துகோரள கொலை செய்யப்பட்டதாக சட்ட வைத்திய அறிக்கைகள் தெரிவித்துள்ளன. இந்நிலையிலேயே, அமரகீர்த்தி அத்துகோரளவின் மரணம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கேள்வியெழுப்பியுள்ளார். இது குறித்து … Read more

இலங்கைக்கு உடனடியாக 65,000 டன் யூரியா வழங்குவதாக இந்தியா உறுதி

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு உடனடியாக 65 ஆயிரம் டன் யூரியாவை வழங்க உள்ளதாக இந்தியா உறுதியளித்துள்ளது. டெல்லியில் உள்ள இலங்கைத் தூதரக அதிகாரி இந்திய வேளாண்துறைச் செயலரைச் சந்தித்து யூரியா வழங்கும்படி கேட்டுக்கொண்டார். அதையடுத்து நடப்புப் பருவத்துக்குத் தேவையான அளவு யூரியாவை இந்தியா வழங்க உள்ளதாக இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் யூரியா ஏற்றுமதிக்குத் தடை உள்ளபோதும், இலங்கைக்கு வழங்க முன்வந்துள்ளதாகக் கூறியுள்ளது.  Source link

தெலுங்கானா மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்கும்- அமித் ஷா நம்பிக்கை

மகேஸ்வரம்: தெலுங்கானா மாநிலத்தில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘பிரஜா சங்க்ராம யாத்ரா’ நிறைவு நாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று மத்திய உள்துறை மந்திரி  அமித் ஷா பேசியதாவது: தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்ட போது நீலு (தண்ணீர்), நிதுலு (நிதி) மற்றும் நியமகளு (வேலைகள்) என்று கே.சி.ஆர் (கே.சந்திரசேகர ராவ்) வாக்குறுதி அளித்ததை தெலுங்கானா மக்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.  அதில் ஏதேனும் நிறைவேற்றப்பட்டுள்ளதா?  அந்த வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றுவோம். தண்ணீர், நிதி, வேலை கொடுப்போம். விவசாய கடன்களை தள்ளுபடி … Read more

நடப்பாண்டில் இதுவரை 117 குற்றவாளிகள் குண்டாசில் கைது: கமிஷனர் சங்கர் ஜிவால் தகவல்

சென்னை: நடப்பாண்டில் இதுவரை 117 குற்றவாளிகள் குண்டாசில் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:சென்னை பெருநகரில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்ய பல்வேறு  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில்,  கடந்த 1ம்  முதல் நேற்று வரை கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்ட 82  குற்றவாளிகள், திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பணமோசடி குற்றங்களில் … Read more

17 கோடி பாக்கியை தராவிட்டால் முதல்வரின் பாதுகாப்புக்கு வாகனம் அனுப்ப முடியாது: ஆந்திர போக்குவரத்து துறை அதிரடி

திருமலை: ஆந்திர மாநில அரசுக்கு அம்மாநில போக்குவரத்து துறை நேற்று முன்தினம் கடிதம் அனுப்பியுள்ளது. அதில், ‘முதல்வர் மற்றும் முக்கிய பிரமுகர்களின் சுற்றுப்பயணம் மற்றும் பாதுகாப்புக்கு வழங்கப்படும் வாகனங்களுக்கு ₹17 கோடியே 5 லட்சம் மாநில அரசு செலுத்த வேண்டி உள்ளது. இந்த தொகை கடந்த 3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இதனை உடனே செலுத்தாவிட்டால் முதல்வர், முக்கிய பிரமுகர்களின் சுற்றுப் பயணத்திற்கு வாகனங்களை வழங்க முடியாது. முதல்வரின் மாவட்ட சுற்றுப் பயணங்கள் விரைவில் தொடங்க உள்ளது. … Read more